இனிப்புகளோடு வண்ணங்களையும் வான வேடிக்கையாக வெடித்து கொண்டாடும் இனிய திருநாளாக தீபாவளி அமைகிறது. இதுவரை வாழ்க்கையில் அடைந்த துன்பங்களையெல்லாம் மறந்து மகிழ்ச்சி பெருக செய்யும் தீபாவளி திருநாளுக்கு பெண்கள் சரியான ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் முனைப்புடன் செயல்படுவார்கள். பட்ஜெட்டிலும் இருக்க வேண்டும், அதே சமயம் டிரெண்டிங்கிலும் சேலைகள் அமைய வேண்டும் என்ற மனநிலை பெண்களுக்கு அதிகளவில் இருக்கும். இந்த கவலையைப் போக்கவே இந்தாண்டு தீபாவளிக்கு பெண்களுக்குப் பிரத்யேகமாக பட்டுப்புடவைகள் சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. பட்டுப்புடவைகளை வாங்க நினைக்கும் பெண்களே கொஞ்சம் இதை வாசித்துப் போங்க. அந்தளவிற்கு இளசுகளைக் கூட கவரும் வகையில் பல அசத்தலான பட்டுப்புடவைகள் டிரெண்டிங்கில் உள்ளது. அந்த பட்டியல் உங்களுக்காக..
மேலும் படிக்க:தீபாவளிக்கு பெண்களைக் கவரும் டிரெண்டிங் சேலைகளின் லிஸ்ட்
தீபாளிக்கு அசத்தலான பட்டுப்புடவைகளின் லிஸ்ட்:
தீபாவளிக்கு சரியான ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் சேலைகள் எப்போதுமே முதலிடம் பிடிக்கின்றன.. என்ன தான் பட்டாசுகள் மற்றும் இனிப்புகளுடன் தீபாவளியைக் கொண்டாடினாலும் வழிபாடுகளும் வீட்டில் மேற்கொள்ளப்படும் என்பதால் அந்த நேரத்தில் புடவைகள் கட்ட வேண்டும் என்ற மனநிலையைப் பெண்கள் பெற்றுவிடுகின்றனர். இதற்கு சிறந்த தேர்வாகவும் எப்போதும் முதலிடத்தில் இருப்பது காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள்.
காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள்:
தங்க ஜரிகைக் கொண்டு முழுவதுமாக கைத்தறியினால் நெய்யப்படும் காஞ்சிபுரம் புடவைகளுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கும் பட்டுப்புடவைகளில் முக்கியமானது. தூய மல்பெரி பட்டு மற்றும் தங்க ஜரிகைக் கொண்டு நெய்யப்படும் இந்த புடவைகள் ஆடம்பரமாக இருக்கும். குறிப்பாக இன்றைய பெண்களுக்கு ஏற்றவாறு வெயிட் குறைவாகவும் பட்டுப்புடவைகள் சந்தைகளில் விற்பனையாகிறது. இக்காலத்துப் பெண்கள் பார்டர் பெரியதாகவும், கான்ட்ஸ்ராஸ்ட் கலரிலும் கேட்பதற்கு ஏற்றவாறு பட்டுப்புடவைகள் நெசவு செய்யப்பட்டு இந்த தீபாவளிக்கு விற்பனையில் உள்ளது. காஞ்சிபுரம் தான் வாங்க செல்ல வேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு ஊரில் காஞ்சிபுரம் சேலைகள் வாங்குவதற்கு ஏற்ற இடங்கள் உள்ளது. மேலும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கலாம்.
