
2024ல் ஜனவரி 1ஆம் தேதி முதல் நவம்பர் 25ஆம் தேதி வரை வெளியான இந்திய படங்களில் ஐஎம்டிபி பயனர் அளித்த ரேட்டிங்கின் அடிப்படையில் மிகப் பிரபலமான 10 இந்திய படங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு படத்திற்கும் ஐஎம்டிபி பயனர் 5 அல்லது அதற்கு மேலாக மதிப்பெண் வழங்கி இருப்பார். ஐஎம்டிபி தளத்தை உலகம் முழுக்க மாதந்தோறும் 250 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர். அதன் அடிப்படையில் 2024ஆம் ஆண்டின் பிரபலமான 10 இந்திய படங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, கமல்ஹாசன் நடிப்பில் பேன் இந்தியா படமாக வெளிவந்த கல்கி 2898 ஏடி இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. படத்தின் கீதை மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் கிராபிக்ஸ், தயாரிப்பு ஹாலிவுட் தரத்தில் இருந்தது. இரண்டாம் பாகமும் வெளிவரும் என படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். ஐஎம்டிபி தளத்தில் படத்தின் ரேட்டிங் 7/10.
பாலிவுட் படமான ஸ்ட்ரீ 2 500 கோடி ரூபாய்க்கு மேலாக வசூல் செய்திருந்தது. ஷ்ரத்தா கபூர் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.
இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஒரே தமிழ் படம் மகாராஜா. நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாச்சனா, அனுராக் காஷ்யப் நடித்த இப்படம் ஓடிடி வெளியீட்டிற்கு பிறகு மிகவும் பிரபலமானது. தற்போது சீனாவிலும் வெளியாகி 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. மகாராஜா படத்தின் ஐஎம்டிபி ரேட்டிங் - 8.5/10
அஜய் தேவ்கான், ஜோதிகா, மாதவன் நடிப்பில் வெளியான சைத்தான் திரைப்படம் நான்காவது இடத்தில் உள்ளது.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிரித்திக் ரோஷன், தீபிகா படுகோனே, அனில் கபூர் நடித்திருந்த ஃபைட்டர் திரைப்படம் பிரபலமான இந்திய படங்களின் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. ஐஎம்டிபி ரேட்டிங் 6.2/10.
குனா குகைக்குள் விழுந்த நபரை உயிருடன் மீட்க நண்பர்கள் மேற்கொண்ட முயற்சியே மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம். உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் கேரள சினிமாவிற்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

கார்திக் ஆர்யன் நடித்த இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதன் ஐஎம்டிபி ரேட்டிங் 5.1/10. முதல் இரண்டு பாகங்கள் நன்றாக இருந்ததால் மூன்றாம் பாகத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருந்தது.
8, 9 வது இடங்களில் கில், மீண்டும் சிங்கம் ஆகிய படங்கள் இருக்கின்றன. இதில் அஜய் தேவ்கான், தீபிகா படுகோனே, கரீனா கபூர், அக்ஷய் குமார், ரன்வீர் சிங் என பெரும் பட்டாளமே நடித்திருந்தாலும் படம் படுதோல்வி அடைந்தது.
அமீர் கான் தயாரிப்பில் வெளிவந்த லாபடா லேடீஸ் திரைப்படம் இந்த பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளது. இதன் ஐஎம்டிபி ரேட்டிங் 8.4/10.
நவம்பர் மாதத்தோடு இந்த பட்டியல் நிறைவு செய்யப்பட்டுள்ளதால் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம் இதில் இடம்பெறவில்லை என புரிந்துகொள்ள முடிகிறது.
மேலும் படிங்க Top 10 Movies of 2023 : ஐ.எம்.டி.பி டாப் 10 மூவிஸ் - ஓப்பன்ஹெய்மர் முதலிடம்!
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]