மத கத ராஜா விமர்சனம் : சுந்தர்.சி ஆக்‌ஷன், கவர்ச்சி, காமெடி ஃபார்முலா இனித்ததா ?

சுந்தர்.சி இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்துள்ள மத கத ராஜா திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம். சுமார் 12 ஆண்டுகள் கழித்து மத கத ராஜா வெளியாகியுள்ளது.
image

மத கத ராஜா விமர்சனம்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், நிதின் சத்யா, கிரிக்கெட் வீரர் ரமேஷ், அஞ்சலி, வரலட்சுமி, மனோ பாலா, சோனு சூட், மணிவண்ணன் உட்பட பலர் நடித்திருக்கும் படம் மத கத ராஜா. விஜய் ஆண்டனி இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். சிறு வயதில் இருந்து நண்பர்களான விஷால், சந்தானம், நிதின் சத்யா, ரமேஷ் பல வருடங்கள் கழித்து தங்களுடைய ஆசிரியரின் மகள் திருமணத்தில் சந்திக்கின்றனர். திருமணத்தில் ஏற்படும் சிக்கல்களை விஷால் தீர்த்து வைக்கிறார். இதையடுத்து தனது நண்பர்கள் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டதை அறிந்து அவர்களின் பிரதான எதிரியான சோனு சூட் உடன் மோத சென்னை செல்கிறார். சோனு சூட் உடனான மோதலில் விஷால் வென்றாரா ? இல்லையா ? என்பதே கிளைமேக்ஸ். 12 வருடங்களுக்கு முன்பே இப்படம் வெளியாகி இருந்தால் கலகலப்புக்கு பிறகு சுந்தர்.சியின் வெற்றி படங்களில் மத கத ராஜாவும் இணைந்திருக்கும்.

மத கத ராஜா கதைச் சுருக்கம்

நண்பர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை ஹீரோ எப்படி சாதுர்யமாக தீர்த்து வைக்கிறார் என்பதே கதை.

மத கத ராஜா பாஸிட்டிவ்ஸ்

  • படத்தின் பெரும்பாலான காமெடி காட்சிகள் நம்மை சிரிக்க வைக்கின்றன. குறிப்பாக இரண்டாம் பாதியில் மனோ பாலாவை வைத்து 10-15 நிமிடங்களுக்கு வரும் காட்சிகளுக்கு தியேட்டரில் ரசிகர்கள் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.
  • மணிவண்ணன், சிட்டி பாபு, மனோ பாலா ஆகியோர் நம்முடன் தற்போது இல்லையே என்ற வருத்தம் ஏற்படுகிறது.
  • காதல், கவர்ச்சி காட்சிகளில் அஞ்சலியும், வரலட்சுமியும் ஜொலிக்கின்றனர்.
  • விஜய் ஆண்டனியின் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் வேகத்தை எந்த விதத்திலும் குறைக்கவில்லை. டியர் லவ்வர் பாடல் நன்றாக இருந்தது.
  • பொங்கலுக்கு ஓரளவு ஜனரஞ்சகமான படத்தை கொடுத்த சுந்தர்.சிக்கு வாழ்த்துகள்.

மத கத ராஜா நெகட்டிவ்ஸ்

  • ஹீரோவுக்கும் வில்லனுக்கும் இடையேயான மோதல் ரசிக்கும்படி இல்லை. டெல்லி அரசியல் முதல் தமிழக அரசியல் வரை கலக்கும் வில்லன் ஹீரோ விஷாலிடம் சொற்ப விஷயங்களில் எல்லாம் சிக்கி கொள்கிறார்.
  • விஷால் பேசும் சில பஞ்ச் வசனங்களை நீக்கி இருக்கலாம். 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி இருப்பதால் துளியும் ஒட்டவில்லை.
  • முதல் பாதியில் படத்தின் நீளத்தை இன்னுமும் குறைத்திருக்கலாம். சண்டை காட்சிகள் அதர பழசு.

ரேட்டிங் - 3/5

அடுத்த பொங்கலுக்கு இதே கூட்டணியில் சுந்தர்.சி கொஞ்சம் புது மசாலா அரைத்து படம் இயக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP