மிஸ்டர்.ஹவுஸ்கீப்பிங் விமர்சனம் : ஹரி பாஸ்கர், லாஸ்லியாவின் காதல் காவியம் ரசிகர்களின் மனதை வென்றதா ?

அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஹரி பாஸ்கர், லாஸ்லியா, ராயன் நடிப்பில் வெளிவந்துள்ள மிஸ்டர்.ஹவுஸ்கீப்பிங் படத்தின் விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம். இன்றைய தலைமுறை காதல் ஜோடிகளின் பிரதிபலிப்பே மிஸ்டர்.ஹவுஸ்கீப்பிங் திரைப்படம்.
image

யூடியூப்பில் சில வருடங்களாக காணாமல் போன ஜம்ப் கட்ஸ் ஹரி பாஸ்கர் தனது ரசிகர்களை குஷிப்படுத்த பெரிய திரை வழியாக திரும்பியுள்ள படம் மிஸ்டர்.ஹவுஸ்கீப்பிங். அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள மிஸ்டர்.ஹவுஸ்கீப்பிங் படத்தில் லாஸ்லியா, ராயன், இளவரசு, ஷா ரா மற்றும் சில வழக்கமான முகங்கள் நடித்துள்ளனர். கடந்த 24ஆம் தேதி மிஸ்டர்.ஹவுஸ்கீப்பிங் படம் திரையரங்குகளில் வெளியானது. யூடியூப்பில் இருந்து திரையுலகிற்கு வந்திருக்கும் ஹரி பாஸ்கரின் நடிப்பு எப்படி ? செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா காதல் காட்சிகளில் கவர்ந்தாரா ? சின்னத்திரை நாயகன் ராயன் வெள்ளித்திரையில் ஜொலித்தாரா ? உள்ளிட்டவற்றை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

மிஸ்டர்.ஹவுஸ்கீப்பிங் கதைச்சுருக்கம்

டேட்டிங், லிவின், வைப் கலாச்சாரத்தில் உண்மையான காதல் உறவை கண்டுபிடிக்கலாம் என நினைக்கும் இன்றைய தலைமுறைக்கு புத்தியில் உரைக்கும்படி அறிவுரை சொல்லியிருக்கிறார்கள்.

மிஸ்டர்.ஹவுஸ்கீப்பிங் விமர்சனம்

கல்லூரியில் ஒன்றாக படித்த ஹரி பாஸ்கரும், லாஸ்லியாவும் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கின்றனர். கல்லூரியில் ஹரிபாஸ்கருடன் பழகுவதை தவிர்த்த லாஸ்லியா ஹவுஸ்கீப்பிங் பணியில் ஜாலியாக பழகுகிறார். பெஸ்டி கலாச்சாரம் புரியாத ஹரி பாஸ்கர் லாஸ்லியா தன்னை காதலிப்பதாக நினைக்கிறார். லாஸ்லியாவுக்கு நிச்சயதார்த்தம் அரங்கேற மனம் உடைகிறார் ஹரி பாஸ்கர். இதன் பிறகு என்ன நடந்தது என்பதே மிஸ்டர்.ஹவுஸ்கீப்பிங் படத்தின் கதை.

மிஸ்டர்.ஹவுஸ்கீப்பிங் படத்தின் பாஸிட்டிவ்ஸ்

  • யூடியூப் நடிப்பிற்கும் திரை நடிப்பிற்கும் முழு வித்தியாசம் காட்டி ஹரி பாஸ்கர் அசத்தியிருக்கிறார். பெரும்பாலான காட்சிகளில் யூடியூப் சாயல் தெரியாமல் ஸ்கோர் செய்கிறார்.
  • அழுத்தம் நிறைந்த கதாபாத்திரத்திற்கு அலட்சியமாக நடித்திருக்கிறார் லாஸ்லியா. தமிழில் இன்னும் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க போகிறது.
  • ராயன், இளவரசு, ஷா ரா, ஹரி பாஸ்கரின் அம்மா கதாபாத்திரம் ஆகியோர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
  • படத்தில் காமெடிக்கு பஞ்சமில்லை. ஆரம்பம் முதல் இறுதிவரை ரசிகர்களை கலகலப்புடன் வைத்திருக்கின்றனர். இடைவேளை காட்சி அமர்க்களம்.
  • எங்கும் தடையின்றி ஒரே வேகத்தில் படம் செல்வது பாராட்டுக்குரியது.

மேலும் படிங்க ரேகாசித்ரம் விமர்சனம் : ஆசிப் அலியின் க்ரைம் த்ரில்லர் படம் எப்படி இருக்கு ?

மிஸ்டர்.ஹவுஸ்கீப்பிங் படத்தின் நெகட்டிவ்ஸ்

  • பாடல்கள் படத்தின் வேகத்திற்கு தடைபோடவில்லை என்றாலும் நம் மனதில் துளியும் ஒட்டவில்லை.
  • திரையில் வருபவர் பிக்பாஸ் லாஸ்லியாவா என ரசிகர்களுக்கே அடையாளம் தெரியவில்லை. உடல் எடை குறைத்து மேக்கப் போட்ட ரோபாவாக படத்தில் சுற்றி வருகிறார்.
  • வழக்கமான காதல் காட்சிகளால் சில இடங்களில் சலிப்பு ஏற்படுகிறது.
  • ஏற்கெனவே லிவின் உறவில் இருக்கும் ஒரு நபருக்கு மற்றொரு பெண் மீது எப்படி உண்மையான காதல் வரும் என காட்சிப்படுத்துதலில் இயக்குநர் சற்று சொதப்பிவிட்டார்.

மிஸ்டர்.ஹவுஸ்கீப்பிங் ரேட்டிங் - 3/5

காதலர் தினத்தன்று ரிலீஸ் செய்ய வேண்டிய படத்தை ஏன் 20 நாட்களுக்கு முன்பே ரிலீஸ் செய்தார்கள் என தெரியவில்லை.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP