herzindagi
image

இன்றைய ராசிபலன் : நிதி விஷயத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை ?

ஜூலை 8ஆம் தேதி என்ன எதிர்பார்க்கலாம் என காத்துகிடக்கும் ராசிக்கார்களுக்காக இந்த பதிவு. 12 ராசிகளுக்குமான ராசிபலன் இந்த பதிவில் கணிக்கப்பட்டுள்ளது.
Editorial
Updated:- 2025-07-08, 06:57 IST

வாரத்தின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை மங்களகரமான நாளாகும். சுபகாரியங்களுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை நாளில் செய்யும் செயல்கள் வெற்றி பெறும் என நம்பப்படுகிறது. ஜூலை 8 பிரதோஷ நாளான இன்று எந்த ராசிக்கார்களுக்கு எப்படி அமையப்போகிறது என்பதை பார்ப்போம்.

July 8 rasipalan

ஜூலை 8 ராசிபலன், 2025

மேஷம்

உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் நிகழப் போகும் நாள். நிதி சார்ந்த விஷயங்களில் நிலையான முடிவை எடுப்பீர்கள்.

ரிஷபம்

காதல் துணையிடம் முக்கியமான விஷயங்களை இன்று தயங்காமல் கேட்கவும். நட்பு வட்டாரம் பெருகும். முடிந்தவரை செலவினங்களை தவிர்க்கவும். வேலை காரணமாக சோர்வடைய வாய்ப்புண்டு. பேசும் விஷயங்களில் கவனமாக இருங்கள்.

மிதுனம்

ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வயிறு சார்ந்த பிரச்னையை சந்திக்க வாய்ப்புண்டு. தனிமையாக இருந்து மகிழ்ச்சியை இழக்காதீர்கள்.

கடகம்

துணையிடம் பொய் சொல்லி இருந்தால் கண்டிப்பாக சிக்கி கொள்வீர்கள். பணம் விரயமாக வாய்ப்புண்டு. ஆரோக்கியத்தில் எந்த பிரச்னையும் இருக்காது. குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்.

சிம்மம்

குடும்ப உறவுகளை தேடிச் சென்று சந்திப்பீர்கள். இன்று முழுவதும் சிந்தத்து செயல்படவும். வேலையில் சற்று தொய்வு ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி

சின்ன சின்ன விஷயங்களுக்காக சண்டை போடாதீர்கள். நிதி விஷயத்தில் எதிர்பாராத வருவாய் கிடைக்கும். பிடித்தமான நபர்களை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

துலாம்

வாய்ப்பு கிடைத்தால் அலுவலகம் செல்லாமல் விடுப்பு எடுக்கவும். ஆரோக்கியம் சீராக இருக்கும். இன்று திடீரென சோகமாக திடீரென மகிழ்ச்சியாக மாறி மாறி உணர்வீர்கள்.

விருச்சிகம்

காதல் / வாழ்க்கை துணையுடன் வெளியே சென்று மகிழ்வீர்கள். உங்களை சுற்றி நல்ல விஷயங்களே நடக்கும். சுறுசுறுப்பாக செயல்பட்டு தொழில் விஷயத்தில் இன்பமான தகவலை பெறுவீர்கள்.

தனுசு

காதல் வயப்பட வாய்ப்புண்டு. அலுவலகத்தில் அமைதியாக செயல்படவும். வீணாக பேசி வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள். சாப்பிடும் விஷயத்தில் கவனமாக இருக்கவும். ஆற்றலை தேவையின்றி வீணடிக்காதீர்கள். உலகில் பல பயனுள்ள விஷயங்கள் உள்ளன.

மகரம்

இன்று எந்தவொரு முதலீடுகளையும் தவிர்க்கவும். கடன் தொல்லையில் சிக்காதீர்கள். மனநலனில் அக்கறை செலுத்தவும். தேவையற்ற நபர்களுடனான உறவை துண்டிக்கவும்.

கும்பம்

நிதி விஷயத்தில் அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்கலாம். பணியில் முழுவீச்சில் செயல்பட வேண்டிய நாள். கழுத்து பகுதியில் வலி ஏற்பட வாய்ப்புண்டு. வாழ்க்கை எது தேவை என்பதில் இன்று முக்கியமான முடிவை எடுப்பீர்கள்.

மீனம்

நிதி சார்ந்த விஷயங்களை சிறப்பாக கையாள்வீர்கள். அலுவலகத்தில் சிரமம் இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களிடம் இருந்து முக்கியமான அறிவுரை பெறுவீர்கள்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]