இன்றைய பொருளாதார உயர்வின் காரணமாக குடும்பத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். வேலை கிடப்பதே அரியதாக உள்ள சூழல் உள்ள நிலையில், கிடைத்த வேலையைத் தக்க வைத்துக் கொள்வது என்பது ஒவ்வொருவருக்கும் பெரும் சவாலாக அமைகிறது. ஆம் பணியிடத்தில் உள்ள அரசியல், நட்புணர்வு இல்லாத நிலை போன்ற பல்வேறு காரணங்களால் வேலைப் பார்க்க முடியாமல் அவதிப்படுகின்றனர். சில நேரங்களிலில் பணியை விட்டுச் செல்லக்கூடிய நிலைக்கும் சென்று விடுவார்கள். இதோ இதிலிருந்து தபபிக்கவும், பணியிடத்தில் நட்புணர்வை வளர்த்து மகிழ்ச்சியுடன் இருக்க நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்பது குறித்த முக்கிய தகவல்கள் இங்கே.
புதிதாக அலுவலகத்தில் பணிக்குச் சேரும் பலருக்கும் அச்ச உணர்வு கட்டாயம் இருக்கும். பயம் உங்களது பணியில் சோர்வை ஏற்படுத்த ஒரு முக்கிய காரணமாக அமையும் என்பதால், முதலில் பணிக்குச் சென்றவுடன் நல்ல தகவல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பணியாளர்களிடையேயும், அதிகாரிகளுக்கு இடையேயும் அவ்வப்போது தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளவும். பணியில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதை வெளிப்படையாக கேட்கவும். பேசுவதற்கு நீங்கள் தயங்கும் போது, உங்களுக்கு எதுவுமே தெரியாது என மனநிலைக்கு அதிகாரிகள் வந்துவிடுவார்கள். எனவே தகவல் தொடர்புகளில் கவனமுடன் இருக்க வேண்டும். அலுவலகத்தில் உறவுகளை வலுப்படுத்த உதவியாக இருக்கும்.
பணியிடத்தில் சக ஊழியர்கள், மேல் அதிகாரியுடான தகவல் தொடர்பை மேம்படுத்திக்கொள்வது எவ்வளவு முக்கியமானதோ? அதே போன்று அனைவருடனும், நீண்ட கால உறவை ஏற்படுத்திக் கொள்ள கூடுதல் முயற்சியில் ஈடுபட வேண்டும். இதெல்லாம் பணியிடத்தில் செயல்திறனை அதிகரிக்க உதவுமா? என்பது தெரியாவிட்டாலும், வேலை செய்யுமிடத்தில் உகந்த சூழலை உருவாக்கும்.
வேலையிடத்தில் நட்புணர்வுடன் இருந்தாலும் அனைத்து வேலைகளையும் சரியாக வேண்டும் என்றால், குழப்பங்களைத் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். வேலைக்கான தகவல்கள் எங்கே உள்ளது? யாரிடம் உள்ளது? என தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால், யாரிடம் உள்ளது? என உரக்க கேட்க முயற்சி செய்யவும். அல்லது குறிப்பிட்ட தகவல்களைப் பெற வேண்டும் என்றால் சரியான நபரிடம் தனிப்பட்ட முறையில் கேட்க வேண்டும். இது உங்களது பணியை சுமூகமாக செய்வதற்கு உதவியாக இருக்கும்.
அலுவலகத்தில் நல்ல சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றால் எப்போதுமே பாசிடிவ் எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்தவொரு இக்கட்டான சூழலிலும் என்னால் எதையும் செய்ய முடியாது? என்று ஒருமுறை நினைத்தாலே அனைத்தும் கெட்டு விடும். இதுபோன்ற செயல்முறைகளை நீங்கள் பின்பற்றினாலே அலுவலகத்தில் மகிழ்ச்சியுடனும் நட்புணர்வுடனும் இருக்க உதவியாக இருக்கும்.
Image source- Google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]