பாரம்பரிய தங்க ஜரி காஞ்சிபுரம் புடவை, பாஸ்டல் (வெளிர்) காஞ்சிபுரம் புடவைகள்,டூயல் டோன் காஞ்சிபுரம் புடவைகள், தூய வெள்ளி ஜரி காஞ்சிபுரம் சேலை, வெள்ளி மற்றும் தங்க திசு காஞ்சிபுரம் பட்டு சேலை,பீச் ஆரஞ்சு கோயில் பார்டர் தூய காஞ்சிபுரம் பட்டுப் புடவை, மாறுபட்ட டிசைன்களுடன் கூட ப்ளவுஸ்களுடன் மாடர்ன் காஞ்சிபுரம் புடவைகள் என பல வெரைட்டிகளுடன் காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள் சந்தைகளில் விற்பனையாகிறது.
பனாரசி பட்டுப்புடவைகள்:
பெண்களுக்கு பராம்பரியத்தோடு ஸ்டைல்லாக தெரியும் பட்டுப்புடவைகளில் ஒன்று பனாரசி பட்டுப்புடவைகள். இந்த புடவைகள் அனைத்து பனாரஸ் பட்டுத்துணியால் நெய்யப்பட்டு பார்ப்பதற்கு அழகாக வடிவமைப்புடன் தெரியும். இந்த தீபாவளிக்கு அசத்தலான பட்டுப்புடவைகள் வாங்க வேண்டும் என்று நினைத்தால் பனாரசி பட்டுப்புடவைகளை நீங்கள் தேர்வு செய்யலாம். பண்டிகைக்கு ஏற்ற சேலைகளில் இதுவும் ஒன்று.
சாந்தேரி புடவைகள்:
நேர்த்தியான மற்றும் இலகுரக சேலைகளை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சாந்தேரி புடவைகளைத் தேர்வு செய்யலாம். இயற்கையால் ஈர்க்கப்பட்ட நுட்பமான வடிவமைப்புகளுடன் வரக்கூடிய இந்த புடவைகள் இக்காலத்து பெண்களுக்கு ஏற்றதாகவும் அமைகிறது. வட இந்தியாவில் மிகவும் பிரசித்திப் பெற்ற இந்த புடவைகள் தற்போது அனைத்து பகுதிகளில் பெண்களின் விருப்பமான ஒன்றாக உள்ளது.
ஆர்கன்சா பட்டுப்புடவைகள்:
குறைந்த எடையுடன் பெண்கள் விரும்பி வாங்கும் சேலைகளில் ஒன்றாக உள்ளது ஆர்கன்சா பட்டுப்புடவைகள். அனைத்து பார்டிகளுக்கு ஏற்றவாறு அமைந்துள்ள இந்த சேலைகள் பராம்பரியத்தின் அழகை நவீன நேர்த்தியுடன் கொண்டு வருகின்றன. வீட்டில் நடக்கு அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் ஈஸியாக அணிந்துக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது ஆர்கன்சா பட்டுப்புடவைகள்.
மேலும் படிக்க: பண்டிகைக் காலங்களில் உங்கள் கூந்தலை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது எப்படி?
வாழை நார் புடவைகள்:
பெண்களின் விருப்பமான தேர்வுகளில் சமீப காலங்களாக டிரெண்டிங்கில் உள்ளது வாழை நாட்டு பட்டு சேலைகள். வாழை நாரை நேர்த்தியாக பிரித்தெடுத்து செய்யப்படுகிறது இந்த புடவைகள். மிகவும் லேசாகவும் வெயில் மற்றும் மழை என எந்த பருவக்காலத்திற்கும் ஏற்ற வகையில் இந்த புடவைகள் உள்ளது. கல்லூரி பெண்கள் முதல் வீட்டில் இருக்கும் பெண்கள் வரை இந்த புடவைகளை அதிகளவில் விரும்பி வாங்குகின்றனர். அதற்கேற்ப தற்போது ஆன்லைன் வாயிலாகவும் வாழைநார் பட்டுப்புடவைகள் விற்பனையாகிறது.
மேலும் படிக்க:தீபாவளி பண்டிகைக்குள் இயற்கையான பளபளப்பை பெற இதெல்லாம் செய்யுங்கள்!
Image Source - Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation