விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி 5 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து 6வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. புதிதாக இரண்டு ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆறாவது சீசனில் பழைய கோமாளிகள் கழற்றி விடப்பட்டு புதிய கோமாளிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். அதோடு மூன்றாவதாக புதிய நடுவர் பங்கேற்க போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செஃப் வெங்கடேஷ் பட் இம்முறையும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தவிர்த்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு ராமர், புகழ், டைகர் தங்கதுரை, சுனிதாவுடன் ப்ரோமோ வெளியிட்டு குக் வித் கோமாளி சீசன் 6 தொடங்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது இரண்டு புதிய ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளன. அதில் பிக்பாஸ் சவுண்ட் செளந்தர்யா, பிகில் பூவையார், டோலி, சர்ஜுன் கோமாளிகளாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். 10-12 போட்டியாளர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் நிலையில் தற்போது வரை 7 கோமாளிகளின் விவரம் தெரிய வந்துள்ளது. டைகர் தங்கதுரை, ராமர், புகழ், சுனிதா, சர்ஜுன், பூவையார், டோலி ஆவர். சில கோமாளிகள் சன் டிவியின் டூப்பு குக்கு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்ட காரணத்தால் இம்முறை புதிய கோமாளிகளை களமிறக்கியுள்ளது விஜய் டிவி. டோலி விஜய் டிவியின் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.
புது ஸ்கூல், புது ரூல்ஸ், புது ஜட்ஜ் என இரண்டாவது ப்ரோமோவில் தெரிவித்துள்ளனர். முந்தைய சீசனின் நடுவர்கள் மாதம்பட்டி ரங்கராஜும், பத்ம விருதாளர் செஃப் தாமுவும் மூன்றாவது நடுவராக செஃப் கெளஷிக்கை அறிமுகம் செய்து வைத்தனர். இவர் ஏற்கெனவே சன் டிவி சமையல் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று இருக்கிறார். யூடியூப்பிலும் இவரது சமையல் வீடியோக்கள் பிரபலம். அசைவ உணவுகளை பற்றி விவரிப்பதில் கில்லாடி. செஃப் வெங்கடேஷ் பட் சன் டிவியின் டூப்பு குக்கு நிகழ்ச்சியில் தொடர்வதால் அவர் இம்முறையும் குக் வித் கோமாளியில் இடம்பெறவில்லை.
வரும் வாரத்தில் போட்டியாளர்களின் விவரம் தெரிய வாய்ப்புள்ளது. அதோடு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நிகழ்ச்சி ஒளிபரப்பு தொடங்கவுள்ளது. இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]