சொந்த வீடு கட்டினாலும், புது வீட்டிற்கு குடியேறினாலும் வாஸ்து பார்க்கிறோம். வீட்டில் வாஸ்து பின்பற்றுவது போல தொழில் சிறக்க பணியிடத்திலும் வாஸ்து பின்பற்றலாம். சுய தொழில் செய்யும் நபர் அல்லது பெரிய நிறுவனத்தில் உயர் பொறுப்பில் உள்ள நபராக இருந்தாலும் வாஸ்துவை பின்பற்றி சில மாறுதல்கள் செய்யலாம். வாஸ்துவதை பின்பற்றி உரிய இடத்தை தேர்வு செய்தால் தொழில் நடத்தினால் வளம் பெருகும். தொழிலில் ஏன் அடிக்கடி நிதி இழப்பு என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறீர்களா ? இந்த வாஸ்து குறிப்புகளை பின்பற்றவும். தொழிலில் லாபத்தை பெருக்கவும் வாஸ்துவ பின்பற்றலாம்.
தொழில் வளர்ச்சிக்கான முக்கிய வாஸ்து குறிப்புகள்
- வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை உள்ள நபர்கள் தொழில் வளர்ச்சிக்கு வாஸ்து குறிப்புகளை பின்பற்றினால் விரைவில் லாபம் சம்பாதிக்கலாம்.
- தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற திசைகளாக வடக்கு, வட கிழக்கு மற்றும் கிழக்கு திசைகள் கருதப்படுகின்றன. தொழில் தொடங்கும் போது இந்த இடங்களை தேர்வு செய்யவும்.
- பணி செய்யும் இடத்தில் தென் மேற்கு மற்றும் தென் கிழக்கு திசைகளை தவிர்க்கவும். இந்த திசைகளில் நிதி இழப்பிற்கு வாய்ப்புகள் உண்டு.
- வாஸ்து சாஸ்திரத்தின்படி அலுவலகத்தில் நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். அலுவலகத்தில் வேலை திறன் அதிகரிக்க நீங்கள் வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி உட்காரவும். ஊழியர்களின் முதுகுப்பகுதி முன்வாசலை நோக்கியவாறு இருக்க கூடாது.
- அலுவலகத்தின் நுழைவு வாயில் வடக்கு, வட கிழக்கு மற்றும் கிழக்கு திசையை பார்த்தபடி இருக்க வேண்டும்.
- தெற்கு பார்த்த திசையில் அலுவலகம் இருந்தால் சிக்கல்களுக்கும், நிதி இழப்பிற்கும் வழிவகுக்கலாம்.
- வாஸ்துவின்படி பணப் பெட்டி இருக்கும் திசையும் முக்கியம். கல்லா பெட்டி எப்போதும் வடக்கு திசையில் இருந்தால் வளம் பெருகும். பாதுகாக்கப்பட வேண்டிய விஷயங்களை தென் மேற்கில் வடக்கு திசையை பார்த்தபடி வைக்கவும்.
- பணப் பெட்டிக்கு முன்பாக கண்ணாடி இருந்தால் தொழிலில் லாபம் அதிகரிக்கும் என வாஸ்து கூறுகிறது. உடைந்த எந்தவொரு கண்ணாடி பொருளையும் வீட்டிலும், அலுவலகத்திலும் வைக்காதீர்கள்.
- அலுவலக சுவர்களில் நீலம், பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களை பயன்படுத்துங்கள். சிவப்பு, கருப்பு நிறங்களை பயன்படுத்தினால் தீ பிடிக்கும் வாய்ப்பு உண்டு.
- நுழைவு வாயிலை நன்கு வெளிச்சம் தெரியும்படி அமைக்கவும். இது நேர்மறை ஆற்றலை கொண்டு வரும்.
- ஊழியர்களுடன் உரையாடுவதற்கான அறையை வட மேற்கு அல்லது மேற்கு திசையில் அமைக்கவும். தென் மேற்கு திசையில் அமைக்காதீர்கள்.
- அலுவலகத்தில் பிடித்தமான கோயிலின் மாதிரி வடிவை வைத்து தினமும் சுத்தப்படுத்தி பூஜை செய்யவும்.
- அலுவலகத்தில் வரவேற்பு பகுதி வட கிழக்கு திசை அல்லது கிழக்கு திசையில் இருப்பது நல்லது.
மேலும் படிங்கசிவப்பு குதிரை படத்தை வீட்டின் இந்த திசையில் வைத்தால் நிதி சிக்கல்கள் தீரும்
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation