ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை சீசன்களில் புத்தாடைகள் இன்றி முழுமையடையாது. அக்டோபர் மாதம் திருவிழாக்களின் கொண்டாட்டம் மட்டுமல்லாமல் ஒரு புதிய தொடக்கத்துடன் வருகிறது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி வரும் போது நாம் அடிக்கடி இந்த மாதத்திற்கான காலண்டர்களை மீண்டும் மீண்டும் புரட்டுகிறோம். அது நவராத்திரியாக இருந்தாலும் சரி ,தீபாவளியாக இருந்தாலும் சரி. அது ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக வருகிறது. தீபாவளியை நினைத்துப் பார்த்தாலும், வேடிக்கை மற்றும் இன்பம், சுவையான இனிப்புகள், விளக்குகள் மற்றும் வெடிகள் என உங்கள் விரல்களில் எண்ண முடியாத விஷயங்களைப் பற்றி சிந்திக்க வைக்கிறது, மேலும் இது மிகவும் முக்கியமானது ... புதிய ஆடைகள் ஏனென்றால், வண்ணமயமான ஆடைகளுடன் தீபாவளி முழுமையடையாது.
ஒவ்வொரு ஆண்டும் டிரெண்டுகள் மற்றும் ஸ்டைல்கள் புதிது புதிதாக வந்து கொண்டுதான் இருக்கின்றன, உங்கள் சேகரிப்பில் ஒரு தனித்துவமான தீபாவளி ஆடையைச் சேர்க்க வேண்டும் , ஏனென்றால் வரவிருக்கும் தீபாவளி நீங்கள் புத்தாடை உடுத்தும்போது அது அனைவரையும் திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு, அதிலும் குறிப்பாக, கல்லூரி செல்லும் டீனேஜ் பெண்கள் தங்கள் உடைகளை அழகாக சனியா கவனம் செலுத்துவார்கள். எனவே உங்களுக்காகவோ அல்லது உங்கள் குடும்பத்தினருக்காகவோ சரியான தீபாவளி ஆடையைக் கண்டறிய 2024 தீபாவளி டிரெண்டிங்கில் உள்ள டிசைன்களை இங்கு பார்க்கலாம்.
தீபாவளி லெஹங்கா

தீபாவளிக்கான லெஹெங்கா சோலியைப் பற்றி பார்க்கலாம். உங்கள் தீபாவளி ஸ்டைலில் சிறந்த தேர்வுகளில் ஒன்றாகும், ஏனெனில் இது ஒரு பாரம்பரிய உடை மட்டுமல்லாமல், தீபாவளிக்கு தயாராக டிரெண்டிங்கிலும் உள்ளது.
சில்க் சோளியுடன் அடர் பச்சை பட்டு லெஹங்கா
அடர் பச்சை பட்டு லெஹங்கா தீபாவளி அன்று உங்களை பொலிவாக கட்டும் மற்றும் மற்ற அனைவரிலும் இருந்து உங்களை தனித்துவமாக காட்டும்.
பட்டன்-டவுன் ஷர்ட்-லெஹெங்கா
வசதியான மற்றும் இந்தோ-வெஸ்டர்ன் தோற்றத்திற்காக இந்த தீபாவளி லெஹெங்காக்களை பட்டன்-டவுன் ஷர்ட்டுடன் நீங்கள் எப்போதும் அணியுங்கள்.
கம்பீரமான தீபாவளி சல்வார் கமீஸ்
சல்வார் கமீஸ் தீபாவளிக்கு அணிய சிறந்த ஆடை என்பதில் சந்தேகமில்லை, ஏனெனில் அதன் வசதியான தோற்றம் மற்றும் பண்டிகைகால ஸ்டைல்க்கு பொருத்தமாக இருக்கும், எனவே ஸ்டைலில் முடிந்தவரை வசதியாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. அனார்கலி உடைகள் , பேன்ட்கள் , பாட்டியாலா உடைகள் மற்றும் இது போன்ற பல்வேறு வடிவங்களில் இந்த தீபாவளி சல்வார் கமீஸ்களை உங்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் சேர்க்கவும் .
தீபாவளிக்கு ஏற்ற அனார்கலி
மயில் பச்சை நிறத்தில் சில்க் அனார்கலி சூட், ஒயின் கலர் சில்க் திருமண அனார்கலி சூட் வித் சர்தோசி வொர்க், ஆகியவை இந்த தீபாவளி ட்ரெண்டில் இடம் பெற்றுள்ளது.
பஞ்சாபி பாட்டியாலா சூட்
ஜரி வேலைப்பாடுகளுடன் கூடிய மஞ்சள் ஸ்லப் சில்க் பாகிஸ்தானி பாட்டியாலா சூட்,ரெட் பங்களாரி சில்க் கல்யாண பாட்டியாலா சூட் ரேஷம் வொர்க் அடங்கிய பஞ்சாபி பாட்டியாலா சூட் அனைவராலும் கவனம் ஈர்க்கபட்டுள்ளது.
சுடிதார்
ரேஷாம் வொர்க் கொண்ட ஸ்கார்லெட் ரெட் சுரிதார் சூட், பிஸ்தா கிரீன் ரா சில்க் சுரிதார் சூட் வித் ரேஷம் வொர்க், ஸ்கை ப்ளூ பெங்களூரி சில்க் பாகிஸ்தானி ஸ்ட்ரைட் பேண்ட் சூட், ஆஃப் ஒயிட் டஃபெட்டா சில்க் சிகரெட் பேன்ட் சூட், இவை அனைத்தும் காலேஜ் செல்லும் டீனேஜ் பெண்களுக்கு ஏற்ற 2024 தீபாவளி கலெக்செனில் உள்ளன.
மேலும் படிக்க:காஞ்சிபுரம் முதல் ஆர்கன்சா வரை; தீபாவளிக்கு டிரெண்டிங் பட்டுப்புடவைகள் இவை தான்!
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள மேலும், இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் - HerZindagi Tamil
image source: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation