herzindagi
actor vijay requests fans

Actor Vijay requests Fans : “கைகோர்ப்போம் துயர்துடைப்போம்” - ரசிகர்களுக்கு நடிகர் விஜய்யின் அன்பு கட்டளை

மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் உதவ வேண்டும் என நடிகர் விஜய் கட்டளையிட்டுள்ளார்.
Editorial
Updated:- 2023-12-12, 22:02 IST

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு நகர மக்களின் வாழ்க்கையை மிக்ஜாம் புயல் கடுமையாகப் புரட்டிப் போட்டுள்ளது. கடந்த மழை வெள்ள பாதிப்புளின் போது தன்னார்வலர்கள் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவுவதை பார்க்க முடிந்தது. ஆனால் இம்முறை நிலைமை சீரடைந்து விட்டதாக அரசு ஏற்படுத்த முயன்ற பிம்பத்தினால் அதிக தன்னார்வலர்களைக் களத்தில் காணமுடியவில்லை.

people in flood

இந்த நிலையில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு எக்ஸ் தளத்தின் மூலம் அன்பு கட்டளையிட்டுள்ளார். அவரது எக்ஸ் தளத்தின் பதிவில் கூறியிருப்பதாவது :  

மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் உதவ வேண்டும் என நடிகர் விஜய் கட்டளையிட்டுள்ளார்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாகக் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன.

மேலும் படிங்க “தவறான நிர்வாகம்” தமிழக அரசை சாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

கைகோர்ப்போம் துயர்துடைப்போம்

Help the people says Vijay

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியிலிருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன. இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாகத் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளைச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இதையடுத்து “கைகோர்ப்போம் துயர்துடைப்போம்” என்ற டேக் டிரெண்டாகி வருகிறது.

oil mixed in flood water

மேலும் படிங்க எம்.எல்.ஏக்களை காணோம்! இறங்கி வேலை செய்யுங்க - நடிகர் விஷால் அதிரடி

ஏற்கெனவே விஜய் மக்கள் இயத்தினர் நிவாரண முகாம்களுக்குச் சென்று உணவு, நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் நிலையில் நடிகர் விஜய்யின் இந்த அன்புக் கட்டளை அவர்களுக்குக் கூடுதல் உந்துதலாக அமைந்துள்ளது. மேலும் எண்ணூர் பகுதியில் வெள்ளிநீரில் எண்ணெய் கழிவுகள் கலந்த செய்தியை மக்கள் இயக்க நிர்வாகிகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். மழை வெள்ள நிவாரணப் பணிகளில் விஜய் ரசிகர்களின் ஈடுபாடு மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. 

 

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]