உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான விக்ரம் வசூல் மழை பொழிந்தது. தமிழ் சினிமாவுக்கு மைல்கல் போல அமைந்த இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து காளிதாஸ் ஜெயராமன், சந்தான பாரதி, நரேன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தனர். இவர்களுடன் இணைந்து ஏஜெண்ட் டீனா ரோலில் நடித்தவர் நடிகை வசந்தி.
கிட்டத்தட்ட 30 வருடங்களாக சினிமா துறையில் பயணித்து கொண்டிருக்கிறார். ஆனால் இதுவரை கிடைக்காத பேரும் புகழும் அவருக்கு விக்ரம் படம் மூலம் கிடைத்தது. படத்தில் ஏஜெண்ட் டீனா ரோலில் தெறிக்க விட்டார் வசந்தி. படத்தில் ஆரம்பத்தில் இருந்தே அமைதியாகவே இருந்தவர், கிளைமேக்ஸில் புயலாக மாறுவார்.
இந்த பதிவும் உதவலாம்:பேலியோ டயட்டால் உயிரிழந்த பிரபல நடிகரின் மனைவி; ஆபத்தானதா பேலியோ டயட்?
அந்த சீன்களை தியேட்டரில் பார்க்கும் போது ரசிகர்கள் விசில் மழை பொழிந்தனர். அதுமட்டுமில்லை விக்ரம் படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து அடுத்தத்தடுத்த படங்களில் வசந்திக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதற்கு முன்பு அவர் பணியாற்றிய படங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.
கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் உதவி நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார் வசந்தி. அஜித், விஜய், விக்ரம், ரஜினிகாந்த் என பல ஸ்டார்களுடன் இணைந்து 100க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி இருக்கிறார். தமிழ் மட்டுமில்லை தெலுங்கிலும் இவரின் உழைப்பு ஏராளம் உள்ளது. நயன்தாரா, விஜய், அஜித், சூர்யா என டாப் ஸ்டார்களுக்கு இவர் கோரியோகிராப்பராக இருந்தும் லோகேஷ் கனகராஜ் கொடுத்த நடிப்பு வாய்ப்பு வசந்தியை அனைத்து தரப்பினருக்கும் தெரிய வைத்துள்ளது.
விஜய் நடித்த பகவதில் படத்தில் ’அள்ளு அள்ளு’ பாடலிலும், அஜித் நடித்த வில்லன் படத்தில் 'அடிச்சா நெத்தி அடி' பாடலிலும் குழு டான்ஸ்கர்களில் ஒருவராக வசந்தி நடனம் ஆடியிருப்பார். டான்ஸ் மாஸ்டர் தினேஷ், பிருந்தா, கலா மாஸ்டர் என அனைத்து முன்னணி நடன இயக்குனர்களுடனும் வசந்தி பணியாற்றியுள்ளார். விக்ரம் படம் அவரை சிறந்த நடிகையாகவும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. வசந்தியின் நடிப்பு பயணம் கோலிவுட்டில் மேலும் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த பதிவும் உதவலாம்:நடிகை அனுஷ்காவை தாக்கிய சிரிப்பு நோய்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]