கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் முதற்கட்டமாக ஐந்தாயிரம் பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர் பேரிடர்களுக்கு எதிர்காலத்தில் நாம் தயாராக வேண்டும் என்றும் பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசின் கடமை என்றும் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் ஏற்பட்டது சிற்றிடர் எனவும் தற்போது ஏற்பட்டுள்ளது பேரிடர் எனவும் கூறினார். எதிர்பார்த்ததை விட மழை அதிகமாகப் பெய்ததால் ஒரு கோடி பேரை அரசு எளிதில் சென்றடைவது சிரமம் எனத் தெரிவித்தார்.
நிவாரணப் பணிகளின் ஒரு பகுதியாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஐந்தாயிரம் குடும்பங்களுக்குப் பால் பவுடர், அரிசி, கோதுமை, ரவை, டீத்தூள், சர்க்கரை, உப்பு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பை வழங்கப்படுகிறது எனக் கமல்ஹாசன் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு.@ikamalhaasan அவர்கள் இன்று, கட்சியின் சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளைத் துவக்கி வைத்தார்.
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 8, 2023
புயலின் கோர தாண்டவத்தைப் பற்றி உடனுக்குடன் செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளர்களைப் பாராட்டினார். இதுபோன்ற… pic.twitter.com/KYjhvW1jgH
மேலும் படிங்க "இயன்றதை செய்வோம்" மாதர் பிரச்சினைக்கு உதவிய நடிகர் பார்த்திபன்
மேலும் தினமும் ஐந்தாயிரம் பேருக்கு உணவு தயாரித்து விநியோகிக்க கிச்சன் ஒன்று தொடங்கப்படுவதாகவும் சென்னையில் நிலைமை சீரடையும் வரை இப்பணி தொடரும் எனவும் கூறினார்.
மேலும் படிங்க “கைகோர்ப்போம் துயர்துடைப்போம்” - ரசிகர்களுக்கு நடிகர் விஜய்யின் அன்பு கட்டளை
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளைத் துவக்கி வைத்தபிறகு
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 8, 2023
மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு.@ikamalhaasan அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில்...#KamalHaasan#MakkalNeedhiMaiampic.twitter.com/B8yVKbMGQ0
மழைக்கால நோய்த்தொற்றுக்களைக் கருத்தில் கொண்டு மருத்துவ முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர்கள் நிகழாமல் இருக்கவும், நிகழ்ந்தால் நம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்குமான வழிமுறைகளை நிபுணர்களுடனும், அறிஞர்களுடனும் அரசு கலந்து பேசிப் புதிய வழிவகைகளைக் காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]