கடினமாக உழைத்தால் வாழ்க்கையில் எந்த உயரத்தை வேண்டுமானாலும் அடையாளம் என்ற நம்பிக்கையோடு பயணிக்கும் ராசிக்காரர்களுக்கு ஜூலை 16ஆம் தேதி புதன்கிழமையில் என்னவெல்லாம் நடக்கலாம் என்பதை ஜோதிட கணிப்பின்படி சில தகவல்கள் இங்கே பகிரப்பட்டுள்ளது.
ஜூலை 16 ராசிபலன், 2025
மேஷம்
நண்பர்களுடன் பயணப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். நிதி சார்ந்த விஷயத்தில் திடமான முடிவை எடுப்பீர்கள். நடந்து முடிந்த விஷயங்களை மறப்பது நல்லது.
ரிஷபம்
முதலீடு செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் எவ்வித பிரச்னையும் இருக்காது. மனநலனில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்துடன் நேரம் செலவிட்டு மகிழவும்.
மிதுனம்
பணிக்கு தாமதமாக சென்று வம்பில் சிக்காதீர்கள். நேரத்திற்கு தூங்க தவறுவதால் ஆரோக்கியம் பாதிப்படையும். உங்களை சந்திக்க நண்பர்கள் ஆவலுடன் இருப்பார்கள்.
கடகம்
இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷடம் தரக்கூடியதாக அமையும். யாரிடமும் கடன் வாங்காதீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் மோதல் போக்கு வேண்டாம்.
சிம்மம்
தொழில் முன்னேற்றம் காண்பதற்கு நல்ல வாய்ப்புள்ளது. புத்துணர்வு பெற்றிட இயற்கையான தலங்களை நோக்கி பயணிப்பீர்கள். குடும்ப உறுப்புனர்கள், நண்பர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கவும்.
கன்னி
பயணங்கள் மகிழ்ச்சியை தரும். உங்களுடைய கடின உழைப்பிற்காக அலுவலகத்தில் அங்கீகாரம் கிடைக்க போகிறது. உடல்நலனுக்காக ஓய்வு எடுக்கவும்.
துலாம்
முன்னேற்ற பாதையை நோக்கி பயணிப்பதற்கான நேரமிது. புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். ஆரோக்கியம் சீராக இருக்கும். பொறுத்தார் பூமி ஆள்வார்.
விருச்சிகம்
காதல் உறவு முன்பாக பொறாமையுடன் நடிக்காதீர்கள். பணியில் சக ஊழியர்களால் வெறுப்பு உண்டாகும். நண்பர்களிடம் இருந்து நல்ல அறிவுரைகளை பெறுவீர்கள்.
தனுசு
நிதி விஷயத்தில் நல்ல முடிவை எடுப்பீர்கள். கொடுத்த வேலையை உரிய நேரத்திற்கு செய்து முடிக்கவும். கவனத்தை சிதறவிடாமல் இலட்சிய பாதையை நோக்கி பயணிப்பீர்கள்.
மகரம்
துணையிடம் உரையாடுவதில் கவனம் தேவை. நாள் முழுவதும் பொறுமையை கடைபிடியுங்கள். மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள். உங்களை தேடி முக்கியமான நபர் வரலாம்.
கும்பம்
நிதி விஷயத்தில் அதிர்ஷ்டம் அடிக்கும். சாப்பிடும் உணவில் கவனம் தேவை. பணியிடத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கலாம். தவறாமல் பயன்படுத்திக்கொள்ளவும். நண்பருக்கு தேவையான உதவியை செய்யுங்கள்.
மீனம்
நிதி விஷயத்தில் நல்லதே நடக்கப் போகிறது. கூடுதல் வருவாய் ஈட்ட வாய்ப்புண்டு. அலுவலகத்தில் சக ஊழியரால் தொல்லை ஏற்படும். பிடித்தமான நபர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation