herzindagi
if you find these quality in your wife you are so lucky

உங்கள் மனைவிக்கு இந்த 5 குணங்கள் இருந்தால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி!

ஒரு குடும்பம் முன்னேற்ற பாதையில் செல்வதற்கு ஆதரவாக இருப்பது பெண்கள் மட்டும்தான். உங்கள் மனைவிக்கு இந்த ஐந்து குணங்கள் இருந்தால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி.
Editorial
Updated:- 2024-08-14, 18:35 IST

ஒரு குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டுமென்றால் கணவனை விட மனைவிக்கு நல்ல குணங்கள் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தின் தூணாக இருப்பது மனைவி மட்டுமே. இல்லத்தரசிகள் சரியான வழிகளில் குடும்பத்தை நடத்தி சென்றாள் மட்டுமே அந்த குடும்பம் உயர்ந்த இடத்திற்கு செல்லும். உதாரணமாக, ஒரு குடும்பத்தில் ஒரு ஆண் குடும்பத்தை கவனிக்காமல், பொறுப்பில்லாமல் நடந்து கொண்டாலும் அந்த குடும்பம் பல இன்னல்களுக்கு ஆளாகாமல் சுமூகமாக வாழ்க்கை நகர்வது காரணம் நல்ல குணங்கள் கொண்ட பெண்களால் மட்டுமே சாத்தியம்.

மனைவியாக வரும் ஒரு பெண் குணத்தில் சரியில்லை என்றால் அந்த குடும்பத்தில் வாழ முடியாது அப்படிப்பட்ட பெண்ணால் குடும்பத்தில் நிம்மதி இருக்காது.  குடும்பத்தில் உள்ள மனைவிமார்களுக்கு இந்த குணங்கள் இருந்தால் கணவன்மார்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். 

மேலும் படிக்க: ஒரு குழந்தை பெற்ற பிறகு மீண்டும் ஒரு குழந்தை பெற்றெடுக்க எவ்வளவு காலம் சரியானது?

இந்த குணங்கள் உள்ள மனைவியை கொண்ட கணவன் அதிர்ஷ்டசாலி 

கணவனுக்கு ஆதரவாக நிற்கும் மனைவி

if you find these quality in your wife you are so lucky

எந்த நிலை வந்தாலும் கணவனை ஆதரிப்பவளே நல்ல மனைவி. அவன் மனச்சோர்வடைந்தால் கவலைப்படாதே நான் உன்னுடன் இருப்பேன் எல்லாம் சரியாகும் என்று உறுதுணையாக இருப்பவள். இன்பங்கள் மட்டும் இன்றி துன்பத்திலும் துணை நிற்பவள். வாழ்க்கை நன்றாக இருக்கும் போது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். சில சமயங்களில் வாழ்க்கையில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் கணவன் மட்டும் தான் பொறுப்பு என்று ஒதுங்கி நிற்காமல் அந்த பிரச்சனையை சரி செய்ய கணவனோடு கைகோர்த்து மனைவி நிற்க வேண்டும். இப்படி இருக்கும் பட்சத்தில் கணவன் வெற்றிப் பாதையில் செல்ல மனைவி துணையாக நிற்பாள்.

கணவனை மதிக்கும் மனைவி 

if you find these quality in your wife you are so lucky

கணவன் மனைவி உறவில் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். கணவனை மிகவும் மனைவி நேசிக்க வேண்டும். பல பேர் மத்தியில் எப்போதும் கணவனை மதிக்க வேண்டும், பிறர் முன்னிலையில் கணவனை அவமதிக்கக் கூடாது. கணவனை அவமானப்படுத்தும் வகையில் மனைவி நடந்து கொள்ளக் கூடாது. ஒருவேளை கணவனை மற்றவர்கள் தவறாக பேசினாலும், பிரச்சனை செய்தாலும் கணவன் மீது தவறு இருந்தாலும் கணவனை ஒருபோதும் பொது இடத்தில் விட்டுக் கொடுக்காமல், மனைவி துணை நிற்க வேண்டும். நீங்கள் தனியாக இருக்கும்போது ஒருவர் ஒருவர் சண்டையிட்டு கொள்ளலாம் ஆனால் மற்றவர்கள் முன் அதை ஒருபோதும் செய்யக்கூடாது. 

