கர்ப்பிணிகள் சொல்ல வேண்டிய சிறந்த மந்திரம் எது தெரியுமா?

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா? உங்கள் குழந்தையின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு இந்த ஸ்லோகத்தை சொல்லுங்களேன்.

pregnant women can chant this mantra

கர்பிணிகளுக்கான ஸ்லோகம்: கருவில் வளரும் தன் குழந்தையின் எதிர்காலம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஆசை, எல்லா கர்ப்பிணிகளுக்கும் இருக்கும். பிறக்கப் போகும் குழந்தை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், அதிர்ஷ்டசாலிகளாகவும் இருக்க பலவிதமான பூஜை புனஸ்காரங்களையும் செய்கிறோம்.

ஜோதிட நிபுணர் டாக்டர் ராதாகாந்த் வட்ஸ் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கர்ப்பிணிப் பெண்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறோம். இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்வதன் மூலம், உங்கள் குழந்தைகள் சீரும் சிறப்புடன் வாழ்வார்கள். இந்த ஸ்லோகம் மற்றும் அது தொடர்பான விதிகள் பற்றித் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஸ்லோகம்

ஓம் ரக்ஷ ரக்ஷ கணாத்யக்ஷ,ரக்ஷ த்ரைலோக்ய ரக்ஷகம்,பக்தா நாம பயம் கர்த்தா,த்ரதா பவ பவர்ணவத்.

ஸ்லோகம் சொல்லும் முறை

  • காலையில் குளித்தபிறகு, விநாயகரை வணங்கவும்.
  • விநாயகருக்கு தீபாராதனை செய்து வழிபடவும்.
  • தினசரி வழிபாடு செய்தபிறகு, விநாயகர் முன் அமரவும்.
  • விநாயகரின் முன் அமர்ந்து இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்லவும்.

ஸ்லோகம் சொல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்

benefits of mantra

  • கர்ப்பிணி பெண்கள் விநாயகரின் முன் அமர்ந்து இந்த ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.
  • இந்த ஸ்லோகத்தை சொல்லும்போது, கிழக்கு திசை நோக்கி அமர வேண்டும்.
  • கருவில் வளரும் குழந்தையைச் சென்றடையும் வகையில் ஸ்லோகத்தை உரக்க சொல்லுங்கள். மனதிற்குள் சொல்வதை தவிர்த்திடுங்கள்.
  • ஸ்லோகத்தை 108 முறை சொன்ன பிறகு, விநாயகருக்கு பிரசாதம் நெய்வேதியம் செய்து, அதை நீங்களே சாப்பிடுங்கள்.
  • இரவு தூங்குவதற்கு முன் இந்த ஸ்லோகத்தை ஒருமுறை சொல்லுங்கள். பிறகு படுக்கையிலும் கூட இதை சொல்லலாம்.

ஸ்லோகத்தின் பலன்கள்

spell method

இந்த ஸ்லோகத்தின் பலனாக,

  • பிறக்கும் குழந்தையின் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்
  • அவர்களது ஆளுமையில் நற்பண்புகள் நிறைந்திருக்கும்.
  • குழந்தைகள் வலுவாகவும், வளமாகவும் இருப்பார்கள்
  • வாழ்க்கையில் மகத்தான வெற்றி காண்பார்கள்.

இந்த ஸ்லோகத்தை கர்ப்பிணிப் பெண்கள் சொல்லும் போது, பிறக்கப் போகும் குழந்தையின் எதிர்காலம் பற்றிய கவலைகள் நீங்கும். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாகத் தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP