மகளிர் தினத்தன்று ஊர் சுற்றி பார்க்க தமிழக அரசால் ஸ்பெஷல் ஏற்பாடு


Alagar Raj AP
04-03-2025, 14:55 IST
gbsfwqac.top

மகளிர் தின டூர்

    மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில் பெண்களுக்காக ஸ்பெஷல் டூரை தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

நேரம்

    மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி காலை 8.30 மணிக்கு வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளாகத்தில் இருந்து பயணம் தொடங்குகிறது.

பயணம்

    சென்னையில் தொடங்கும் இந்த டூர் பேருந்தில் மகாபலிபுரம், முதலியார் குப்பம் ஆகிய இடங்களுக்கு செல்கிறது.

செல்லும் இடங்கள்

    இதில் மகாபலிபுரத்தில் உள்ள நினைவுச்சின்னங்களை சுற்றி காண்பிக்க உள்ளனர். அதன் பின் முதலியார் குப்பத்தில் உள்ள படகு சவாரிக்கு அழைத்து செல்கின்றனர்.

உணவுகள்

    மகளிருக்காக மதிய உணவும் மாலை வேளையில் தேநீரும் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விளையாட்டு போட்டிகள்

    இதற்கிடையே, பெண்களுக்கான சில விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டணம்

    இந்த மகளிர் தின டூருக்கு ஒரு நபருக்கு மொத்த கட்டணமாக ரூ.3,150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. www.ttdconline.com என்ற தளத்தில் இந்த புக் செய்யலாம்.