rule

வீட்டில் நிதி சிக்கலா ? தீர்வு காண 40-40-20 பட்ஜெட் விதியை பின்பற்றுங்க!

பணப் பிரச்னையால் நிம்மதியை இழந்து வருத்தப்படுகிறீர்களா ? இந்த 40/40/20 பட்ஜெட் விதியை கடைபிடியுங்கள். பணப் பிரச்னையில் இருந்து விடுபட்டு கவலைப்படாமல் நிம்மதியாக வாழ்வீர்கள்.
Editorial
Updated:- 2024-08-06, 11:54 IST

இன்றைய தலைமுறையினருக்கு நிதி நிர்வாகம் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. மாதத்தின் முதல் நாளில் ஊதியம் பெற்று அடுத்த இரண்டு நாட்களுக்குள் பர்ஸை காலியாகும் அளவிற்கு செலவு செய்கின்றனர். இதை நிதிச் சுமை எனவும் புரிந்து கொள்ளலாம். எனவே பட்ஜெட் என்பது நிதி நிர்வாகத்தின் முக்கிய அம்சமாகும். வீட்டில் பண பிரச்னை ஏற்படாமல் இருக்க நிதி நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செயல்படுத்துவது அவசியம். பல்வேறு பட்ஜெட் திட்டங்களில் 40/40/20 விதி மிகவும் பிரபலமானது.

personal finance rule

40/40/20 பட்ஜெட் என்றால் என்ன?

40/40/20 பட்ஜெட் விதி என்பது வருமானம் மற்றும் செலவினங்களை நிர்வகிப்பதற்காக கட்டமைக்கப்பட்ட ஒரு அணுகுமுறையாகும். இந்த விதி என்பது வரி மற்றும் பிடித்தம் போக உங்கள் கைக்கு கிடைக்கும் வருமானத்தை மூன்று வகையாக பிரித்து பட்ஜெட் திட்டமிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • அத்தியாவசியம்
  • நிதி இலக்குகள்
  • விருப்பமான செலவினங்கள்

இந்த விதி உங்கள் நிதி நிர்வாகத்திற்கு தெளிவான கட்டமைப்பை வழங்குவதோடு மட்டுமின்றி அத்தியாவசிய செலவு, சேமிப்பு மற்றும் தனிப்பட்ட விஷயங்களுக்கு பண பிரச்னை ஏற்படாமல் இருப்பதை உதவி செய்கிறது.

அத்தியாவசியப் பொருட்களுக்கு 40%

வரிக்குப் பிந்தைய வருமானத்தில் 40 விழுக்காட்டை அனைத்து அத்தியாவசிய செலவுகளை ஈடுகட்ட ஒதுக்குங்கள். இதில் கடனை திருப்பி செலுத்துதல், வீட்டு  வாடகை, மளிகை பொருட்கள், காப்பீட்டு தொகை மற்றும் போக்குவரத்து செலவினங்கள் ஆகியவை அடங்கும். இவை நம்முடைய அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு ஆகும். இந்த செலவுகளை தவிர்க்க இயலாது.

நிதி இலக்குகளுக்கு 40%

அடுத்த 40 விழுக்காடு நிதி இலக்குகளை அடைவதற்காக ஒதுக்குங்கள். அவசரகால நிதி தேவை, பணி ஓய்வுக்கு பிறகான தேவை, குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் திருமண செலவுகளை உள்ளடக்கியது. இவற்றுக்கு எப்போதும் முன்னுரிமை அளியுங்கள். கடன் தொல்லையில் சிக்காமல் இருப்பதற்கு நிதி இலக்குகளுக்கு 40 விழுக்காடு திட்டமிட்டு ஒதுக்கவும்.

விருப்ப செலவுகளுக்கு 20%

மீதமுள்ள 20 விழுக்காட்டு பணத்தை உங்களது தனிப்பட்ட விருப்பங்களுக்காக ஒதுக்கி செலவு செய்யுங்கள். இதில் பொழுதுபோக்கு, குடும்பத்துடன் உணவகம் செல்வது மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களுக்கு செலவு செய்யுங்கள். இது பட்ஜெட் விதியை யதார்த்தமாக்குகிறது.

அதிக வட்டிக் கடனில் சிக்கியிருந்தால் நிதி இலக்குகளுக்கு ஒதுக்கிய 40% பணத்தைச் முழுமையாக பயன்படுத்தி கடனில் இருந்து மீளவும். கடனைக் குறைப்பது நிதி ஸ்திரத்தன்மையை அடைவதற்கு முக்கியமாகும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். எங்களை முகநூலில் பின்தொடர்வதற்கு HER ZINDAGI கிளிக் செய்யவும்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]