herzindagi
tips to face glowing

Skin Care Secrets: தினமும் மறக்காமல் இத செய்திடுங்க..நிச்சயம் முகம் எப்போதுமே பளபளப்பாக இருக்கும்!

<span style="text-align: justify;">இயற்கையான முறையில் பளபளப்பான சருமத்தை நீங்கள் பெற வேண்டும் என்றால் உங்களது உணவு முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.&nbsp;</span>
Editorial
Updated:- 2024-02-07, 16:30 IST

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்”. ஆம் மனதில் எந்த கஷ்டங்கள் இருந்தாலும் அதை அப்படியே வெளிக்காட்டுவதில் முகம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பெண்களின் அழகை மிகைப்படுத்திக் காட்டுவது அவர்களின் முக அழகு. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சருமத்தை எப்போதும் அழகாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களில் ஒருவரா நீங்கள்? இதற்கென்று அழகு நிலையங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. உங்களது வாழ்க்கை முறையில் இந்த விஷயங்களைக் கடைப்பிடித்தாலே சருமத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க முடியும்.

skin care secrets

சரும பராமரிப்பிற்கான சிம்பிள் டிப்ஸ்:  

தண்ணீர் பருகுதல்:

குளிர்காலம், வெயில் காலம் போன்ற பருவ காலங்களில் சருமம் வறண்டு காணப்படும். இதிலிருந்து தப்பிக்க நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது தாகத்தைத் தணிப்பது மட்டுமில்லாமல் உங்களது சருமத்தை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்க உதவும். மேலும் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி சருமத்தை எப்போதும் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.  

மேலும் படிங்க: முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க வேண்டுமா? வீட்டிலேயே இந்த பேசியல் பண்ணிப்பாருங்க!

சத்தான உணவுகள்:

அடுத்தப்படியாக இயற்கையான முறையில் பளபளப்பான சருமத்தை நீங்கள் பெற வேண்டும் என்றால் உங்களது உணவு முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். சருமத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கும் விதமாக பழங்கள், காய்கறிகள், புரத சத்துக்கள் நிறைந்த உணவுகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் சருமத்தை  பொலிவுடன் வைத்திருக்க உதவும்.

drink water for skin glowing

தூக்கம் அவசியம்:

ஆரோக்கியத்துடன் கூடிய சரும பளபளப்பிற்கு நல்ல தூக்கம் அவசியம். குறைந்தது 8 மணி நேரமாவது நல்ல தூக்கம் வேண்டும். நீங்கள் தூங்கும் போது, உங்களது உடல் சரும செல்களை சரி செய்து சருமம் பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது. தூக்கமின்மை காரணமாக தான் கருவளையங்கள், சருமம் பொலிவின்மை, தோல் சுருக்கங்கள் ஏற்படும் என்பதால் தினமும் 8 மணி நேரமாவது தூக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தூங்குவதற்கு முன்னதாக முகங்களை நன்றாக கழுவிக் கொள்ளவும். 

உடற்பயிற்சி செய்யுங்கள்:

தினமும் முடிந்த அளவிற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது உங்களது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் உதவியாக உள்ளது. உடற்பயிற்சிகள் மேற்கொள்வது இரத்த ஓட்டத்தை அதிகரித்து சருமத்தில் ஆரோக்கியமான செல்களை வளர செய்கிறது. இதோடு மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.

சரும பராமரிப்பு பொருட்கள்:

பெண்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது கற்றாழை, எண்ணெய், மஞ்சள், சந்தனம், தயிர் போன்ற கெமிக்கல் இல்லாத இயற்கையான சரும பராமரிப்புப் பொருள்களைப் பயன்படுத்துவது நல்லது. இவற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

சன்ஸ்கிரீன் பயன்படுத்துதல்:

உங்கள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க வெளியில் செல்லும் போது எப்போதும் சன்ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும்.  இது உங்களது சருமத்தைப் பாதுகாக்க வைத்திருக்க உதவும்.

 skin tips

மேலும் படிங்க:தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் பழங்களின் லிஸ்ட்!

இது போன்ற எளிய நடைமுறைகளை உங்களது வாழ்க்கை முறையில் பின்பற்றினாலே சருமத்தை எப்போதும் ஜொலிப்பாக வைத்திருக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]