சின்னத்திரை ரசிகர்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் சீரியல் முதலிடத்தில் இருக்கிறது. காலை முதல் இரவு வரை ஒளிப்பரப்பாகும் சீரியல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் சீரியல்கள், இளைஞர்களுக்கு பிடித்தமான சீரியல்கள், பெண்களுக்கு பிடித்தமான சீரியல்கள் என எல்லா சேனல்களிலும் பல ஜானர்களில் திங்கள் முதல் சனி வரை பல்வேறு சீரியல்கள் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றன.
ரசிகர்களை கவர்ந்த, அவர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்கள் டி.ஆர்.பி ரேட்டிங் மூலம் வரிசைப்படுத்தப்படுகின்றன. இந்த டி.ஆர்.பி ரேட்டிங்கில் போட்டி போடும் சேனல்கள் சன், விஜய் டிவி, ஜீ தமிழ். தமிழில் முன்னணி சேனலாக இருக்கும் இவற்றில் பிரபல வெள்ளித்திரை நட்சத்திரங்கள் தொடங்கி சின்னத்திரை நடிகர், நடிகைகள் வரை பலரும் நடிக்கின்றனர். கதைக்களம், நடிகர், நடிகைகள் புரமோஷன் இவற்றை பொறுத்து குறிப்பிட்ட சீரியல்களை ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். அவை டி.ஆர்.பி ரேட்டிங்கில் இடம் பிடிக்கின்றனர்.
இந்த பதிவும் உதவலாம்:டாடா முதல் ரன் பேபி ரன் வரை இந்த வாரம் ஓடிடிக்கு வரும் படங்கள்
அந்த வகையில் போன வாரம் டி.ஆர்.பி வரிசையில் இடம்பெற்ற சன் டிவி சீரியல்கள்:இன் டி.ஆர்.பி ரேட்டிங் குறித்து பார்ப்போம்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் தொடர் பல மாதங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்து வருவது அனைவரும் அறிந்தது. அதே நேரம் எதிர் நீச்சல் சீரியல் டெலிகாஸ்ட் ஆன பிறகு ரசிகர்கள் பலரும் அந்த சீரியலையும் விரும்பி பார்க்க தொடங்கினர். கடந்த மாத டி.ஆர்.பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியல் முதலிடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மார்ச் மாதம் 2வது வாரத்திற்கான சன் டிவி சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் மீண்டும் கயல் சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது.
இதில் நடிகை சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் லீட் ரோலில் நடிக்கின்றனர். தமிழில் கயல் சீரியலுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்புக்கு பின்பு கயல் சீரியல் இந்தி, தெலுங்க்கு, கன்னடம், மராத்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு டெலிகாஸ்ட் ஆகி வருகிறது. கயல் சீரியல் டிஆர்பி பட்டியலில் 10.49 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.அதே போல் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் வானத்தைப் போல தொடர் 2வது இடம் பிடித்துள்ளது. அண்ணன் தங்கை பாசத்தை மையமாக கொண்டு ஒளிப்பரப்பாகும் இந்த தொடர் டிஆர்பி பட்டியலில் 10.22 புள்ளிகளைப் பெற்றுள்ளது. கண்ணான கண்ணே டிஆர்பி பட்டியலில் 9.8 புள்ளிகளைப் பெற்று 3வது இடம்பிடித்துள்ளது. ஆல்யா மானசாவில் புத்தம் புதிய தொடர் இனியா 4வது இடம் பிடித்துள்ளது. எதிர் நீச்சல் தொடர், 5வது இடத்தை பிடித்துள்ளது. இந்தத் தொடர் டிஆர்பியில் 9.66 புள்ளிகளைப் பெற்றுள்ளது. சுந்தரி தொடர் 6வது இடத்தைப் பிடித்துள்ளது. 'டி.ஆர்.பி ரேட்டிங்கில் 9.52 புள்ளிகளை சுந்தரி சீரியல் பெற்றுள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: அம்மி, மண்பானை சமையல் துர்கா ஸ்டாலின் வீட்டு கிச்சன் இவ்வளவு சிம்பிளா!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]