நடிகை கங்கனா ரனாவத்துக்கு சர்ச்சைகள் வருவது புதிதல்ல. சினிமா முதல் அரசியல் வரை பல்வேறு புலங்களிலும் அவருக்கு ஆதரவும் எதிர்ப்புமாகவே கடந்த சில ஆண்டுகள் இருந்திருக்கின்றன.
சிறப்பு பிரிவு பாதுகாப்பு வழங்கும் அளவுக்கு அரசியல், சமூக விவகாரங்களில் பங்கெடுத்துக்கொள்ளும் அவர் நேற்றைய தினம் வெளியிட்ட பதிவு ஒன்று அச்சத்தை கிளப்பியுள்ளது.
தான் உளவு பார்க்கப்படுவதாகவும், தனக்கே தெரியாமல் தான் படமெடுக்கப்படுவதாகவும் அச்சத்தோடு குற்றம் சாட்டும் அந்தப் பதிவில், தனது வாட்சப் தகவல்களை ஒருவர் திருடுவதாகவும் கூட அவர் தெரிவித்துள்ளார். என்னதான் நடக்கிறது இந்த விவகாரத்தில்? முதலில் கங்கனா தன் பதிவில் சொன்னது என்ன?
”நான் செல்லும் எல்லா இடங்களிலும் என்னைப் பின்தொடர்ந்து உளவு பார்க்கிறார்கள். தெருக்களில் மட்டுமல்ல, என் குடியிருப்பு கட்டிடம், பார்க்கிங் மற்றும் வீட்டு மொட்டைமாடியில் கூட லென்ஸ்களுடன் கேமராக்களை அவர்கள் வைத்திருக்கிறார்கள்.
பப்பராசிகள் (சுயநிதி புகைப்படக்கலைஞர்கள்) பணம் கொடுத்தால்தான் நட்சத்திரங்களை படமெடுப்பார்கள். நானோ எனது குழுவோ யாருக்கும் அப்படி பணம் கொடுக்கவில்லை. அப்படியிருக்க, யார் இவர்கள்?
இன்று காலை 6.30 மணிக்கு நான் படமெடுக்கப்பட்டேன். என் திட்டங்கள் எப்படி அவர்களுக்கு தெரிய வருகிறது? இந்தப் படங்களை வைத்து என்ன செய்யப் போகிறார்கள்? இன்று ஞாயிற்றுக்கிழமை காலை என் நடனப்பயிற்சியை முடித்துவிட்டு வரும்போது கூட அதிக எண்ணிக்கையில் அவர்கள் குவிந்துள்ளனர், நாங்கள் யாருக்கும் பணம் கொடுத்து அழைக்காதபோதும்.
மேலும், “நான் உறுதியாக நம்புகிறேன், எனது வாட்ஸ்அப் தரவுகள் மற்றும் தொழில்முறை ஒப்பந்தங்கள் அத்துடன் எனது தனிப்பட்ட வாழ்க்கை விவரங்களும் கூட வெளியில் கசிந்துள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.
காரணம் யார்?
இதற்கு காரணம் யாராக இருக்கும் என்று கேள்விகள் எழும் நிலையில், தன் பதிவிலேயே அதற்கு பூடகமாக ஒரு பதிலையும் தெரிவித்துள்ளார் கங்கனா.
இந்த வெறித்தனமான நேப்போ மாஃபியா கோமாளி, ஒருமுறை என் வீட்டு வாசலில் அழையா விருந்தாளியாக வந்து என்னை கட்டாயப்படுத்தினார். அவர் ஒரு அறியப்பட்ட பெண் பித்தர் மற்றும் காஸநோவா. ஆனால் இப்போது நேபோ மாஃபியா பிரிகேட்டின் துணைத் தலைவரும் ஆவார்.
அவரது மனைவி தயாரிப்பாளராக மாற வேண்டும், பெண்களை மையமாக வைத்து அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். என்னைப் போலவே ஆடை அணிந்து என்னைப் போலவே வீட்டின் உட்புறத்தையும் உருவாக்கிக்கொண்டு, என் ஒப்பனையாளர் மற்றும் பல வருடங்களாக என் வீட்டில் பணியாற்றியவர்களையும் கூட வேலைக்கு எடுத்துகொண்டார்.
அவரது மனைவியும் இந்த நடத்தையை ஊக்குவிக்கிறார். அவரது திருமணத்தின்போது, என் அண்ணன் திருமணத்தில் நான் அணிந்திருந்த அதே புடவையை அணிந்தாள். இது இன்னும் கூட குழந்தைத்தனமானது.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக எனக்குத் தெரிந்த ஒரு திரைப்பட ஆடை வடிவமைப்பாளரான என் நண்பர் (சிறந்த நண்பர்) தற்செயலாக இப்போது அந்த ஜோடியுடன் வேலை செய்கிறார். மேலும், எனது நிதியாளர்கள் மற்றும் வணிக கூட்டாளர்கள் கடைசி நிமிடத்தில் ஒப்பந்தங்களை எந்தக் காரணமும் இன்றி ரத்து அல்லது நிறுத்தம் செய்கிறார்கள்.
அவர் என்னை தனிமைப்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்க முயற்சிக்கிறார் என்று நான் நினைக்கிறேன். இப்போது அவர் தன் மனைவியை ஒரு தனி மாடியில் வைத்திருக்கிறார். ஒரே கட்டடத்தில் இருவரும் தனித்தனிடே வாழ்கின்றனர். இந்த ஒப்பந்தத்தை அவள் நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் எப்படி தகவல்களை திருடுகிறார் என்றும் கண்காணிக்க நான் அவளுக்கு பரிந்துரைக்கிறேன். இந்தத் தரவுகள் அனைத்தையும் அவர் எப்படிப் பெறுகிறார், எதில் ஈடுபடுகிறார் என்று அவள் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் நாளை அவர்களுக்கிடையில் சிக்கல் வந்தால் அவளுக்கும் அவளது குழந்தைக்கும் பிரச்சினை வரும். அவள் தன் வாழ்க்கைக்கு தானே பொறுப்பேற்று அவர் சட்டவிரோதமான எதிலும் உள்ளே நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அன்புள்ள உங்களுக்கும் மற்றும் உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்கும் என் அன்புகள் ❤. என்று அந்தப் பதிவில் தெரிவித்திருந்தார்.
சைபர் குற்றம் தொடர்பான இந்த விவகாரத்தில் ஏன் கங்கனா இன்னும் புகாரளிக்கவில்லை என்பது கேள்வியாக இருந்தாலும், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று நம்புவோம். சமூக ஊடகத்தை பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் பாதுகாப்பானதாக பொதுவானதாக ஆக்குவோம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation