உடலும், மனமும் சோர்வாக இருக்கும் போது நம்மில் பலருக்கு சூடாக ஒரு கப் குடித்தால் போதும் என்ற மனநிலை நிச்சயம் இருக்கும். குளிர்காலத்துல மட்டுமல்ல, வெயில்காலங்களிலும் கூட காபி குடித்தால் உற்சாகமான மனநிலையை அடைய முடியும் என காபி ப்ரியர்கள் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள் அல்லவா? இதுபோன்று தான் சருமமும் சோர்வாக இருக்கும் போது காபி பேஸ் மாஸ்க் உங்களுக்கு சிறந்த தேர்வாக அமையும். காபி தூள் எப்படி சருமத்தைப் பொலிவுடன் ஆக்கும் என்ற சந்தேகத்திற்கானப் பதில் இங்கே. இதோ எப்படி சருமத்தைப் புத்துணர்ச்சியாக்க காபி தூளைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: சுட்டெரிக்கும் வெயில்; கண்களைப் பாதுகாக்க உதவும் டிப்ஸ்கள்!
பெண்கள் வசீகரமான தோற்றத்தைப் பெற வேண்டும் என்றால் பல அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவோடு வீட்டில் இருக்கும் காபி தூளோடு அன்றாட உபயோகிக்கும் சில சமையல் பொருள்களைக் கொண்டு அழகாக்கிக் கொள்ள முடியும்.
எண்ணெய் பசை மற்றும் முக பருக்களில் பெண்களின் முகம் வசீகரம் இழந்துக் காணப்படும். இதற்கு காபி தூளுடன் மஞ்சள் சேர்த்து செய்யப்படும் பேஸ் மாஸ்க் உபயோகமாக இருக்கும். மஞ்சளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் முகப்பருக்களை எதிர்த்துப் போராட உதவியாக உள்ளது.
சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும், முகத்தைப் பொலிவுடன் வைத்திருக்கவும் காபி தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்யவும். வாரத்திற்கு ஒருமுறையாவது இந்த பேஸ் மாஸ்க் உபயோகிக்கவும். தேனில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க உதவியாக இருக்கும்.
பெண்கள் சருமத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்றால் காபி தூள் மற்றும் கடலை மாவை தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் தினமும் அப்ளை செய்ய வேண்டும். பின்னர் 30 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவினால் போதும் முகம் ஜொலிப்புடன் இருக்கும். குறிப்பாக கடலை மாவில் உள்ள துத்தநாகம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பாக்டீரிய எதிர்ப்புப் பண்புகள் உள்ளதால் சருமத்துளைகளில் அடைந்துள்ள அழுக்குகளை நீக்க உதவுகிறது.
மேலும் படிக்க: இளமையான தோற்றத் பெற வேண்டுமா? மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய் பேஸ் மாஸ்க்!
முகத்தில் உள்ள கருமையான திட்டுகள், முகப்பருக்கள் மறைந்து பிரகாசமாக ஜொலிக்க வேண்டும் என்றால் பூசணிக்காய் மற்றும் காபி தூளை நன்கு அரைத்து முகத்தில் தடவிக்கொள்ளவும். . பூசணிக்காயில் உள்ள ஆல்பா ஹைட்ராக்சி அமிலங்கள் அவை சருமத்தை பிரகாசமாக்க உதவியாக உள்ளது.
Image Source- Google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]