மழைக்காலத்தில் ஜில்லுனு ஒரு சுற்றுலா; கூர்க் போலாமா? இந்த இடங்களை மிஸ் பண்ணாதீங்க

கர்நாடகாவில் உள்ள கொடகு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகான சுற்றுலா தளம் கூர்க். இங்கு சுற்றி பார்க்க சிறந்த நேரம் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை மழைக்காலம்.  
image

இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படும் கூர்க் கர்நாடகாவில் கொடகு மாவட்டத்தில் உள்ள ஒரு இயற்கை அழகு மிக்க குளிர் பிரதேசம். இங்கு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை மான்சூன் மழைக்காலத்தில் சுற்றுலா செல்வது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும். நீங்கள் தமிழ்நாட்டில் எந்த ஊரில் இருந்தாலும் ட்ரெயின் அல்லது பஸ் எடுத்து மைசூர் வந்து விடுங்கள். அங்கு இருந்து மடிக்கேரி (கூர்க்) செல்ல பல பஸ்களும் ஜீப்கள் கூட கிடைக்கும். இங்கு பச்சைப் பசேலென்ற மலைகள், பனித்துளிகள் நிறைந்த காற்று, அருவிகள் மற்றும் காபி தோட்டங்கள் அனைத்தும் மழைக்காலத்தில் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும். அந்த வரிசையில் மழைக்காலத்தில் கூர்க் சுற்றுலா சென்றால் என்ன செய்ய வேண்டும் என்று இங்கு பார்ப்போம்.

அபே அருவி:


மழைக்காலத்தில் அபே அருவி பிரமிக்க வைக்கும் காட்சிகள் கொண்டு இருக்கும். இந்த அருவி சுற்றியுள்ள பசுமையான காடுகளுக்கு நடுவே அழகாக விழுகிறது. மழை நீர் அதிகமாக இருப்பதால், அருவியின் ஒலி மற்றும் தோற்றம் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும். இந்த அருவியில் குளிக்க முடியாது, ஆனால் அருகில் நின்று அதன் அழகை ரசிக்கலாம், அழாகான புகைப்படங்கள் எடுத்து கொள்ளலாம்.

abey falls

தலைக்காவேரி:


காவேரி நதி பிறந்த புனித இடம் தான் இந்த தலைக்காவேரி. மழைக்காலத்தில் இங்குள்ள பிரம்மகுண்டம் நீரால் நிரம்பி இருக்கும். இந்த இடம் அமைதியான சூழலுடன் கூடியது. இங்கு வரும் பக்தர்கள் மழையின் சாரல் மற்றும் குளிர்ந்த காற்றை அனுபவிப்பார்கள். குறிப்பாக இங்கு செல்லும் போது மாடர்ன் ட்ரெஸ்கள் அணிந்து செல்ல அனுமதி இல்லை.

talakaveri

ராஜா சீட்:


கூர்கில் ராஜா சீட் ஒரு பிரபலமான இடம். மழைக்காலத்தில் இங்கு பச்சைப் புல்வெளிகள் மேகங்களால் மூடப்பட்டிருக்கும். இங்கிருந்து நாம் பார்க்கும் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் தோற்றம் மிகவும் அழகாக இருக்கும்.

raja seat

நிசர்கதாமா:


நிசர்கதாமா காவேரி நதியில் உருவாக்கப்பட்ட ஒரு தீவு. கொடகு மாவட்டத்தில் குஷால் நகர் என்ற பகுதியில் தான் இந்த நிசர்கதாமா அமைந்துள்ளது. இங்கு மழைக்காலத்தில் மேகங்கள் தரையைத் தொடும் அளவுக்கு கீழே வரும். இந்த இடத்தில் நின்றால், மேகங்களுக்கு நடுவே நடப்பது போன்ற உணர்வு நமக்கு கிடைக்கும். இங்கு சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் காண்பது ஒரு அற்புதமான அனுபவம்.

மண்டல்பட்டி வியூ பாயின்ட்:


மண்டல்பட்டி ஒரு இயற்கை சுற்றுலா ஈர்ப்பு. மடிக்கேரியில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இந்த மண்டல்பட்டி இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ட்ரெக்கிங் இடம். மண்டல்பட்டி என்றால் மேகங்கள் நடுவில் இருக்கும் தலை என்று அர்த்தம். இந்த மலை பகுதிக்கு ஜீப் சபாரியில் செல்ல வேண்டும். மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்தின் போது சூரிய கதிர்களின் வண்ணங்களை வானில் பார்க்கும் காட்சி அற்புதமாக இருக்கும்.

mandalpatti-trek-coorg-tourism-entry-fee-timings-holidays-reviews-header

கூர்க் உணவுகளை ருசிக்கவும்:


கூர்க் தனித்துவமான உணவுகளுக்கு பெயர் பெற்றது. மழைக்காலத்தில் சூடான கூர்க் காபி, பண்டி குருமா (பன்றி இறைச்சி வறுவல்), கடைசாலி (ஒரு வகை அப்பம்) மற்றும் அக்கி ரொட்டி போன்ற உணவுகளை ருசித்து பாருங்கள்.

நகர வாழ்வில் இருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்க விரும்பினால் மழைக்காலத்தில் கூர்க் செல்வது ஒரு மாயாஜால அனுபவத்தை தரும். அருவிகள், மலைகள், காபி தோட்டங்கள் மற்றும் ரிவர் ராஃப்டிங் போன்ற சாகச விளையாட்டுகள் அனைத்தும் இந்த மான்சூன் பருவத்தில் சிறப்பாக இருக்கும். அதனால் இப்போதே உங்கள் நண்பர்களுடன் இந்த மழைக்காலத்தில் கூர்க் ட்ரிப் பிளான் போடுங்க.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP