Alya Manasa Daughter: குட்டி இனியாவாக மாறிய ஐலா! ஆல்யா-சஞ்சீவ் நியூ யூடியூப் வீடியோ

ஆல்யா மானசா- சஞ்சீவ் புதிதாக யூடியூபில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் மகள் ஐலாவுக்கு மேக்கப் போட்டு இனியாவாக மாற்றுகின்றனர்.

alya manasa aila  youtube video

ஆல்யா மானசா, சஞ்சீவ் இருவரும் சின்னத்திரையில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு ஐலா, அர்ஷ் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.சின்னத்திரை நட்சத்திரங்களில் பலர் தங்களுக்கென தனி யூடியூப் சேனல் ஒன்றை வைத்துள்ளனர். அதே போல் சஞ்சீவ் , ஆல்யா மானசாவும் யூடியூப் சேனல் வைத்து தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வருகின்றனர். இவர்களுக்கு 1.36 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ் இருக்கின்றனர்.

யூடியூப் வீடியோ

ஆல்யா-சஞ்சீவ் ஜோடி புது யூடியூப் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர்.வீடியோவின் தொடக்கத்தில் ஆல்யா மானசா தனது மகன் அர்ஷுடன் விளையாடி கொண்டிருக்கிறார்.அதன் பின்பு ஐலா கட்டிலுக்கு கீழே ஒலிந்துக்கொண்டு ஆல்யா மானசாவுடன் விளையாடுகிறார்.

alya manasa make up

ஐலாவை இனியாவாக மாற்றிய ஆல்யா மானசா

ஐலா -ஆல்யா பேசிக்கொண்டிருக்கும் போது இனியா சீரியலை தொடர்ந்து பார்ப்பதாக ஆல்யா மகள் கூறுகிறார்.சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் ஆல்யா கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உடனே சஞ்சீவ் ‘நம்ம ஐலாவை இனியாவாக மாத்தலாமா’என கேட்க ஐலாவுக்கு ஒரே குஷி.. அப்பறம் என்ன உடனே ஐலாவுக்கு மேக்கப் போட ஸ்டார்ட் பண்றாங்க..

alya manasa daughter

ஐலாவுக்கு மேக்கப் போட்டு முடித்தவுடன் அப்படியே பார்க்க குட்டி இனியா மாதிரி இருக்காங்க. இந்த வீடியோ பார்த்த பலரும் ‘க்யூட் ஐலா’, ’மை ஃபேவரெட் ஃபேமிலி’ என பல கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர்.


Image:Screenshot

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP