ஆண்டின் தொடக்கமான சித்திரை மாதத்தில் வரக்கூடிய முழுமை பெற்ற சித்ரா பெளர்ணமி என்பது மிகவும் விஷேமான நாளாகும். இந்த நாளில் நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சித்ர குப்தரின் வழிபாடு. சித்ரா பெளர்ணமி அன்று நாம் சித்ர குப்தரை வழிபட்டால் நம்முடைய பாவக் கணக்கு புண்ணிய கணக்காக அவர் மாற்றுவார் என பொருள் கிடையாது. இந்த நாளில் வழிபடுவதால் பாவங்களை செய்ய விடாமல் புண்ணியம் செய்யக்கூடிய நல்ல மனநிலையை மாற்றி தருவார். நீங்கள் செய்த பாவம் எந்த விதத்திலும் மறையப் போவதில்லை.
சித்ரா பெளர்ணமி அன்று சித்ர குப்தரை வழிபடுவதால் நம்முடைய மனம் தீய எண்ணங்களை சிந்திப்பதை விடுத்து நல்ல எண்ணங்களை சிந்திக்கும் நிலைக்கு மாற்றுவார். இந்த நாளில் நோட்டு, புத்தகம், எழுதுகோல் வைத்து வழிபடுவது நல்லது. சித்ரா பெளர்ணமி அன்று புண்ணியங்கள் பெருகவும், பாவங்கள் குறைவதற்கும் சித்ர குப்தரை நாம் வழிபடுகிறோம்.
இதைவிட சித்ரா பெளர்ணமி சிவபெருமானுக்கு மிகவும் விஷேமானது. குறிப்பாக சிவன் எழுந்தருளி இருக்கக்கூடிய திருத்தலங்கள் அதாவது திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம் போன்ற மலைத்தலங்களில் கிரிவலம் செல்வது நல்லது.
திருவண்ணாமலை கிரிவலம் : சிறந்த நேரம்
சித்ரா பெளர்ணமி வரும் 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி மறுநாள் 24ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது. 23ஆம் தேதி முழுமையாக சித்ரா பெளர்ணமி என்பதால் அன்றைய தினம் முழுவதும் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம்.
14 கிலோ மீட்டர் கிரிவலம் சுற்றிய பிறகு அண்ணாமலையாரை வரிசையில் நின்று கூட்ட நெரிசலில் தரிசனம் செய்தால் மட்டுமே அருள் கிடைக்கும் என்று பொருள் அல்ல. கிரிவலத்தை நிறைவு செய்த பிறகு கோயில் வாசலில் தீபம் ஏற்றி வழிபட்டால் கூட போதுமானது. கொஞ்சம் கூடுதலாக சிரமப்பட்டு அண்ணாமலையாரை தரிசித்தால் பரிபூரண அருள் கிடைக்கும்.
சந்திரனின் தாக்கம் இருந்தால் நமக்கு மனக்கவலைகள் இருக்கும். சிவபெருமான் சந்திரனுக்கே வாழ்வளித்தவர் என்பதால் சித்ரா பெளர்ணமியில் சிவனை வழிபடுங்கள். நிச்சயமாக மனக் கவலைகள் தீரும்.
மேலும் நாராணர் பூஜை செய்து பெருமானின் கருணையை பெறலாம். நீங்கள் திருவண்ணாமலைக்கு சென்று சித்ரா பெளர்ணமியன்று வழிபாடு செய்வது சிரமமாக தோன்றினால் வீட்டின் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று 11 முறை பிரகாரத்தை சுற்றி வந்து நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.
சந்திரன் உதயமான பிறகு இந்த வழிபாடு செய்யுங்கள். சந்திர பகவானின் தாக்கத்தில் இருந்து விடுபட சிவனின் அனுகிரகத்தை பெறுவதற்கு மனதார வேண்டுங்கள்.
சித்ரான்னம் தயாரித்து குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சேர்ந்து சாப்பிடவும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation