நல்ல நண்பர்கள் அமைந்தால் நமது வாழ்க்கை சிறக்கும் என்பது மறுக்கமுடியாத விஷயம். நண்பர்கள் நம் வாழ்க்கையில் மகிழ்ச்சி, சிரிப்பு, எப்போதும் ஆதரவு அளிக்ககூடிய விலைமதிப்பற்ற பந்தம் என்பதை உணர்ந்திருப்போம். எனினும் பிற உறவுகளைப் போல நட்பிலும் மோதல்கள், கருத்து வேறுபாடுகள் இருக்கும். கருத்து மோதல்கள் ஆரோக்கியமான மற்றும் ஆக்கபூர்வமான விஷயங்களுக்காக நடந்தால் நல்லது. அந்த வகையில் நண்பர்களுடன் நெருக்கம் ஏற்பட்டால் மோதல்களை தீர்ப்பதற்கான வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்...
அடிதடியாக இல்லாத வரையில் நட்புறவில் எந்த பிரச்னை ஏற்பட்டாலும் நேரடியாக பேசி தீர்த்துவிடலாம். நேரடியாக சென்று பிரச்னைக்கான காரணத்தை பேசி தீர்க்கவும்.
பிரச்னை குறித்து பேசுவதற்கு உரிய நேரத்தை தேர்ந்தெடுக்கவும். நண்பர் சாப்பிட செல்லும் போது மோதல் அல்லது பிரச்னை பற்றி பேசிக்கொள்ளலாம் என நினைக்காதீர்கள். பிரச்னையை தீர்ப்பதற்கு வசதியான நேரத்தில் எந்தவித தொந்தரவும் இல்லாமல் அமைதியான இடத்தில் அமர்ந்து பேசவும்.
முன்கூட்டியே திட்டமிட்டு என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். இந்த பிரச்னையால் மனதளவில் எவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளீர்கள் என்பதை விளக்கவும்.
பிரச்னை பேசி தீர்ப்பதற்கு ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுவது தவறு. நண்பராக இருந்தாலும் குற்றம்சாட்டுவதை யாரும் விரும்பமாட்டார்கள். நீங்கள் கவலைப்பட்டு வேதனையை வெளிப்படுத்தினாலும் குற்றம்சாட்டால் உங்கள் பேச்சை கவனிக்க தவறுவார்கள். எல்லாவற்றிற்கும் குறை கூறுவதை தவிர்த்து ஆரோக்கியமான கருத்துகளுடன் உரையாடுங்கள்.
பிரச்னையை பற்றி பேசும் போதும் பிறரை பேசவிட்டு நன்கு கவனிக்கவும். அவர்கள் பேச்சை நிதானமாக கேட்கவும். இந்த பிரச்னையில் அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை அறிய முயலுங்கள்.
ஒரு பிரச்னையில் எப்போதுமே இரு பக்கம் இருக்கும். நீங்கள் பேசி முடித்த பிறகு எதிரே இருக்கும் நண்பர் கூறுவதை முழுமையாக கேட்டு அவர்களது பேச்சுக்கு மதிப்பளிக்கவும்.
பிரச்னையை பற்றி பேசத் தொடங்கும் போதே தீர்வை எட்டும் எண்ணத்தோடு இருங்கள். விவாதம் ஆரோக்கியமான இடத்தை நோக்கி நகரும் போது பிரச்னையை முடித்துக் கொள்ளலாம் என கூறிவிடுங்கள். நீ அதை மாற்றிக்கொள் நான் இதை மாற்றிக்கொள் என்று பேசுவதை விட ஒருங்கிணைந்து செயல்படலாம் என வலியுறுத்துங்கள்.
எந்த பிரச்னையாக இருந்தாலும் ஒரிரு நாளில் பேசித் தீர்த்துவிடுங்கள். பேசவதற்கு யோசித்து தாமதம் செய்தால் அவர்களுக்கு நீங்கள் தேவையில்லை என தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்புண்டு.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள். எங்களை முகநூலில் பின்தொடர்வதற்கு HER ZINDAGI கிளிக் செய்யவும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]