herzindagi
image

Jailer 2 movie: ஜெயிலர் 2 எப்போது ரிலீஸ்? அப்டேட் கொடுத்த ரஜினி - உற்சாகத்தில் ரசிகர்கள்

Jailer 2 movie: ஜெயிலர் 2 திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரஜினிகாந்த் அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். விரைவில் இப்படத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
Editorial
Updated:- 2025-09-25, 13:13 IST

Jailer 2 movie: ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் தொடர்பான அப்டேட்டை ரஜினிகாந்த் கொடுத்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது இத்தகவலை அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: OG movie twitter review: பவன் கல்யாண் ரசிகர்களுக்கு விருந்து வைத்ததா 'ஓஜி' திரைப்படம்? ட்விட்டர் விமர்சனம் இதோ

 

ஜெயிலர் திரைப்படம்:

 

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர். பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரான இப்படம், வர்த்தக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சுமார் ரூ. 650 கோடி வரை இப்படம் வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Jailer 2 update

 

இப்படத்தில் ரஜினிகாந்த் மட்டுமின்றி ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ் ராஜ்குமார் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், ஜெயிலர் திரைப்படம் இயக்குநர் நெல்சனுக்கு கம்பேக்காக அமைந்தது. ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்கள் இடையேயும் ஜெயிலர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் படிக்க: பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்திய தமிழ் திரைப்படங்கள் குறித்து விரிவான பார்வை

 

ஜெயிலர் 2 அப்டேட்:

 

ஜெயிலர் திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியின் அடையாளமாக அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, முதல் பாகத்தில் இடம்பெற்ற பலரும் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான அப்டேட்டை ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Rajinikanth

 

அந்த வகையில், ஜெயிலர் 2 எப்போது ரிலீஸ் ஆகும் என ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ஜூன் மாதம் இப்படம் வெளியாகும் என்று ரஜினிகாந்த் பதிலளித்தார். இதனால் ரஜினிகாந்தின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இதனிடையே, ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் சமீபத்தில் வெளியான கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், வசூல் ரீதியாக சாதனை படைத்தது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் ஜெயிலர் 2 திரைப்படம் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Youtube

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]