ஜோஃபின் டி.சக்கோ இயக்கத்தில் ஜனவரி 9ஆம் தேதி வெளிவந்த படம் ரேகாசித்ரம். ஆசிப் அலி, அணஸ்வரா ராஜன், மனோஜ் ஜெயன், ஹரிஸ்ரீ அசோகன், சித்திக், இந்திரன்ஸ், ஜெகதீஷ், பாமா அருண் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2 மணி நேரம் ஓடும் ரேகாசித்ரம் மலையாள க்ரைம் த்ரில்லர் படங்களை ரசிக்கும் நபர்களுக்காகவே எடுக்கப்பட்டுள்ளது. வாருங்கள் இந்த பதிவில் ரேகாசித்ரம் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
ரேகாசித்ரம் கதைச் சுருக்கம்
30 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த கொலையில் வெறும் எலும்புக்கூடு வைத்துக்கொண்டு ஹீரோ குற்றவாளிகளை தேடுகிறார். பல்வேறு சவால்கள் கொண்ட இந்த வழக்கை அவர் எப்படி வெற்றிகரமாக முடிக்கிறார் என்பதே கதை.
ரேகாசித்ரம் விமர்சனம்
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் அதிகாரி ஆசிப் அலி மீண்டும் பணியில் சேரும் போது தற்கொலை சம்பவம் நடக்கிறது. விசாரிக்க சென்ற இடத்தில் தற்கொலை செய்து கொண்ட நபர் தான் ஒரு கொலைகாரர் என சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு கொலை செய்யப்பட்ட பெண் இருக்கும் இடத்திலேயே இறந்து விடுகிறார். பெண்ணின் உடலை எடுத்த பிறகு விசாரணை தீவிரம் அடைகிறது. 30 வருடங்களுக்கு முன்பு நடந்த கொலை என்பதால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் கடும் சிக்கல் நிலவுகிறது. இதையெல்லாம் மீறி ஹீரோ அசிப் அலி குற்றவாளிகளை கண்டுபிடிப்பதே ரேகாசித்ரம் படம்.
ரேகாசித்ரம் படத்தின் பாஸிட்டிவ்ஸ்
- படத்தில் நடித்த அனைவருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சித்தமாக செய்துள்ளனர்.
- குறைவான தடயங்களை கொண்டு ஹீரோ குற்றவாளிகளை தேடும் விதம் சுவாரஸ்யமாக இருந்தது.
- செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி மம்மூட்டியை முக்கியமான காட்சிகளுக்கு பயன்படுத்தி அசத்தியுள்ளனர்.
- பாடல்களுக்கும், பின்னணி இசையும் படத்தின் வேகத்தை குறைக்கவில்லை.
- முதல் பாதியிலேயே யார் குற்றவாளி என ரசிகர்களால் கண்டுபிடிக்க முடிந்தாலும் இரண்டாம் பாதியில் கொலைக்கான காரணத்தை ட்விஸ்ட் கலந்து சொல்லிய விதம் அற்புதம்.
- மலையாள திரையுலகில் எண்ணற்ற க்ரைம் த்ரில்லர் படங்கள் வந்திருந்தாலும் பிற படங்களின் சாயல் இல்லாதவாறு திரைக்கதை அமைத்த படக்குழுவுக்கு பாராட்டுக்கள்.
- வழக்கில் பின்னடைவு ஏற்படும் போதெல்லாம் அடுத்தடுத்த தடயம் கிடைப்பது கொலை செய்யப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் கிடைக்கவே என்பதை நம் மனதில் பதியவைத்து விடுகின்றனர்.
- 30 ஆண்டுகளுக்கு முன்பு சினிமா படப்பிடிப்பு தலங்கள் பற்றி விளக்கிய விதமும் ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
ரேகாசித்ரம் படத்தின் நெகட்டிவ்ஸ்
- படத்தின் நீளத்தை 20 நிமிடங்கள் வரை குறைத்திருக்கலாம்.
ரேகாசித்ரம் ரேட்டிங் - 3.75 / 5
படத்தில் உண்மையான குற்றவாளியே மம்மூட்டி தான். படம் பார்ப்பவர்களுக்கு இது புரியம். தேவ தூதர் பாடி பாடலை இனி மலையாள சினிமா ரசிகர்கள் மறக்கமாட்டார்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation