Valentines Day Hairstyle: காதலர் தினத்தில் இந்த 3 ஹேர் ஸ்டைலை பயன்படுத்தி உங்கள் துணை முன் அழகாகத் தெரியவும்

காதலர் தினத்தன்று உங்கள் ஆடைகளுக்குப் பொருந்தும் வகையில் ஒரு தனித்துவமான சிகை அலங்காரத்தை விரும்பினால், இந்த நவநாகரீக ஹேர் ஸ்டைல் செய்து உங்கள் துணை முன் அழகாகத் தெரியவும்.
image

இந்த வாரம் முழுவது காதலர் தினம் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்னும் சில நாட்களில் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் வரவிருக்கிறது. இந்த சிறப்பு நாளில் தம்பதிகள் வெளியே செல்வது அல்லது தங்கள் துணையுடன் இரவு உணவு சாப்பிடுவது என பல வகையில் திட்டமிட்டு இருப்பீர்கள். இந்த நிலையில் பெண்கள் எங்கும் செல்வதற்கு முன்பு தங்கள் தோற்றத்தை அழகுபடுத்துவது பற்றி அதிகம் சிந்தித்துக்கொண்டு இருப்பார்கள். உடைக்கு ஏற்ற சிகை அலங்காரத்தைத் தேர்ந்தெடுப்பது மிகப்பெரிய பணியாகும். எங்கும் செல்வதற்கு முன்பு நீங்களும் இதே போன்ற பிரச்சனையை எதிர்கொண்டால், இந்தக் கட்டுரை இன்று உங்களுக்கு உதவும்.

பல வகையான சிகை அலங்காரங்கள் உள்ளன, ஆனால் எந்த சிகை அலங்காரம் எந்த உடைக்கு பொருந்தும் என்பதுதான் மிகப்பெரிய குழப்பம். மேலும் வீட்டிலேயே ஒவ்வொரு சிகை அலங்காரத்தையும் நாமே உருவாக்க முடியாது. இந்தக் கட்டுரையில் சில எளிதான மற்றும் நவநாகரீக சிகை அலங்காரங்களை பற்றி பார்க்கலாம். உங்கள் காதலர் தின தோற்றத்துடன் நீங்கள் அழகாக தெரிவீர்கள்.

லூஸ் போனி டைலுடன் அழகிய பெண்ட்

உங்கள் உடையுடன் பொருந்தும் சில ஹேர்ஸ்டைல் செய்ய வேண்டும், அப்படி தெரியவிட்டால் விரைவாக உங்கள் தலைமுடியை பாதியாக சுருட்டி, தளர்வான போனிடெயில் ஹேர்ஸ்டைலை உருவாக்குங்கள். இப்போது உங்கள் உடையின் பொருந்தக்கூடிய அல்லது மாறுபட்ட நிறத்தின் டிசைன்கள் கொண்ட பெண்டை பயன்படுத்தலாம். உங்கள் எளிய தனித்துவமான ஹேர்ஸ்டைல் பார்க்க அழகாக தெரியும். இது குறுகிய ஆடைகளுக்கு மிகவும் அழகான தோற்றத்தை அளிக்கிறது.

Loose Pony with Bow Clip

மேல்புற பன் லுக்

உங்கள் துணையுடன் காதலர் தினத்தை கொண்டாட கவுன் அணிய திட்டமிட்டிருந்தால். உயரமான பன் தோற்றத்தை செய்து அழகுப்படுத்தலாம். நீங்கள் அதை எளிதாக உருவாக்க, சந்தையில் கிடைக்கும் பாப் கொண்டை அல்லது சிறிய காலர் உதவியுடன் டக் செய்யலாம். இந்த ஹேர்ஸ்டைல் உங்களுக்கு ஒரு கிளாசி லுக்கைத் தரும்.

High bun look

மெஸ்ஸி ஹேர் போனி

இன்றைய இளம் பெண்கள் இதை அதிகமாக ஸ்டைல் செய்கிறார்கள். நீங்கள் அதை எந்த வகையான உடையுடனும் இணைக்கலாம். இதற்காக, தலைமுடிக்கு கொஞ்சம் குழப்பமான தோற்றத்தைக் கொடுத்து உயரமான போனியை உருவாக்க வேண்டும். எந்த ஹேர் ஆபரணங்களாலும் அதை இன்னும் அழகாக மாற்றலாம்.

Messy Hair Pony

மேலும் படிக்க: ஒரே மாதத்தில் முடி வளர்ச்சியை காண தேங்காய் பாலை இப்படி ட்ரை பண்ணுங்கள் கண்டிப்பாக பலன் கிடைக்கும்

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP