herzindagi
leo movie director

Top 10 Theatrical Movies : ஐ.எம்.டி.பி டாப் 10 படங்களில் ஜெயிலர், லியோ

 2023ன் மிக பிரபலமான இந்திய படங்களின் டாப் 10 பட்டியலில் ரஜினிகாந்தின் ஜெயிலர், விஜய்யின் லியோ திரைப்படங்கள் இடம்பிடித்துள்ளன.
Editorial
Updated:- 2023-12-12, 21:52 IST

உலகளவில் வெளியாகும் அனைத்து படங்களின் தகவல்களைச் சேமித்து வைத்திருக்கும் ஐ.எம்.டி.பி இணையதளம் 2023ன் பிரபலமான டாப் 10 இந்திய படங்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில் இரண்டு தமிழ் திரைப்படங்கள் இடம்பிடித்துள்ளன. ஓடிடியில் நேரடியாக வெளியான பிரபலமான டாப் 10 படங்களிலும், பிரபலமான வெப் தொடர்களிலும் தமிழ் படங்களோ அல்லது தமிழ் வெப் தொடர்களோ இடம்பிடிக்கவில்லை.

top movies , ott

திரையரங்குகளில் வெளியான டாப் 10 பாங்களில் முதலிடத்தை பிடித்திருப்பது ஷாருக்கானின் ஜவான் திரைப்படம். இந்தப் படத்தை அட்லி இயக்கி இருந்தார். படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி ஆகியோர் நடித்திருந்தனர். 2k கிட்ஸின் ஃபேவரைட் அனிருத் படத்திற்கு இசையமைத்திருந்தார். ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாகாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது இடத்தையும் ஷாருக்கானின் திரைப்படமே பிடித்துள்ளது. ஜவானுக்கு முன்னதாக வெளியாகியிருந்த பதான் திரைப்படமும் ஷாருக்கானுக்கு கம்பேக் படமாக அமைந்தது. 

லியோ

top  theatre movies

நான்காவது இடத்தை நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் பெற்றுள்ளது. இதற்கான விருது இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் வழங்கப்பட்டு இருக்கிறது. LCU-வில் இந்தப் படம் இருக்குமா இருக்காதா என்ற மர்மத்தை ஒரு வருடம் ரகசியமாக வைத்திருந்ததற்காகவே லோகேஷிற்கு இந்த விருதைத் தாராளமாகக் கொடுக்கலாம்.

மேலும் படிங்க “கைகோர்ப்போம் துயர்துடைப்போம்” - ரசிகர்களுக்கு நடிகர் விஜய்யின் அன்பு கட்டளை

ஜெயிலர் 

jailer movie

ஆறாவது இடத்தைச் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் திரைப்படம் பிடித்துள்ளது. படம் வெளியாகும் வரை எதிர்பார்ப்பு குறைவாக இருந்தாலும் அது வெளியான பிறகு பெற்ற விமர்சனங்களால் இரண்டு மாதங்களுக்கு ஜெயிலர் அலை அடித்தது. இந்தப் படம் 575 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கத்தார் 2 , சர்ச்சைக்குரிய படமான கேரளா ஸ்டோரி , கைதியின் ரீமேக் போலா ஆகிய படங்களும் 2023ன் பிரபலமான திரையரங்கு வெளியீட்டு படங்களின் டாப் 10 பட்டியலில் இருக்கின்றன.

மேலும் படிங்க எம்.எல்.ஏக்களை காணோம்! இறங்கி வேலை செய்யுங்க - நடிகர் விஷால் அதிரடி

ஓடிடி வெளியீட்டின் டாப் 10 படங்களில் தமன்னா நடிப்பில் வெளிவந்த லஸ்ட் ஸ்டோரீஸ் 2 திரைப்படம் முதல் இடத்தில் உள்ளது. 2023ன் மிகப் பிரபலமான வெப் தொடர்களின் பட்டியலில் விஜய் சேதுபதியின் ஃபர்ஜி தொடர் முதலிடம் பிடித்துள்ளது. ஆனால் இது முழுக்க முழுக்க இந்தியில் எடுக்கப்பட்டு தமிழில் டப் செய்யப்பட்ட தொடராகும். 

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]