காலையில் பெண்கள் கோலம் போடுவதால் உடல் ரீதியாகக் கிடைக்கும் நன்மைகள்


Abinaya Narayanan
16-07-2025, 22:44 IST
gbsfwqac.top

இரத்த ஓட்டம் சீராக இருக்கும்

    காலையில் பெண்கள் குனிந்து, நிமிர்ந்து கோலம் போடுவதால், இரவு முழுவதும் அசைவு குறைவாக உடல் இருப்பதால் இரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். இப்படி செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

Image Credit : freepik

சிந்தனை ஒருநிலைப்படுத்தப்படும்

    புள்ளி வைத்து கோலம் போடுவதால், ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளியில் இணைப்பதால் சிந்தனைகள் ஒருநிலையாக செயல்பட உதவுகிறது. இதன் காரணமாக சிந்தனை சிதறல்களைக் குறைக்க சிறந்த பயிற்சியாக கோலம் இருக்கிறது.

Image Credit : freepik

கண்பார்வை மேம்படுகிறது

    கோலம் போட புள்ளிகள் வைப்பதால், உங்கள் கண் பார்வை கூர்மையாக செயல்பட உதவியாக இருக்கிறது. உங்கள் கண்களை கூர்மையாக வைத்திருக்க சிறந்த பயிற்சியாக இருக்கும்.

Image Credit : freepik

கிருமிகள் அழிக்க உதவும்

    வீட்டு வாசலில் கோலம் போடுவதற்கு முன் மாட்டு சாணத்தால் அல்லது மஞ்சள் கலந்த தண்ணீரால் சுத்தம் செய்வதால் கிருமிகள் அழியும். வாசலும் சுத்தமாக இருக்கும்.

Image Credit : freepik

நரம்பு மண்டலங்களுக்கு நல்லது

    விரல்களால் மாவை பிடித்து கோலம் போடுவதால் விரல்களில் நரம்புகள் சீராக இருக்க உதவும் மற்றும் நமது நரம்பு மண்டலங்கள் நன்றாக செயல்பட தொடங்குகிறது.

Image Credit : freepik

கற்பனை சத்து அதிகரிக்கும்

    தினமும் வித விதமாக கோலம் போடுவதால், அதை அழகுப்படுத்த எடுக்கும் முயற்சிகளால் நமது கற்பனை சத்திகள் அதிகரிக்க செய்கிறது.

Image Credit : freepik