herzindagi
image

OG movie twitter review: பவன் கல்யாண் ரசிகர்களுக்கு விருந்து வைத்ததா 'ஓஜி' திரைப்படம்? ட்விட்டர் விமர்சனம் இதோ

OG movie twitter review: பவன் கல்யாண் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகி இருக்கும் 'They Call Him OG' திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இப்படம் தொடர்பாக பலரும் தங்கள் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.
Editorial
Updated:- 2025-09-25, 11:49 IST

OG movie twitter review: பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வந்த 'They Call Him OG' திரைப்படத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி பல தரப்பினரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். அந்த வகையில், உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில்  'They Call Him OG' திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க: Housemates ott release: ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹவுஸ்மேட்ஸ் திரைப்படம்; எந்த ஓடிடி தளத்தில் எப்போது பார்க்கலாம்?

 

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் தற்போது ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார். இதனால் திரைப்படங்களில் கவனம் செலுத்துவதில் இருந்து சற்று இடைவெளி எடுத்துக் கொண்டார். மேலும், சமீபத்தில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ஹரிஹர வீர மல்லு திரைப்படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை.

 

இதனால், 'They Call Him OG' திரைப்படத்தை அவரது ரசிகர்கள் பெரிதும் நம்பி இருந்தனர். அதற்கு ஏற்றார் போல் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஆகியவற்றுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில், சுஜீத் இயக்கத்தில், டி.வி.வி நிறுவனம் சார்பாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம், இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படம் தொடர்பான ட்விட்டர் (எக்ஸ் தளம்) விமர்சனங்களை காணலாம்.

மேலும் படிக்க: Mirai twitter review: ஃபேண்டசி பாணியில் பார்வையாளர்களை ஈர்த்ததா மிராய் திரைப்படம்? ரசிகர்கள் ட்விட்டர் விமர்சனம்

 

They Call Him OG - ட்விட்டர் விமர்சனம்:

 

They Call Him OG திரைப்படம் குறித்து வெங்கி ரிவ்யூஸ் என்ற பக்கத்தில் "நாம் பார்த்து பழக்கப்பட்ட கேங்ஸ்டர் திரைப்படமாக ஓஜி இருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாகவும், ரசிகர்கள் விரும்பும் வகையிலும் சில காட்சிகள் இருந்தாலும் அவற்றை தவிர்த்து மற்ற அனைத்தும் சாதாரணமாக அமைந்துள்ளது.

 

திரைப்படத்தின் முதல் பாதி திருப்தி அளிக்கிறது. கதை மெதுவாக நகர்ந்தாலும், அது ஆர்வத்தை தூண்டுகிறது. அறிமுக காட்சியும், இடைவேளை பகுதியும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

 

ஆனால், இரண்டாம் பாதி அவ்வளவாக ஈர்க்கவில்லை. குறிப்பாக, தாக்கத்தை ஏற்படுத்தாத காட்சிகளால் நிறைந்துள்ளது. அதிகமான கதாபாத்திரங்கள் மற்றும் துணைக்கதைகள் காரணமாக சில சமயங்களில் குழப்பமாகவும் இருக்கிறது.

படத்தின் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், கிட்டத்தட்ட ஒவ்வொரு காட்சியும் அதீத பில்ட்-அப் போன்று தோன்றுகிறது. ஆனால், அதற்கு கச்சிதமான கதையமைப்பு இல்லை. ரசிகர்களுக்கு ஏற்ற தருணங்களை வழங்குவதில் சுஜீத் சிறந்து விளங்கினாலும், அவரால் ஒரு அழுத்தமான கதையையோ அல்லது சரியான உணர்ச்சிகளையோ உருவாக்க முடியவில்லை.

 

படத்தில் பவன் கல்யாண் தனித்து தெரிகிறார். சமீப நாட்களில் அவரை மிகச் சிறப்பாக காண்பித்த படமாக ஓஜி அமைகிறது. தமனின் இசை படத்திற்கு பெரும் பலம். அவரது இசை பல காட்சிகளை தாங்கிச் செல்கிறது. ஒளிப்பதிவும் மிகச் சிறப்பாக உள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா க்ளிட்ஸ் தெலுங்கு பக்கத்தில், "படத்தின் முதல் பாதி வேகமாக நகர்கிறது. பவன் கல்யாணின் ஸ்டைல் மற்றும் நடிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. இரண்டாம் பாதியிலும் ரசிகர்களை கவரும் வகையில் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஜப்பானிய ரெஃபரன்ஸ்களும் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. தமனின் இசை கூடுதல் பலம் சேர்க்கிறது. பவன் கல்யாண் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக இப்படத்தை சுஜீத் இயக்கி இருக்கிறார்" என்று பதிவிடப்பட்டுள்ளது.

இதேபோல் லெட்ஸ் எக்ஸ் ஓடிடி க்ளோபல் என்ற பக்கத்தில், "சுஜீத் இயக்கி இருக்கும் ஓஜி திரைப்படம் உணர்ச்சிகளை சரியாக கடத்த தவறி விட்டது. குறிப்பாக, இரண்டாம் பாதியில் படம் சறுக்கலை சந்தித்துள்ளது. பவன் கல்யாணின் அறிமுக காட்சி, இடைவேளை பகுதி மற்றும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் சில காட்சிகளை தவிர, இப்படம் ஆர்வத்தை தூண்டவில்லை.

பவன் கல்யாணின் திரை ஆளுமை மற்றும் தமனின் பின்னணி இசையை தவிர, படத்தில் ஆச்சரியமூட்டும் எந்த காரணிகளும் இல்லை. இரண்டாம் பாதியில் சில நல்ல தருணங்கள் இருந்தாலும், படம் பார்வையாளர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த சிரமப்படுகிறது. சிறந்த திரையனுபவத்திற்கு உங்கள் எதிர்பார்ப்புகளை குறைவாக வைத்துக் கொள்ளுங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Twitter

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]