herzindagi
underarm  card

Dark Underarms: 7 நாட்களில் அக்குள் கருமை நீங்க இதை முயற்சி செய்யுங்கள்!!

அக்குள் கருமையாக இருப்பதால், பெண்கள் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிய பயப்படுகிறார்கள்.
Editorial
Updated:- 2023-08-12, 16:05 IST

அக்குள் கருமை பார்ப்பதர்க்கு போசமாக இருந்தாலும், பெண்கள் தங்களுக்குப் பிடித்தமான ஆடையை அணிவதில் கூடி அது ஒரு அருவெறுப்பு வர செய்கிறது. பெரும்பாலும் பெண்கள் இந்த பிரச்சனையை எதிர்த்து கிரீம்கள் பயன்படுத்துகின்றனர், ஆனால் அது தீங்கை விலைவிக்கவும் வாய்ப்ப்ய்கள் அதிகம். அத்தகைய சூழ்நிலையில் சில வீட்டு வைத்தியங்களின் உதவியுடன் கருப்பு அக்குள்களை சுத்தம் செய்யலாம். 

உருளைக்கிழங்கு பயன்ங்கள்

potato underarm

வைட்டமின் சி உருளைக்கிழங்கில் உள்ளதால் சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. இது தவிர உருளைக்கிழங்கு ஒரு ப்ளீச்சிங் ஏஜென்டாக செயல்படுகிறது. இதன் காரணமாக சருமத்தின் நிறம் மாறும்.

எப்படி செய்வதென்று பார்க்கலாம் 

  • உருளைக்கிழங்கை நன்கு கழுவிய பின் பீலர் உதவியுடன் தோல்களை உரித்து எடுக்கவும்
  • பின் grater உதவியுடன் உருளைக்கிழங்கை திருவி எடுத்துக்கொள்ளுங்கள்.
  • பின் சாற்றை பிழிந்து தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

உபயோகிக்கும் முறை

  • துருவிய உருளைக்கிழங்கு சாற்றை அக்குள் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும்.
  • 10 நிமிடம் கழித்து நன்றாக குளிக்கவும்.

 

இதை தினமும் பயன்படுத்தினால் ஒரே வாரத்தில் பலன் தெரியும். உருளைக்கிழங்கு சருமத்தில் பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. உருளைக்கிழங்கு பளபளப்பதற்காக மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

ஆரஞ்சு தோலால் அக்குள்களை சுத்தம் செய்யவும்

orange powder in undrarm

தேவையான பொருட்கள்

  • 1 டீஸ்பூன் பால்
  • 1 தேக்கரண்டி ரோஸ் வாட்டர்
  • 1 தேக்கரண்டி ஆரஞ்சு தோல் தூள்

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் 1 தேக்கரண்டி பால், 1 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் மற்றும் 1 தேக்கரண்டி ஆரஞ்சு தோல் தூள் சேர்க்கவும்.
  • இப்போது இவை அனைத்தையும் கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும்.
  • பேஸ்ட் கரடுமுரடாக இருந்தால் பலன் அதிகம்.

உபயோகிக்கும் முறை

  • இந்த ஸ்க்ரப்பை அக்குள்களில் தடவி லேசான கைகளால் தேய்க்கவும்.
  • 15-20 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் அக்குள்களை சுத்தம் செய்யவும்.
  • வாரத்திற்கு 2-3 முறை இந்த ஸ்க்ரப் பயன்படுத்தினால் அக்குள் கருமை குறையும்.

 

 தோலில் எதையும் பயன்படுத்துவதற்கு முன் ஒரு பேக் டெஸ்ட் செய்யுங்கள்.

 

குறிப்புகள்: ரசாயன அடிப்படையிலான முடி அகற்றும் கிரீம்களை அக்குள் பகுதியில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். அதிகப்படியான கிரீம் பயன்படுத்தும் பெண்களின் அக்குள் மிகவும் கருமையாகிவிடும். இதனால் பல நேரங்களில் பெண்கள் தங்களுக்கு விருப்பமான ஆடைகளை அணிய முடியாமல் தவிக்கின்றனர். மாறாக வேக்சிங் செய்து கொள்ளலாம். வேக்சிங் செய்வதால் முடி வளர்ச்சி குறைவது மட்டுமின்றி கருமையும் ஏற்படாது.

எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

 

Image Credit- Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]