இன்றைய ராசிபலன் : இன்பத்தில் மிதக்க வாய்ப்புள்ள அந்த ராசிக்காரர்கள் யார் ?

இன்று ஜூலை 21ஆம் தேதி சர்வ ஏகாதசி. வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமையை சிறப்பாக தொடங்க வேண்டும் என்பது ஒவ்வொரு ராசிக்காரரின் விருப்பம். ஜோதிட கணிப்பின்படி இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி அமையும் என்பதை பார்க்கலாம்.
image

வாரத்தின் தொடக்க நாள் திங்கட்கிழமை சிறப்பாக அமைந்தாலே அவ்வாரம் முழுவதும் இனிமை தொடரும். இன்றைய நாள் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் உள்ளிட்ட 12 ராசிக்காரர்களுக்கு தொழில், ஆரோக்கியம், பண வரவு, மனநலன் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ளுங்கள்.

ஜூலை 21 ராசிபலன், 2025

மேஷம்

வீண் அலைச்சல் வேண்டாம். பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தால் மற்றொரு நாளுக்கு மாற்றுவிடவும். அலுவலகத்திற்கு தாமதமாக செல்லாதீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது நல்லது.

ரிஷபம்

நிதி விஷயத்தில் அதிர்ஷ்டத்தால் நன்மை நடக்க போகிறது. அலுவலகத்தில் பாராட்டு பெறுவீர்கள். உடல்நலனில் கூடுதல் அக்கறை தேவை. நேர்மறை விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தவும்.

மிதுனம்

நிதி விஷயத்தில் வரவு அதிகரிக்கும். பணி சூழலில் திடமான முடிகளை எடுப்பீர்கள். சில தொற்றுகளால் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. வெளிப்படைத்தன்மையுடன் பேசுவது உங்களுக்கு நல்லது.

கடகம்

பணிச்சூழலில் எல்லாவற்றுக்கும் ஆமாம் என தலையாட்டாதீர்கள். பணியிட மாறுதலுக்கு வாய்ப்புண்டு. உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவு இருக்காது. நல்ல விஷயங்களை பேசி புத்துணர்வு பெறுங்கள்.

சிம்மம்

வாழ்க்கை துணையிடம் சண்டை போடாதீர்கள். புதிய வேலை வாய்ப்புக்கான கனவு நிஜமாகும். கூடுதல் வருவாய் ஈட்டுவீர்கள். மனநலன் மேம்படும்.

கன்னி

பயணத்தால் அலைச்சல் ஏற்படலாம். தொழில் விஷயத்தில் இன்று உங்களுக்கு முக்கியமான நாளாகும். குடும்ப உறவிடம் இருந்து சோகமான செய்தி வரலாம்.

துலாம்

வாழ்க்கை துணையிடம் பிரச்னைகளை பேசி தீர்க்கவும். நிதி சார்ந்த விஷயத்தில் குடும்பத்திடம் ஆலோசனை பெறுவீர்கள். சரியாக தூங்காமல் அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள். நண்பர்களுடன் நேரம் செலவிடுவீர்கள்.

விருச்சிகம்

செலவை கட்டுப்படுத்த முயற்சிக்கவும். நண்பர்களுடன் நேரம் செலவிட்டு மகிழுங்கள்.

தனுசு

பேசுவதற்கு தயக்கம் காட்டாதீர்கள். நிதி விஷயத்தில் அக்கறை செலுத்த தொடங்குவீர்கள். பணிச் சூழல் சிரமமாக இருக்கலாம்.

மகரம்

வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். நிதி விஷயத்தில் தேவையானவற்றுக்கு மட்டும் செலவிடவும். மனநலனில் அக்கறை செலுத்தவும்.

கும்பம்

இன்று மட்டும் காரில் பயணிப்பதை தவிர்க்கவும். அலுவலகத்தில் உள்ள சிக்கல்களை திறம்பட சமாளிப்பீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். பழைய விஷயங்களை மறப்பதற்கு இன்றே சரியான நாள்.

மீனம்

அலுவலக பிரச்னைகளை பேசி தீர்க்கவும். ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படாது. எதிர்மறை சிந்தனைகளால் தாக்கம் உண்டாகும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP