Vidaamuyarchi Review : ஹாலிவுட் தரத்தில் அஜித்தின் திரைப்படம்; தல ரசிகர்கள் கொண்டாட்டம்

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்துள்ள விடாமுயற்சி படத்தின் விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம். 2 வருடங்களுக்கு பிறகு திரையில் தோன்றிய அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
image

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ், ரம்யா சுப்ரமணியன் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. விடாமுயற்சி திரைப்படம் தமிழகத்தில் சோலோ ரிலீசாக வெளிவந்துள்ளது. பிப்ரவரி 6 மற்றும் பிப்ரவரி 7ஆம் தேதிகளுக்கு காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. 2 வருடங்களுக்கு (துணிவு) பிறகு திரையில் தோன்றிய அஜித்தின் திரைப்படத்தை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். பொங்கலுக்கு வெளியாக வேண்டிய திரைப்படம் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் ஒரு மாதம் கழித்து இன்று வெளியாகியுள்ளது.

விடாமுயற்சி கதைச் சுருக்கம்

பாலைவன பகுதியில் அஜித் - த்ரிஷா ஜோடி மனித கடத்தல் செய்யும் கும்படலிடம் சிக்கி கொள்கின்றனர். த்ரிஷா கடத்தப்படுகிறார். அவரை அஜித் எப்படி கண்டுபிடித்து மீட்கிறார் என்பதே விடாமுயற்சி.

விடாமுயற்சி விமர்சனம்

காதலித்து திருமணம் செய்து கொண்டு 12 ஆண்டுகள் சந்தோஷமாக வாழும் அஜித் - த்ரிஷா பரஸ்பரமாக விவாகரத்து முடிவெடுக்கின்றனர். த்ரிஷாவுக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதை தெரிந்து அஜித் மனம் உடைந்து போகிறார். த்ரிஷாவை அவரது வீட்டிற்கு அழைத்து செல்ல ஒரு பாலைவன நெடுஞ்சாலையில் பயணிக்கின்றனர். அங்கு எதிர்பாராதவிதமாக பெண் கடத்தல் கும்படலிடம் த்ரிஷா சிக்கி கொள்கிறார். அதன் பிறகு அஜித்தின் மனம் தளராத கடுமையான போராட்டமே விடாமுயற்சி. முதல் பாதி யதார்த்தமாகவும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும் இருக்கிறது.

விடாமுயற்சி படத்தின் பாஸிட்டிவ்ஸ்

  • கடந்த சில படங்களை விட அஜித்தின் மிகச் சிறந்த நடிப்பு வெளிப்பட்டு இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. காதல், கோபம், சண்டை, ஏமாற்றம், போராட்டம் என நவரச நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
  • ரெஜினா கசாண்டராவின் கதாபாத்திரம் மிரட்டல். அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரம்யா சுப்ரமணியன் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நடிப்பால் வலுசேர்த்துள்ளனர்.
  • அனிருத்தின் இசை படத்திற்கு பெரும் பலம். தேவையான இடங்களில் பின்னணி இசை கொடுத்து ஸ்கோர் செய்கிறார். என்னைக்கும் விடாமுயற்சி பாடலுக்கு திரையரங்கமே அதிர்ந்தது.
  • மிகவும் வழக்கமான கதை அஜர்பைஜானில் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
  • இயக்குநருக்கும், ஒளிப்புதிவு இயக்குநருக்கும் மிகுந்த பாராட்டுக்கள்.

மேலும் படிங்கடாமினிக் விமர்சனம் : மம்மூட்டியின் மலையாள துப்பறிவாளன் எப்படி இருக்கு ?

விடாமுயற்சி படத்தின் நெகட்டிவ்ஸ்

  • சண்டை காட்சிகளில் மிகுந்த கவனம் செலுத்திய இயக்குநர் மகிழ் திருமேனி ஒரு சொதப்பலான காட்சியை தேவையின்றி வைத்துள்ளார்.
  • இரண்டாம் பாதியில் இன்னும் சில காட்சிகளை கட் செய்திருக்கலாம்.
  • சி சென்டர் ஆடியன்ஸ் விடாமுயற்சி படத்துடன் கனெக்ட் ஆவார்களா ? தெரியாது.

விடாமுயற்சி ரேட்டிங் - 3.5/5

விவாகரத்து கோரும் ஏமாற்று மனைவியின் மனமாற்றம் நம்பும்படியாக இருந்திருக்கலாம். உண்மையாக காதலிக்கும் நபர் உறவில் விரிசலை தவிர்க்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது என விடாமுயற்சி படம் தோன்ற வைக்கிறது.

மொத்தத்தில் அஜித்தின் விடாமுயற்சி அவருடைய உழைப்புக்கு கிடைத்த வெற்றி.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP