குளிர்காலத்துக்கு ஏற்ற சூப்பர் ஃபேஸ் மாஸ்க்குகள்!!

குளிர்காலத்தில் சரும வறட்சி நீங்கி, முகம் பளபளப்பாக இருக்க இந்த ஃபேஸ் மாஸ்க்குகளை பயன்படுத்துங்கள். 

face mask night

குளிர்காலத்தில் குளிர்ந்த காற்று வீசுவதால் சருமத்தில் வறட்சி ஏற்படுகிறது. அதே போல் இந்த சீசனில் தண்ணீர் குடிக்கும் அளவும் குறைவதால் சருமம் விரைவில் வறட்சியடைந்து பொலிவிழந்து காட்சியளிக்கிறது. எனவே, குளிர்காலத்தில் சருமத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்வது மிக மிக அவசியம். அதற்கு ஜெல் வகையான ஃபேஸ் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம். இந்த ஃபேஸ் மாஸ்க்கை நீங்கள் வீட்டிலேயே தயார் செய்யலாம்.

எனவே, குளிர்காலத்தில் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும் ஜெல் வகையான ஃபேஸ் மாஸ்க்குகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கற்றாழை ஜெல் ஃபேஸ் மாஸ்க்

தேவையான பொருட்கள்

  • கற்றாழை ஜெல் - 1 டீஸ்பூன்
  • வைட்டமின்-E காப்ஸ்யூல் - 1
  • வெள்ளரிக்காய் சாறு - 1 டீஸ்பூன்

face mask

பயன்படுத்தும் முறை

  • ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல், வைட்டமின்-E கேப்ஸ்யூல் மற்றும் வெள்ளரிக்காய் சாறு ஆகியவற்றை சேர்க்கவும்.
  • கற்றாழை ஜெல்லை கடைகளிலும் வாங்கி பயன்படுத்தலாம். அல்லது வீட்டில் கற்றாழை செடி இருந்தால் அதில் இருந்து ஃபிரஷாக எடுத்து கொள்ளலாம்.
  • அதற்கு, கற்றாழையை தண்ணீரில் போடவும். அதிலிருக்கும் மஞ்சள் பகுதி வரை வழித்து எடுக்காமல் மேலோட்டமாக ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ளவும்.
  • பின்பு, இந்த கலவையை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே விடவும். காய்ந்ததும் முகத்தை தண்ணீரில் கழுவவும்.
  • இந்த ஜெல்லை வாரத்திற்கு 3 முதல் 4 முறை முகத்தில் தடவி வந்தால், ஒரு தனித்துவமான பொலிவு ஏற்பட்டு சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.

இதுவும் உதவலாம். பளபளப்பான சருமத்தை பெற உதவும் கிரீன் டீ இலை

ரோஜா ஜெல் ஃபேஸ் மாஸ்க்

தேவையான பொருட்கள்

  • ரோஜா இதழ்கள் - 1 கப்
  • கற்றாழை ஜெல் - 1 டீஸ்பூன்
  • ரோஸ் வாட்டர் – 1 டீஸ்பூன்
  • எலுமிச்சை எண்ணெய் – 2 சொட்டு

பயன்படுத்தும் முறை

  • முதலில் ரோஜா இதழ்களில் இருந்து சாறை மட்டும் பிழிந்து தனியாக எடுத்து கொள்ளவும். முடிந்த வரை ஃபிரஷான ரோஜா இதழ்களை பயன்படுத்தவும்.
  • அதன் பிறகு, கற்றாழை ஜெல், ரோஜா சாறு, சிறிதளவு தேன் மற்றும் எலுமிச்சை எண்ணெய் ஆகியவற்றை கண்ணாடி கிண்ணத்தில் ஒன்றாக சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
  • பின்பு, இந்த கலவையை இரவு தூங்க செல்வதற்கு முன் முகத்தில் தடவவும்.
  • வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஃபேஷியல் ஜெல் மாஸ்க் சருமத்தை ஆழமாக சுத்தம் செய்து, தேவையான ஊட்டச்சத்தை அளித்து உலர்ந்த சருமத்தை சரிசெய்கிறது. ரோஜா மற்றும் தேன் இரண்டும் இயற்கையான மாய்ஸ்சரைசர்கள் ஆகும். இதனால் முகத்திற்கு ஆழமான ஈரப்பதம் கிடைக்கிறது.
  • இரவில் மேக்கப்பை நீக்கிய பிறகு இந்த ஜெல் மாஸ்க்கை பயன்படுத்தலாம். ஏனெனில், இதில் வைட்டமின்-E ஊட்டச்சத்து உள்ளது. இதை இரவில் பயன்படுத்தும் போது நல்ல பலன் கிடைக்கும்.

beauty skin

பப்பாளி ஜெல் ஃபேஸ் மாஸ்க்

தேவையான பொருட்கள்

  • பப்பாளி பழத்தின் சதை பகுதி – 1 டீஸ்பூன்
  • கற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன்
  • ரோஸ் வாட்டர் – 1 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை

  • பப்பாளியின் சதை பகுதியை ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். முடிந்த வரை நன்கு பழுத்த பப்பாளியை எடுத்து கொள்வது நல்ல பலனை தரும்.
  • பின்பு, இதில் கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டரை கலந்து முகத்தில் தடவவும்.
  • 15 முதல் 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவவும். பின்னர், சரும வகைக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரை முகத்தில் பூசவும்.
  • இந்த ஃபேஷியல் ஜெல் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முதல் 3 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இந்த ஃபேஸ் ஜெல் மாஸ்க் மிகச் சிறந்த தேர்வு.
  • இந்த மாஸ்க் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது மட்டுமில்லாமல் சருமத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது.

இதுவும் உதவலாம்.எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் பேக்


winter skin care


குறிப்பு: இங்கே குறிப்பிடப்பட்ட ஜெல் வகையான ஃபேஸ் மாஸ்க்குகளை பயன்படுத்துவதற்கு முன் பேட்ச் டெஸ்ட் செய்வது அவசியம்.

எனவே, நீங்களும் இந்த ஜெல் மாஸ்க்குகளை பயன்படுத்தி குளிர்காலத்தில் சருமத்தை பராமரிக்கலாம். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP