டிடி ரிட்டர்ன்ஸ் 2 அடுத்த லெவல் : மீண்டும் சந்தானம் - ஆர்யா காம்போ

2023ல் மிகப்பெரிய வெற்றி பெற்ற டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் 2ஆம் பாகம் இந்தாண்டு வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சந்தானம், செல்வராகவன், கெளதம் வாசுதேவ் மேனன், கஸ்தூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
image

2023ல் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்து வெளிவந்த டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக சுரபி நடித்திருந்தார். விஜயன், பிரதீப் சிங், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மாறன், முனீஷ்காந்த், டைகர் தங்கதுரை, லொள்ளு சபா மனோகர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த நிலையில் பிரேம் ஆனந்த் சந்தானம் கூட்டணியில் டிடி ரிட்டர்ன்ஸ் 2 உருவாகியுள்ளது. இதில் செல்வராகவன், கெளதம் வாசுதேவ் மேனன், கஸ்தூரி சங்கர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். நடிகர் ஆர்யா டிடி ரிட்டர்ன்ஸ் 2 படத்தை தயாரித்துள்ளார்.

டிடி ரிட்டர்ன்ஸ் 2

சந்தானம், ஆர்யா, கஸ்தூரி சங்கர், கெளதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் நெக்ஸ்ட் லெவல் என போஸ்டர் பகிர்ந்திருந்தனர். என்னவாக இருக்கும் என ரசிகர்கள் சந்தேகித்த நிலையில் கோலிவுட் வட்டார தகவலின்படி போஸ்டரானது டிடி ரிட்டர்ன்ஸ் ( தில்லுக்கு துட்டு ) 2ஆம் பாகத்தின் அப்டேட் என தெரியவந்துள்ளது. நடிகர் ஆர்யா இந்த போஸ்டரை வெளியிட்டதால் பாஸ் என்கிற பாஸ்கரன், வாசுவும் சரவணனும் வரிசையில் மீண்டும் கூட்டணி உருவாகிறதோ என ரசிகர்களுக்கு கேள்வி எழுந்தது. ஆனால் சந்தானத்திற்காக நடிகர் ஆர்யா இந்த படத்தை தயாரித்துள்ளார்.

டிடி ரிட்டர்ன்ஸ் கதை

பாண்டிச்சேரியில் உள்ள ஒரு பழைய பங்களாவில் ஹுரோ சந்தானம், சுரபி, அவருடைய நண்பர்கள் சிக்கி கொள்வார்கள். பேய்களிடம் இருந்து தப்பிக்க 4 லெவல் உள்ள போட்டியில் வெல்ல வேண்டும். உள்ளே சென்ற யாரும் உயிருடன் திரும்பாத நிலையில் சந்தானம் பேய்களையே ஏமாற்றி அங்கிருந்து காதலியோடு தப்பிவிடுவார். இதை நகைச்சுவையாக எடுத்திருப்பார்கள். தற்போது டிடி ரிட்டர்ன்ஸ் 2 அதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.

இந்த படம் குறித்து கெளதம் வாசுதேவ் மேனன் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். சினிமாவில் நடிப்பதற்கு தனக்கு துளியும் விருப்பமில்லை எனினும் இயக்குநர்கள் கேட்பதால் தன்னால் மறுக்க முடியவில்லை எனக் கூறியிருந்தார். மேலும் சந்தானத்திற்காக ஒரு காமெடி படத்தில் மிகவும் சீரியஸான கதாபாத்திரத்தில் நடிப்பதாக டிடி ரிட்டர்ன்ஸ் 2 பற்றி தகவல் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் டிடி ரிட்டர்ன்ஸ் 2 போஸ்டர் வெளியாகியுள்ளது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP