Identity Review : டோவினோ தாமஸின் முடிச்சுகளே இல்லாத புரியாத (தலைவலி) புதிர்

மலையாள சினிமாவின் சாக்லேட் பாய் டோவினோ தாமஸ் நடித்துள்ள ஐடென்டிட்டி படத்தின் திரைவிமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம். திரிஷா, வினய், ஷம்மி திலகன் உள்ளிட்ட பலர் ஐடென்டிட்டி படத்தில் நடித்துள்ளனர்.
image

அகில் பால், அனாஸ் கான் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஐடென்டிட்டி. இந்த படம் 5 நாட்களில் 20 கோடிக்கு மேல் வசூல், 2025ன் முதல் பிளாக்பஸ்டர் மலையாள படம் என்றெல்லாம் இணையத்தில் பேசப்படுகிறது. உண்மையிலேயே இந்த படம் நன்றாக உள்ளதா ? இல்லையா ? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். பகத் பாசிலுக்கு பிறகு மலையாள சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களில் நடிப்பவராக டோவினோ தாமஸ் அறியப்படுகிறார். ஐடென்டிட்டி திரைப்படம் அவருடைய நடிப்பு திறமைக்கு தீனி போட்டுள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

ஐடென்டிட்டி கதைச்சுருக்கம்

ஒரு கொலையை நேரில் கண்டவர், கொலையை செய்தவர், கொலையாளியை கண்டுபிடிக்கும் அதிகாரி என மூன்று பேரை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளி பற்றி பல ட்விட்ஸ்களுடன் சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்துள்ளனர்.

ஐடென்டிட்டி விமர்சனம்

உடை மாற்றும் அறையில் பெண்களை வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் நபர் கொலை செய்யப்படுகிறார். கொலை செய்த நபரை திரிஷா அடையாளம் காண்கிறார். வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக வினய் நடித்திருக்கிறார். கொலை செய்த நபரை கண்டுபிடிக்க டோவினோ தாமஸ் வினய்க்கு உதவுகிறார். பெங்களூருவில் பணியாற்றும் திரிஷா கோவைக்கு வந்து கொலையை கண்டது எப்படி ? டோவினோ தாமஸிற்கும் கொலை செய்யப்பட்ட நபருக்குமான தொடர்பு, வினய் இந்த வழக்கை தனிப்பட்ட முறையில் விசாரிக்க என்ன காரணம் என பல விஷயங்களை ஒற்றை புள்ளியில் முடித்து கிளைமேக்ஸ் நோக்கி படம் நகர்கிறது.

ஐடென்டிட்டி பாஸிட்டிவ்ஸ்

  • படத்தின் முதல் பாதி எளிதில் கணிக்கும் வகையில் இருந்தாலும் சுவாரஸ்யமாகவே கதை நகர்கிறது.
  • இடைவேளை காட்சியில் சொல்லப்படும் ட்விஸ்ட் கொஞ்சம் புதிது.
  • படத்தில் பாடல்கள் இல்லாதது மலையாள த்ரில்லர் படங்களுக்கான முத்திரை.
  • மலையாள சினிமாவில் பெரிதும் செட் போட்டு தயாரிப்புக்கு செலவு செய்யமாட்டார்கள். இந்த படத்தில் செலவு செய்து எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்துமே நன்றாக இருந்தன.
  • சண்டை காட்சிகளை ரசிக்கும் வகையில் எடுத்துள்ளனர்.

மேலும் படிங்ககிச்சா சுதீப்பின் மேக்ஸ் திரைப்படம் விமர்சனம்; நம்பி வாங்க சந்தோஷமா போங்க

ஐடென்டிட்டி படத்தின் நெகட்டிவ்ஸ்

  • முதல் பாதி வேறு கதைக்களத்திலும், இரண்டாம் பாதி முற்றிலும் வேறு கதைக்களத்திலும் பயணிக்கிறது.
  • 1 மணி நேரம் 40 நிமிடங்களில் முடித்திருக்க வேண்டிய படத்தை வலுக்கட்டாயமாக 2 மணி நேரம் 30 நிமிடங்களுக்கு ஜவ்வாக இழுத்திருக்கின்றனர்.
  • படத்தின் ஆரம்ப காட்சியில் டோவினோ தாமஸ் பற்றி சொல்லப்பட்ட மருத்துவ தகவல் அதன் பிறகு வேறு எந்த இடத்திலும் பிரதிபலிக்கவில்லை.
  • படம் முழுக்க திரிஷா வந்தாலும் அவருடைய கதாபாத்திரம் தொய்வை ஏற்படுத்துகிறது.
  • வினய்யின் வில்லத்தனம் எந்த விதத்திலும் திரையில் தாக்கத்தை தரவில்லை.
  • ஒரு கட்டத்திற்கு மேல் ட்விஸ்ட் ட்விஸ்ட் என ஆடியன்ஸை குழப்பி தலைவலியை தருகின்றனர்.

ரேட்டிங் - 2.25 / 5

இரட்டா, திரிஷ்யம், துருவங்கள் 16 படங்களை போல த்ரில்லராக ஐடென்டிட்டி இருக்கும் என படம் பார்க்கும் நபர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP