உலகெங்கும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படும் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட டாப் 5 சிறந்த தமிழ் திரைப்படங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தமிழ் சினிமா ஒருபோதும் பெண்களை போற்ற மறந்ததே இல்லை. பிளாக் அண்ட் வயிட் திரைப்படங்களில் ஆரம்பித்து லேட்டஸ்ட் திரைப்படங்கள் வரை பெண்களைப் போற்றுவதற்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி தமிழ் சினிமா பல வெற்றி படங்களை கொடுத்துள்ளது. இந்த நிலையில் பெண்கள் அனைவரும் கண்டிப்பாக ஒருமுறையாவது பார்க்க வேண்டிய டாப் 5 சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
2015 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் ரோஷன் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 36 வயதினிலே. திருமணம் ஆன பிறகு ஒரு பெண்ணை மட்டம் தட்டி பேசும் சமூகம் குறித்து இந்த திரைப்படம் பேசி இருக்கும். இந்த திரைப்படத்தில் ஜோதிகாவின் கணவனும் பிள்ளையும் படிப்பிற்காக வெளிநாடு சென்ற பிறகு அவள் தனிமையில் உணர ஆரம்பிக்கிறாள். அப்போது மாடித்தோட்டம் போட்டு இயற்கை காய்கறிகள் விவசாயம் செய்து வெற்றி அடைகிறார். இந்தத் திரைப்படம் பார்த்த பிறகு தான் பல பெண்களும் மாடியில் தோட்டம் போட்டனர் என்று கூட சொல்லலாம்.
2016 ஆம் ஆண்டில் இயக்குனர் சுதா கோங்குரா இயக்கத்தில் நடிகர் மாதவன், ரித்திகா சிங், நாசர், ராதாரவி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் இறுதிசுற்று. பாக்சிங் என்று கூறினாலே ஆண்கள் மட்டும் தான் ஆட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த திரைப்படத்தில் முதல் முறையாக கதாநாயகி ரித்திகா பாக்சிங் வீராங்கனையாக நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்தில் நடிகை ரித்திகா போட்ட குத்து டான்ஸ் காட்சிகள் மிகவும் பிரபலம்.
2007 ஆம் ஆண்டில் இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா, நடிகர் பிரித்விராஜ், நடிகை ஸ்வர்ணமால்யா, எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த திரைப்படம் மொழி. இந்த படத்தில் காது கேட்காத வாய் பேச முடியாத கதாநாயகி ஜோதிகா மீது ஹீரோ பிரித்விராஜுக்கு காதல் ஏற்படுவது தான் மையக்கதை. இந்தத் திரைப்படத்தில் உள்ள காற்றின் மொழி பாடல் இன்றும் பலரின் ஃபேவரைட் என்று கூறலாம்.
மணிரத்தினம் இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையில் 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கன்னத்தில் முத்தமிட்டால். இந்தத் திரைப்படம் கொஞ்சம் சென்சிடிவ் ஆன திரைப்படம். இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் ஒரு பெண் விடுதலைப் புலியாக நடிகை நந்திதா தாஸ் நடித்திருப்பார். நடிகர் மாதவன், நடிகை சிம்ரன் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். குழந்தை நட்சத்திரம் கீர்த்தனாவுக்கு மாதவனும் சிம்ரன் தன் பெற்றோர் இல்லை என்பது தெரிந்து அவள் உடைந்து போவது படம் பார்க்கும் நம்மை உருக்கிவிடும். இலங்கையில் பெண்களின் நிலையை பற்றி பேசிய ஒரு சிறந்த திரைப்படம் இது.
2017 ஆம் ஆண்டு அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் அருவி. இந்த திரைப்படத்தில் நடிகை அதிதி பாலன் கதாநாயகியாக நடித்திருப்பார். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண், இந்த பொருளாதார சமூகத்தில் தன்னை பொருத்திக் கொள்வதில் ஏற்படும் சிரமத்தை இந்த திரைப்படம் அழகாக எடுத்துக் கூறியுள்ளது. இது ஒரு சமூக அரசியல் கதைகளம் என்று சொல்லலாம்.
Image source: gooogle
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]