கணவரின் நலனில் ஆர்வம் காட்டுவது 

if you find these quality in your wife you are so lucky

கணவனின் விருப்பங்களை அறிந்து அதில் ஆர்வம் காட்டுவது அவருடன் அது குறித்து விவாதிப்பது,கணவனின் நற்செயல்களுக்கு ஆதரவளிப்பது இவை அனைத்தும் கணவன் மனைவி இடையே பிணைப்பை வலுப்படுத்துகிறது. கணவனின் ஆர்வத்தை மனைவி கடைபிடிக்க வேண்டும். கணவனும் மனைவியின் விருப்பத்திற்கு கவனம் செலுத்த வேண்டும். அவளது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இதை செய்தால் குடும்பம் சீரும் சிறப்புமாக மகிழ்ச்சியாக இருக்கும். 

சரியான காரணத்திற்கு கோபப்பட வேண்டும்

if you find these quality in your wife you are so lucky

மனைவி சண்டை இட்டால் அவள் மோசமானவள் என்பதல்ல. அவள் எதைப் பற்றி சண்டையிட்டால் என்பது தான் முக்கியம் மனைவியின் சண்டைக்கு பின்னால் குடும்பத்தின் நலன் சார்ந்த பார்வை இருக்கிறது. உதாரணத்திற்கு பணத்தை வீணாக செலவு செய்ய வேண்டாம், சிக்கனப்படுத்தி சேமிக்க வேண்டும் என்று மனைவி சண்டை போட்டாள் அவள் உன்னை மிகவும் விரும்புகிறாள். அதனால், தான் சண்டையிடுகிறாள் என்று அர்த்தம். 

எனவே மனைவி சண்டையிடும் போது அவள் ஏன் சண்டையிட்டால் என்பதை கவனியுங்கள். எதற்காக நம் மீது கோபப்படுகிறார் என்பதை உற்றுக் கவனியுங்கள் நம் தவறுக்காக அவள் கோபப்படுகிறாள் என்பதை நாம் புரிந்து கொண்டு அந்த தவறை திருத்தி சரி செய்து கொள்ள வேண்டும். 

கணவர் வீட்டு சடங்குகள், மரபுகளை மதிக்க வேண்டும். 

எல்லா குடும்பங்களுக்கும் தனித்தனி விதிகள் சடங்குகள் மரபுகள் உண்டு. கணவன் வீட்டிற்கு வரும்போது அவர்களை மதிக்கும் குணம் மனைவிக்கு இருக்க வேண்டும். கணவனை மட்டும் இன்றி அவனது குடும்பத்தையும் நேசிக்கும் குணம் அவளுக்கு இருக்க வேண்டும். கணவனிடம் தாராளமாக பேச வேண்டும், உற்சாகமாக பேச வேண்டும். எந்த பிரச்சனை வந்தாலும் வெளிப்படையாக தீர்க்க முயல வேண்டும். வீட்டு பிரச்சனையில் பிறர் தலையிட விடக்கூடாது இந்த குணங்கள் அனைத்தும் பெண்ணிடம் இருந்தால் குடும்பம் மிகவும் அழகாக இருக்கும்.

மேலும் படிக்க: ஒரு உண்மையான நண்பரை அடையாளம் காண்பது எளிது- நீங்கள் நட்பு பேசுவதை நிறுத்தினாலும் இந்த 5 விஷயங்களை செய்ய மாட்டார்கள்!

இதுபோன்ற அழகு சார்ந்த  சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் HerZindagi Tamil

image source: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]