குடும்பத்தில் மாதாந்திர செலவுகளை நிர்வகிப்பது எப்போதுமே சவாலான காரியமாகும். எகிறும் விலைவாசி, வாங்க வேண்டிய அத்தியாவசிய பொருட்களால் கைகளில் இருந்து ரூபாய் நோட்டு பறக்கிறது. தேவையானவற்றை வாங்காமல் இருக்க முடியாது. எனினும் மாதாந்திர செலவுகளை குறைக்க சில மாற்றங்களை முயற்சித்து பயன்பெறலாம். செலவுகளை கண்காணித்து திடமான முடிவுகளை எடுத்தால் செலவுகளை குறைக்க முடியும்.
மாதாந்திர செலவுகளை குறைக்க வழிகள்
செலவுகளை கண்காணிக்கவும்
பணத்தை சேமிக்க விரும்பினால் நாம் முதலில் செலவுகளை கண்காணிக்க வேண்டும். நம் அம்மா அல்லது அப்பா ஒரு நோட்டில் அன்றாட செலவுகளை குறித்து வைப்பார்கள். இதை நாமும் பின்பற்ற வேண்டும். பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் பேருந்து டிக்கெட் முதல் ஹோட்டல் உணவு பில் வரை சேமிப்பது போல் நீங்களும் குடும்பத்துடன் பேசி அன்றாட செலவுகளை கவனிக்கவும். எங்கெல்லாம் தேவையை விட அதிகமாக செலவு செய்கிறோம் என்பதை கண்டறிய இது உதவும்.
வீட்டில் சமைக்கவும்
உணவை ஆர்டர் செய்து வாங்கும் செயலிகளால் நாம் சமைப்பதை தவிர்த்து அடிக்கடி வெளியே வாங்குகிறோம். வீட்டில் சமையல் செய்வது செலவுகளை குறைப்பதோடு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். பணிக்கு செல்வதாக இருந்தாலும் நேரத்திற்கு சமைக்கவும், மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கவும். தவிர்க்க முடியாத காரணமாக இருந்தாலும் இரண்டு வாரத்திற்கு ஒரு முறைக்கு மேல் வெளியே உணவு வாங்காதீர்கள்.
மின் பயன்பாடு
வீட்டில் மின் பயன்பாடு நாம் கட்டுக்குள் வைக்க கூடிய விஷயமாகும். வெயில் காலத்தில் மின் பயன்பாட்டை தவிர்க்க இயலாது. எனினும் வீட்டில் எல்இடி பல்ப் உபயோகிக்கலாம். தேவையான நேரங்களில் மட்டும் மின்சாதன பொருட்களை பயன்படுத்தவும்.
பொதுபோக்குவரத்திற்கு மாற்றம்
லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் விற்பதால் மாதத்தில் குறிப்பிடத்தக்க தொகை எரிபொருள் பயன்பாட்டுக்கு செலவாகிறது. இதன் தீர்வாக பொது போக்குவரத்து பயன்படுத்த முயற்சிக்கவும். அலுகலகத்தில் இருந்து திரும்ப நண்பருடன் பயணிக்கவும். கணிசமான தொகையை சேமிக்கப்படும்.
சப்ஸ்கிரைப் ஆப்ஷன்
படம் பார்ப்பதற்காக பல ஓடிடி தளங்களுக்கு சப்ஸ்க்ரைப் செய்திருப்போம். தேவையானவற்றுக்கு மட்டும் பணம் செலுத்தி சேவையை தொடர்ந்து பெறுங்கள். டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு விஷயத்திற்கும் சப்ஸ்கிரைப் செய்வது தீர்வாக அமையாது. இதற்கு மாற்று வழிகளை தேடவும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation