கடமைன்னு வந்திட்டா? என்ன வேணாலும் அதற்காக செய்யலாம் என்ற மனநிலை அனைவருக்கும் வந்திராது. தனக்குக் கிடைத்த வேலையை சரியாகவும், அரசு உதவிகள் அனைத்தும் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற மனநிலை இருந்தால் மட்டுமே இதை செய்துவிட வேண்டும்.அப்படியொரு நிகழ்வு தான் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. ஆம் இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த சுகாதார பணியாளர் ஒருவர் ஆற்றில் உள்ள பாலங்களைக் கடந்து துணிச்சலாக கடமையை ஆற்றியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிறது. ஏன் அவ்வாறு செய்தார்? என்பது குறித்த விபரங்கள் இங்கே.
இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாகவே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.அருகில் உள்ள வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலையில் மக்கள் தவித்து வரும் சூழலில், பெண் சுகாதார பணியாளர் கம்லா தேவி என்பவர் செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள சுவாத் காட் ஆற்றைக் கடந்து தான் ஹுராங் கிராமத்திற்கு செல்ல முடியும். ஆனால் வெள்ளப்பெருக்கில் அப்பகுதிக்குச் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வந்தனர். இந்த ஆபத்தைப் பொருட்படுத்தாமல் தனது உயிரைப் பணயம் வைத்து அங்குள்ள 2 மாத குழந்தைக்கு உயிர்காக்கும் தடுப்பூசி போடுவதற்காக சென்றுள்ளார். பாறைகளை ஒவ்வொன்றாக கடந்து சென்ற இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
View this post on Instagram
இந்த வீடியோவை இணையத்தில் பார்த்த நெட்டிசன்கள் பெண்களின் துணிச்சலான செயலுக்கு ஒரு சல்யூட் என்றும், கடமைக்கான உண்மையான அர்ப்பணிப்பைப் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது என்பது போன்ற கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். பெண் என்பதால் தான் தாய்மை உணர்வு அளப்பெரியதாக உள்ளது என்றும் இருந்தாலும் இப்பெண்ணின் செயல் மிகவும் பெரியது என்று மனதார பாராட்டுக்களைக் குவித்து வருகின்றனர்.
எத்தகைய சூழலிலும் பெண் நினைத்தால் எதையும் அசால்டாக செய்து விட முடியும் என்ற கூற்று எப்போதும் மாறாது என்பதற்கு ஆக சிறந்த உதாரணமாக விளங்குகிறார் பெண் சுகாதார பணியாளர் கம்லா தேவி. இவரைப் போன்று பலரும் பணியாற்றிய வேண்டும். அதே நேரத்தில் கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]