மகா சிவராத்திரி : பரம்பொருள் சிவபெருமான் அளித்த நிகரில்லா வரங்கள்; குரங்கு அரசனான கதை

மகா சிவராத்திரி அன்று கண் விழித்து சிவனை வழிபட்டால் சகலமும் கிடைக்கும் என்கிறார்கள். மனமுகர்ந்து சிவனை வழிபட்டால் வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அப்படி சிறப்பு மிக்க மகா சிவராத்திரி தோன்றிய கதை, மகா சிவராத்திரியில் வில்வ இலைகளில் அர்ச்சனை செய்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட வரங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
image

மாதம் ஒரு நாள் சிவராத்திரி அமைந்தாலும் மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தி வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி என்று சொல்லப்படுகிறது. சிவராத்திரி அன்று கண் விழித்து விரதம் இருந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வந்தால் நாம் செய்த பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். மகா சிவராத்திரியின் பின்னணியை தெரியாமலேயே பலரும் கண் விழித்து வழிபாடு நடத்துகின்றனர். மகா சிவராத்திரி நாளில் தன்னை வழிபட்டவர்களுக்கு ஈசன் சிவபெருமான் நிகரில்லா வரங்களை கொடுத்துள்ளார்.

lord shiva boons

மகா சிவராத்திரி புராணக் கதை

கோபக்கார துர்வாச முனிவர் கொடுத்த சாபத்தால் தேவர்கள் தங்களுடைய பலத்தை இழந்து தவித்த போது பாற்கடல் கடைந்து அதிலிருந்து கிடைக்கும் அமிர்தத்தை சாப்பிட்டால் உங்களை யாராலும் தோற்கடிக்க என விஷ்ணு பகவான் கூறவே தேர்வகளும், அசுரர்களும் வாசு பாம்பை கையிறாக கொண்டு மேருமலையை பயன்படுத்தி பாற்கடலை கடைந்த போது வலி தாங்க முடியாத வாசுகி பாம்பு தனது முழு விஷத்தையும் கடலில் உமிழ்ந்துவிடுகிறது. பட்ட கஷ்டங்கள் வீணாகிவிட்டதே இதனால் ஜீவ ராசிகள் துன்பத்தில் தவிக்குமென தேவர்கள் கடவுளிடம் ஏதாவது செய்து காப்பாற்றுங்கள் என வேண்டுகின்றனர்.

சிவபெருமான் எதையும் யோசிக்காமல் தானாக முன்வந்து கடலில் கலந்த விஷத்தை குடித்து ஜீவ ராசிகளை காப்பாற்றினார். விஷத்தை குடித்ததால் சிவபெருமானின் உடல் நீல நிறத்திற்கு மாறுகிறது. அப்போது பார்வதி தேவி வாசுகி பாம்பை எடுத்து சிவனுடைய கழுத்தில் கட்டி தன்னுடைய கைகளால் விஷத்தை பரவாமல் தடுக்கிறார். இதன் காரணமாகவே சிவபெருமானுக்கு திருநீலகண்டன் என பெயர் வந்தது. விஷத்தை குடித்ததால் சிவபெருமானின் உடல் வெப்பமாகவே இருக்கும். இதையடுத்து சிவபெருமானை குளிர்விக்க அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. பாகுபலி படத்தில் கொட்டும் அருவியில் சிவலிங்கத்தை வைத்து சிவன் எப்போதும் குளிர்ச்சி அடைவார் என பிரபாஸ் கூறுவது உங்களுக்கு நினைவு வரும்.

சிவபெருமான் அளித்த வரங்கள்

குரங்கு முசுகுந்த சக்கரவர்த்தியான கதை

சிவபெருமான் ஒரு முறை பூமியில் அழகான வனப்பகுதியில் மனித உருவம் எடுத்து தியானம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த குரங்கு மரத்தில் இருந்த இலைகளை கடித்து சிலவற்றை கீழே வீசிக் கொண்டிருந்தது. சிவன் மீதும் சுற்றியும் இலைகள் குவிந்தன. மறுநாள் சிவன் கண் விழித்த போது சிவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. தனக்கு பிடித்தமான வில்வ இலைகளை கொண்டு குரங்கு அர்ச்ச்னை செய்ததாக உணர்கிறார். அந்த நாள் சிவராத்திரி என்பதால் குரங்கிற்கு அதிர்ஷ்டம் அடித்தது. அடுத்த ஜென்மத்தில் மன்னனாக பிறக்கும் வரத்தை குரங்கிற்கு சிவபெருமான் வழங்கினார். தெரியாமல் செய்த செயலுக்கு வரம் கிடைத்த காரணத்தால் அடுத்த ஜென்மத்தில் மனிதனாக பிறந்தாலும் தெய்வ சிந்தனை வேண்டும் என்பதாக குரங்கு முகத்துடன் மனிதாக பிறக்க விரும்புகிறது. குரங்கு அடுத்த ஜென்மத்தில் முசுகுந்த சக்கரவர்த்தியாக பல சாதனைகளை புரிந்தது.

இதே போல வேடன் ஒருவன் புலிக்கு பயந்து மரத்தில் ஏறினான். அந்த இடத்தில் செய்வதறியாமல் வில்வ இலைகளை கீழே போட்ட போது அது சிவலிங்கத்தின் மீது
விழுந்தது. இதனால் வேடனுக்கு அபூர்வமான வரங்கள் கிடைத்தன. சிவராத்திரி அன்று ஒரே ஒரு வில்வ இலையில் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்தால் கூட பல ஜென்ம பாவம் நீங்கும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP