நாம் அனைவரும் நீண்ட மற்றும் அடர்த்தியான முடியை விரும்புகிறோம். அதனால்தான் நாம் சில நேரங்களில் விலையுயர்ந்த சிகிச்சைகளை பாலருக்குச் சென்று எடுத்துக்கொள்கிறோம் . ஆனால் சிகிச்சையின் போது எந்தப் பொருளைப் பயன்படுத்தினாலும் அதன் தாக்கம் சில நாட்களுக்கு மட்டுமே முடியில் தெரியும். அதன் பிறகு முடி ஊட்டச்சத்தை இழக்கத் தொடங்குகிறது. இதுபோன்ற நிலைகளில் முடி உதிர்வதைத் தடுக்க படிகாரத்தைப் பயன்படுத்துங்கள். படிகாரம் சருமத்திற்கு மட்டுமின்றி கூந்தலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. படிகார கற்கலை முயற்சி செய்த பிறகு உங்கள் கூந்தலில் நடக்கும் மாற்றத்தை உணர்வீர்கள்.
தலைமுடிக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது வழக்கத்தில் இருக்கும் ஒன்று. இது தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது, கூந்தலுக்கு சிறந்த தேப்வாக எண்ணெய் இருக்கிறது. இதில் கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் முடியை நீண்ட நேரம் பளபளப்பாக வைத்திருக்கும். இதனை உச்சந்தலையில் தடவினால் முடி வலுவடையும். மறுபுறம் படிகாரத்தின் பயன்பாடு முடி உதிர்வைக் குறைக்கிறது. இதில் ஆண்டிசெப்டிக் பண்புகள் உள்ளதால் முடியை பலப்படுத்த உதவுகிறது. இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து தடவினால் முடி உதிர்தல் பிரச்சனை குறையும்.
மேலும் படிக்க: பார்லருக்கு போகாமல் 10 ரூபாயில் விலையுயர்ந்த ஹேர் ஸ்பாவை வீட்டிலேயே செய்யலாம்
மேலும் படிக்க: பலவித சேதங்களை சந்தித்து மோசமாக இருக்கும் கூந்தலை இந்த ஷாம்பூவை கொண்டு குணப்படுத்தலாம்
குறிப்பு: உங்கள் தலைமுடிக்கு எதையும் பயன்படுத்துவதற்கு முன் ஒரு நிபுணரின் ஆலோசனையைப் பெறவும். மேலும் உங்கள் தலைமுடி அமைப்பில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]