ஜூலை 17ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை ஆடி மாதமாகும். உழவு தொழிலுக்கு முக்கியமான மாதம் ஆடி மாதம். தமிழ் நாட்காட்டியில் நான்காவது மாதமான ஆடி அம்மனுக்கு உகந்த மாதமாகும். ஆடி மாதத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தொழில், உடல்நலம், குடும்ப சூழல், பண வரவு எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ளுங்கள்.
ஆடி மாத ராசிபலன், 2025
மேஷம்
தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கலாம். சொத்துகள், சொந்தங்களால் வந்த பிரச்னைகள் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலே நிலவும்.
ரிஷபம்
குடும்பத்தில் சபச் செய்திகள் வந்த வண்ணம் இருக்கும். தொழில் வளம் பெருகி ஆதாயம் அதிகரிக்கும். உள்ளத்திலும், இல்லத்திலும் அமைதி கிடைக்கும். செவ்வாய் பெயர்ச்சிக்கு பிறகு நடப்பவை நல்லதாகவே அமையும்.
மிதுனம்
உடல்நிலையில் சிறு சிறு தொல்லைகள் நீடிக்கும். வீடு மாற்றத்திற்கான வாய்ப்பு இருந்தால் மாறிவிடுங்கள். வீட்டில் மங்கள ஓசை கேட்கப் போகிறது. பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
கடகம்
செவ்வாய் பெயர்ச்சிக்கு பிறகு நற்பலன் அதிகரித்து கெடுபலன் குறையும். நீங்கள் எதிர்பார்த்த களத்தில் வெற்றி கிடைக்கும். முக்கிய புள்ளிகளை சந்தித்து முன்னேற்றம் பெறுவீர்கள். மாதம் முழுக்க அனுமனை வழிபடுங்கள்.
சிம்மம்
செவ்வாய் பெயர்ச்சியானவுடன் எல்லா கவலைகளும் அடியோடு நீங்கப் போகிறது. லாபம், விரயம் இரண்டுமே இருக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மாதம் முழுக்க முருகப்பெருமானை வணங்கி பலன்களை பெறவும்.
கன்னி
பெரியளவிலான விரயத்தில் இருந்து மீள விழிப்புணர்ச்சி தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்கள், சொத்துகள் வாங்க பணம் செலவு செய்யுங்கள். ஆன்மிக பயணங்கள் அதிகரிக்கும்.
துலாம்
குருவின் பார்வையினால் தடைகற்கள் வெற்றிப் படிகளாக மாறும். அயல்நாடு கனவு நிறைவேறும். சுய தொழில் தொடங்க வாய்ப்புண்டு.
விருச்சிகம்
நல்ல செய்திகள் வந்து கொண்டே இருக்கும். தொழிலில் பலமடங்கு லாபம் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு பெருகும். ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். வராஹி வழிபாடு வளர்ச்சியை கொடுக்கும்.
தனுசு
குரு பார்வையால் திட்டமிட்ட காரியம் வெற்றிபெறும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி கிடைக்கும். சிவபெருமானை வழிபடுங்கள்.
மகரம்
குடும்பத்தில் பிரச்னைகள் அதிகரிக்கலாம். தொழில் விஷயத்தில் கூடுதல் விழிப்புடன் செயல்படுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய மாதம் இது.
கும்பம்
ஆடி உங்களுக்கு யோகம் அடிக்கும் மாதம். பயணங்கள் பலன் தரும். அலுவலகத்தில் அதிகாரிகளால் சலுகைகள் கிடைக்கும். சுப நிகழ்வுகள் வீட்டில் நடக்கலாம்.
மீனம்
குருவின் பார்வையால் எந்த தளத்திலும் வெற்றி காண்பீர்கள். இடம் வாங்க வாய்ப்புண்டு. பண வரவு அதிகரிக்கும். பிடித்தமான விஷயங்களை செய்து மகிழ்வீர்கள்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation