2024ஆம் ஆண்டில் 100க்கும் அதிமகான தமிழ் படங்கள் வெளியாகின. இந்த எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அளவிற்கு சரியான ரிலீஸ் தேதி, போதிய திரையரங்குகள் கிடைக்காத காரணம், பணப் பிரச்னை காரணமாக வெளியாகவில்லை. 2024ல் வசூல் ரீதியாக முதல் 10 இடங்களை பிடிக்கும் தமிழ் படங்களை இந்த பதிவில் பார்க்கலாம். கலவையான விமர்சனங்களை பெற்ற படங்களும் கூட ஹீரோவின் மாஸ் காரணமாக ஓரளவு வசூல் ஈட்டியுள்ளன. யாரும் எதிர்பாராத லப்பர் பந்து திரைப்படம் பட்ஜெட்டை விட 10 மடங்கு அதிக வசூல் ஈட்டியுள்ளது.
கோட் (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்)
வெங்கட் பிரபு இயக்கத்தில் இரட்டை வேடத்தில் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், திரிஷா, லைலா, மீனாட்சி சவுத்ரி, சிநேகா, மோகன், ஜெயராம் நடிப்பில் மல்டி ஸ்டாரர் படமாக வெளிவந்த கோட் திரைப்படம் 460 கோடி ரூபாய் வசூலித்ததாக ஐஎம்டிபி தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பட்ஜெட் 350 கோடி ரூபாய் ஆகும். திரையரங்க வெளியீட்டிற்கு முன்பாகவே பாடல் உரிமை, டிஜிட்டல் உரிமை, டிவி ஒளிபரப்பு உரிமை என 185 கோடி ரூபாயை பெற்றது கோட் திரைப்படம். படத்தில் பல பேட்ச் வொர்க் செய்தும் படம் சுமாராகவே இருந்ததால் லியோ பெற்ற வசூலை தொட முடியவில்லை.
அமரன்
மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்தியேகன், சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி மிகப்பெரிய வசூலை குவித்துள்ளது. 100 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த படம் 330 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அஜித், விஜய்க்கு அடுத்தபடியான இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்துள்ளார்.
வேட்டையன்
200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட வேட்டையன் திரைப்படம் வசூல் ரீதியாக 255 கோடி பெற்று தப்பினாலும் ரசிகர்களால் சுமாரான படமாகவே கருதப்பட்டது. ஏராளமான லாஜிக் மிஸ்டேக் படத்தில் இருந்தது. ரஜினியின் மாஸை வேட்டையனில் ஜெய்பீம் ஞானவேலால் பிரதிபலிக்க முடியவில்லை.
மகாராஜா
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாச்சனா, அபிராமி, அனுராக் காஷ்யப், பாரதிராஜா நடித்திருந்த மகாராஜா திரைப்படம் இந்த வருடத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் படமாகும். 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 170 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. சமீபத்தில் சீனாவிலும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இது விஜய் சேதுபதிக்கு 50வது படமாகும்.
ராயன்
தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் 156 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக ஐஎம்டிபி தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை. தயாரிப்பு குழுவும் படம் வெற்றி அடைந்ததாக தனுஷிற்கு காசோலை ஒன்றையும் வழங்கியது.
மேலும் படிங்க2024ன் பிரபலமான இந்திய படங்கள் : மகாராஜா, கல்கி, லாபடா லேடீஸ்; ஐஎம்டிபி தகவல்
இந்தியன் 2
இந்த வருடத்தின் மிகப்பெரிய தோல்வி படம் என்றால் இந்தியன் 2-ஐ குறிப்பிடலாம். 250 கோடி பட்ஜெட்டில் இந்தியன் 2, இந்தியன் 3 எடுக்கப்பட்ட நிலையில் இந்தியன் 2 உலகளவில் 150 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது.
கங்குவா
2000 கோடி ரூபாய் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட கங்குவா வெறும் 105 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து சூர்யாவுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. 300 கோடி ரூபாயில் இந்த படம் தயாரானது.
அரண்மனை 4
சுந்தர் சி.யின் அரண்மனை 4ஆம் பாகம் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 100 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. ராஷி கண்ணா, தமன்னா, யோகி பாபு நடித்திருந்தனர்.
அடுத்தடுத்த இடங்களில் அயலான், கேப்டன் மில்லர் ஆகிய படங்கள் உள்ளன. 5 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட லப்பர் பந்து திரைப்படம் 45 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation