நாம் தினசரி அணியும் ஆடைகளில் நாம் அழகாக தெரிய வேண்டும் என்பது பல பெண்களுக்கும் ஆசை. பெண்கள் அதிகமான உயரம் மற்றும் மெல்லிய தோற்றம் பெறுவதற்கு அவர்கள் அணியும் ஆடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சரியான ஆடைத் தேர்வு உங்கள் உடல் வடிவத்தை மேம்படுத்தி, உங்களை உயரமாகவும் மெலிதாகவும் தோற்றம் அளிக்க உதவும். அந்த வரிசையில் உயரம் கம்மியாக இருக்கும் பெண்கள் மற்றும் எடை அதிகம் உள்ள பெண்கள் எந்த வித ஆடைகள் அணிந்தால் உயரமாகவும் மெலிதாகவும் தோன்றுவார்கள் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ஒற்றை நிற ஆடைகள்:
ஒற்றை நிற ஆடைகள் உங்கள் உடலை நீண்டதாகக் காட்டும். குறிப்பாக கருப்பு, நீலம் போன்ற நிறங்கள் உங்களுக்கு மெல்லிய தோற்றத்தைத் தரும். மேல் மற்றும் கீழ் ஆடைகளை ஒரே நிறத்தில் அணிவது உயரம் கூடுதலாகத் தோன்ற உதவும். அதாவது சுடிதார் டாப் கருப்பு நிறத்தில் இருந்தால் பேண்ட் கூட கருப்பு நிறத்தில் அணிய வேண்டும்.
உயரமான கால் பேண்ட் அணியவும்:
உயரமான கால் பேண்ட் அல்லது ஸ்கர்ட் அணிவது உங்கள் கால்களை நீண்டதாகக் காட்டும். இது இடுப்புப் பகுதியை சிறப்பாக வடிவமைத்து, உடலை சமநிலைப்படுத்தும். இதனால் நீங்கள் மெலிதாக தெரிவீர்கள்.
செங்குத்து வரிகளுடைய ஆடைகளைத் தேர்வு செய்யவும்:
செங்குத்து வரிகள் (Vertical Stripes) கொண்ட ஆடைகள் உங்கள் உயரத்தைக் கூட்டும் தோற்றத்தைத் தரும். செங்குத்து வரிகளுடைய புடவைகள், குர்த்தாக்கள் அல்லது டிரஸ்கள் அணியலாம். குறிப்பாக டார்க் நிறங்கள் தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.
ஃபிட் ஆகவும், சரியான அளவிலான ஆடைகளை அணியவும்:
மிகவும் இறுக்கமான அல்லது மிகவும் தளர்வான ஆடைகள் அணியும் போது அது உங்கள் உடல் வடிவத்தை மறைக்காது. இறுக்கமான ஆடைகள் அணிந்தால் நீங்கள் இன்னும் குண்டாக தோற்றம் அளிப்பீர்கள். சரியான ஃபிட் உள்ள ஆடைகள் உடலை சீராகக் காட்டி, மெல்லிய தோற்றத்தைத் தரும்.
V-நெக்லைன் மற்றும் நீண்ட நெக்லைன் ஆடைகள்:
V-நெக்லைன் அல்லது நீண்ட நெக்லைன் உள்ள ஆடைகள் கழுத்தை நீண்டதாகக் காட்டி, உங்களுக்கு உயரமான தோற்றத்தைத் தரும். இது முகத்தையும் மெலியதாகக் காட்டும். எனவே u நெக் ஆடைகளை தவிர்த்து இனி v நெக் ஆடைகளை அணிந்து பாருங்கள்.
உயரமான ஹீல்ஸ் அணியலாம்:
சாதாரண பிளாட் செருப்புக்கள் அணிவதற்கு பதிலாக உயரமான ஹீல்ஸ் அல்லது வெட்ஜஸ் ஷூக்கள் கால்களை நீட்டிக் காட்டி உயரத்தை அதிகரிக்கும். நீண்ட கால்கள் உங்கள் உடலை மெலிதாகவும் உயரமாகவும் தோன்றச் செய்யும்.
மோனோக்ரோம் லுக்:
மேல் மற்றும் கீழ் ஆடைகளை (பேண்ட் மற்றும் டாப்) ஒரே நிறத்தில் அணிவது உடலை ஒற்றுமையாகக் காட்டும். இது உங்கள் உயரத்தை அதிகரிக்கும் ஒரு எளிய டிரெஸ்ஸிங் டிப்ஸ்.
மேலும் படிக்க: லெகின்ஸ் அணியும்போது தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள் என்ன? இதை தெரிஞ்சிக்கோங்க
லேயர் செய்வதைத் தவிர்க்கவும்:
முதலில் ஒரு டாப் அணிந்து அதற்கு மேல் சட்டை அல்லது ஜாக்கெட் அணிவது லேயர் செய்வது என்று கூறப்படுகிறது. அதிக லேயர்கள் உடலை கனமாகக் காட்டும். எனவே, மெலிதான தோற்றத்திற்கு எளிய மற்றும் சிம்பிள் ஆடைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
சரியான ஆடைத் தேர்வு உங்கள் தோற்றத்தை மாற்றும். மேலே கூறியுள்ள இந்த பேஷன் டிப்ஸ்களைப் பின்பற்றி, நீங்கள் உயரமாகவும் மெலிதாகவும் தோற்றமளிக்கலாம். பெண்கள் ஆடை, நிறம் மற்றும் ஃபிட் ஆகியவற்றை கவனமாகத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.
Image source: googl
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation