ஆணுக்கு 25 வயது, பெண்ணுக்கு 21 வயது ஆகிவிட்டால் வீட்டில் உடனடியாக எப்போது பெண் பார்க்கலாம் அல்லது மாப்பிள்ளை பார்க்கலாம் என்ற பேச்சுகள் அடிபடும். பெண் கிடைப்பதெல்லாம் சிரமம், மாப்பிள்ளை வீட்டில் இத்தனை சவரன் மட்டுமே கேட்கிறார்கள் என குழப்பியெடுத்து திருமணத்திற்கு அவசரப்படுத்துவார்கள். திருமணத்தை தள்ளிப்போட உரிய காரணத்தை கூறினாலும் யாரையாவது காதலிக்கிறாயா ? உடலில் ஏதுவும் பிரச்னையா என கேட்பார்கள். உரிய துணையை தேர்ந்தெடுப்பதற்கான உரிமை திருமணம் செய்ய போகும் நபரிடம் வழங்கப்படுவதில்லை. சரியான துணையை தேர்ந்தெடுக்க திருமணத்தை தள்ளிப்போடுவதில்லை எந்தவித தவறும் இல்லை. அதற்கான காரணங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.
விவாகரத்து வாய்ப்பு குறைவு
வாழ்நாள் துணைக்காக காத்திருந்து சரியான நபரை தேர்ந்தெடுத்தால் இருவரும் பிரிந்து வாழ்வது, விவாகரத்து பெறுவதற்கான வாய்ப்பு குறைவே. வயதாகி விட்டது சீக்கிரம் திருமணம் செய்துகொள் என்ற வற்புறுத்தலை விட காத்திருந்து உரிய துணையை தேர்ந்தெடுப்பது தவறல்ல. அவசர கதியில் திருமணம் செய்யும் பலரின் வாழ்க்கை விவாகரத்தில் முடிகிறது.
தனிப்பட்ட விருப்பத்தில் வாழ்க்கை
வீட்டில் தனிப்பட்ட விருப்பத்திற்கு ஒப்புக்கொண்டால் திருமணத்தை தள்ளிப்போடுவதில் எந்தவித தவறும் இல்லை. சமூகத்தின் அழுத்தத்திற்காக திருமணம் செய்ய வேண்டிய நிலை இருக்காது. எதிர்கால வாழ்க்கை பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் உங்களிடத்தில் இருந்தால் பிறரை எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலை உருவாகாது.
உணர்வுகளை வெளிப்படுத்துதல்
நம்முடைய 20-30 வயதிற்குள் வாழ்க்கைக்கு தேவையான பல பாடங்களை கற்றுக்கொள்வோம். 20 வயதில் எடுத்த முடிவு 30 வயதில் வாழ்க்கை பாடங்களை கற்ற பிறகு தவறாக தோன்றலாம். எல்லா விஷயத்தில் வித்தியாசமான உணர்வும், கண்ணோட்டமும் வெளிப்படும். 20வயதிலயே திருமணம் செய்து கொண்டால் நிறைய விஷயங்களில் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது.
சரியான தேர்வு
உண்மை என்னவென்றால் நல்ல துணையை தேர்ந்தெடுக்க நேரம், முயற்சி, பொறுமை மற்றும் புரிதல் தேவைப்படும். இவை எல்லாம் சரியாக அமைந்தால் மட்டுமே நல்ல நபரை துணையாக தேர்ந்தெடுக்க முடியும். இளம் வயதிலயே அவசரப்பட்டு திருமணம் செய்வது உங்கள் வாழ்க்கையில் காதல் வாய்ப்பை தடுக்கவும் செய்யலாம்.
குடும்ப சுமை
இளம் வயதில் திருமணம் செய்து குழந்தைகளுக்கு தாயாகிவிட்டால் ஒட்டுமொத்த குடும்ப சுமையும் உங்கள் மீது விழுந்துவிடும். திருமணத்தில் சரியான முடிவை எடுத்தோமா என சிந்திக்க கூட இயலாது. சரியான நபரை காத்திருந்து திருமணம் செய்வதால் உங்களால் பிரச்னைகளை எளிதில் கையாண்டு சமாளிக்க முடியும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation