herzindagi
captain lakshmi sahgal women affairs minister

நேதாஜியின் அபிமானி... புரட்சியாளர் கேப்டன் லட்சுமி சாகலின் சுதந்திர போராட்ட வரலாறு!

இந்திய தேசிய ராணுவத்தில் முக்கிய பொறுப்பு வகித்த கேப்டன் லட்சுமி சாகலின் வீர வரலாற்றையும் அவரது புரட்சிகர வாழ்க்கை பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்...
Editorial
Updated:- 2024-08-14, 10:08 IST

இந்திய சுதந்திர போராட்டத்தில் பெண் புரட்சியாளர்களின் பங்களிப்பு அளப்பரியது. வீட்டிற்குள் முடங்கியிருந்த பெண்களை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராட வைப்பதிலும் அவர்களுக்கு சமூகத்தில் சம உரிமை பெற்றுத் தருவதிலும் ஒன்றல்ல இரண்டல்ல பல பெண் புரட்சியாளர்கள் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் போராடியுள்ளனர். ஏற்கெனவே சொர்ணத்தம்மாள், சிவகாமி அம்மையார், ருக்மிணி லட்சுமிபதி, லட்சுமி என்.மேனன் ஆகியோரின் சுதந்திர போராட்ட வரலாற்றைப் பற்றி பகிர்ந்துள்ளோம். இந்த பதிவில் இந்திய தேசிய ராணுவத்தில் முக்கிய பங்கு வகுத்த கேப்டன் லட்சுமி சாகல் பற்றி பார்ப்போம்...

captain lakshmi sahgal indian national army

யார் இந்த கேப்டன் லட்சுமி சாகல் ?

இந்திய சுதந்திர போராட்டத்தில் மிக முக்கியமான நபராக கேப்டன் லட்சுமி சாகல் அறியப்படுகிறார். 1914ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி பிறந்த இவர் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தார். இரண்டாம் உலகப் போரின் போது ராணுவத்தில் கேப்டன் லட்சுமி சாகலின் நடவடிக்கைகள் அதிக கவனம் பெற்றது. புரட்சியாளராக வாழ்ந்த கேப்டன் லட்சுமி சாகல் எதிர்காலத்தில் ஆசாத் ஹிந்த் அரசாங்கத்தில் மகளிர் விவகார அமைச்சராகப் பணியாற்றினார்.

captain lakshmi sahgal freedom fighter

கேப்டன் லட்சுமி சாகலின் வாழ்க்கை

  • சென்னையில் பிறந்தவரான லட்சுமி சாகல் வழக்கறிஞர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
  • இவரது தந்தை எஸ்.சுவாமிநாதன் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கறிஞராக செயல்பட்டார். இவரது தாய் அம்மு சுவாமிநாதன் சமூக செயல்பாட்டாளராகவும் சுதந்திர போராட்ட வீராங்கனையாகவும் நாட்டிற்கு கடமையாற்றினார்.
  • குடும்பத்தினரிடம் இருந்து பெற்ற ஊக்கம் லட்சுமி சாகலை தைரியமான பெண்மணியாக மாற்றியது. தனக்கு எது சரி எனப்படுகிறதோ அதற்கு பன்மடங்கு விலை கொடுக்க வேண்டியதாக இருந்தாலும் அந்த விஷயத்தை செய்யக்கூடியவர்.
  • ராணி மேரி கல்லூரியில் கல்வி பயின்ற அவர் தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடிய போது பழங்குடியின பெண்ணின் கைகளை பிடித்துச் சென்று தன்னுடன் விளையாட வைத்தார்.
  • இளம் வயதிலேயே பி.கே.என் ராவ் என்ற விமானியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தில் அவசரப்பட்டு விட்டுவோம் என உணர்ந்த அவர் கணவரைப் பிரிந்து  மருத்துவப் படிப்பை தொடர்ந்தார்.
  • 26வயதில் சிங்கப்பூர் சென்ற அவர் அங்கிருந்தபடி இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்தார். அதே போல வசதியில்லாதவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்தார்.
  • சில வருடங்கள் கழித்து பிரேம் சாகல் என்ற இந்திய ராணுவ வீரரை திருமணம் செய்துகொண்டார். ராணுவத்தில் பெண்கள் பிரிவை உருவாக்க வேண்டும் என்ற நேதாஜியின் கனவை செயல்படுத்துவதில் முழு கவனம் செலுத்தினார்.
  • 2012ஆம் ஆண்டு உயிரிழந்த கேப்டன் லட்சுமி சாகலுக்கு இந்திய அரசு பல்வேறு விருதுகளை வழங்கி கெளரவம் செய்துள்ளது.
  • சிவில் சர்வீஸ் தேர்வுகளில் கேப்டன் லட்சுமி சாகலின் வீர வரலாற்றைப் பற்றி கேள்விகள் கட்டாயம் இடம்பெறும்.

மேலும் படிங்க இந்திய அரசியலின் செயல் வீராங்கனை! கேரளத்து லட்சுமி என்.மேனனின் வீர வரலாறு...

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]