பருவம் எதுவாக இருந்தாலும் சருமத்தை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம். சந்தையில் நல்ல மற்றும் விலையுயர்ந்த சரும பராமரிப்பு தயாரிப்புகளைக் காணலாம் ஆனால் இந்த தயாரிப்புகளின் நன்மைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. நீங்கள் அவற்றைப் பயன்படுத்தினால் மட்டுமே பயனடைவீர்கள். அவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்தியவுடன் உங்கள் சருமத்தில் மீண்டும் அதே பிரச்சினைகள் ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இயற்கை வைத்தியத்தின் உதவியைப் பெறலாம்.
மேலும் படிக்க: கோடையில் ஏற்படும் அடர்த்தியான அக்குள் கருமையை நீக்க சிம்பிளான வீட்டு வைத்தியம்
குறிப்பாக உங்கள் சருமத்தில் கறைகள் மற்றும் கருமையான நிறம் இருந்தால் சார்க்கோல் உதவியுடன் ஒளிரும் மற்றும் களங்கமற்ற சருமத்தைப் பெறலாம். இது குறித்து அழகு நிபுணரான பூனம் சுக்கி கூறியுள்ளார். அவர் கூறுகையில் சருமம் ஆழமாக சுத்தம் செய்ய, நச்சுத்தன்மையை நீக்குவது மிகவும் முக்கியம். சார்க்கோல் கரி உங்கள் சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துகிறது. நீங்கள் அதை வெவ்வேறு வழிகளில் சருமத்தில் பயன்படுத்தலாம். அவற்றை உபயோகிக்கும் முறைகள் பற்றி பார்க்கலாம்.
ஒரு பாத்திரத்தில் சார்க்கோல், முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் போன்றவற்றைக் கலக்கவும். இப்போது இந்தக் கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவவும். முல்தானி மெட்டி முகத்தை உலர்த்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் சருமம் ஏற்கனவே வறண்டிருந்தால் இந்த ஃபேஸ் பேக்கில் சிறிது தேனைக் கலக்கவும்.
சார்க்கோல் தூள், கற்றாழை ஜெல் மற்றும் அரிசி மாவு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து இந்த கலவையை நன்கு கலக்கவும். பின் அதனை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடம் கழித்து மெதுவாகத் தேய்த்து முகத்தை சுத்தம் செய்யவும். உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் பிரச்சனை இருந்தால் முகத்தில் ஃபேஸ் பேக் பயன்படுத்தும்போது மெல்லிய காட்டன் துணியால் தடவி முகத்தில் போடலாம். பின்னர் மெதுவாக இந்த துணியை அகற்றவும். இவ்வாறு செய்வதன் மூலம் கரும்புள்ளிகளும் நீங்கும்.
சார்க்கோல், கார்ன்ஃப்ளார் மற்றும் தேங்காய் தண்ணீர் கலந்து ஃபேஸ் பேக் தயார் செய்து, பின் முகத்தில் தடவவும். 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் முகத்தைத் தண்ணீரில் கழுவலாம். உங்கள் சருமம் வறண்டு இருந்தால் இந்த கலவையில் சிறிது தேன் கலந்து கொள்ளவும்.
மேலும் படிக்க: ரோஜா இதழ்களை போல் முகம் ஜொலிக்க இரவில் செய்யவேண்டிய அழகு குறிப்புகள்!
முக்கிய குறிப்பு: உங்கள் சருமம் உணர்திறன் உடையதாக இருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள எந்தவொரு வைத்தியத்தையும் முயற்சிக்கும் முன் ஒரு முறை பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]