herzindagi
image

பெண்கள் கவனத்திற்கு: லெகின்ஸ் அணியும்போது தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள் என்ன? இதை தெரிஞ்சிக்கோங்க

பெண்கள் அனைவருக்கும் சவுகரியமாக இருக்கும் ஒரு ட்ரெஸ் தான் இந்த லெகின்ஸ். அந்த வரிசையில் நீங்கள் லெகின்ஸ் அணியும்போது தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம். 
Editorial
Updated:- 2025-06-23, 22:39 IST

இன்றைய நவீன காலத்தில் பெண்களுக்கு லெகின்ஸ் அணிவது வசதியான மற்றும் ஸ்டைலிஷ் ஆக இருக்கிறது. ஆனால் ஒரு சில தவறுகள் உங்கள் லுக்கை கெடுத்துவிடும் அல்லது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். உங்களை மிகவும் அழகாக காட்டுவது நீங்கள் அணியும் ட்ரெஸ் தான். இந்த நிலையில் பெண்கள் தாங்கள் அணியும் ட்ரெஸ்களை தேர்வு செய்யும்போது அவர்களது உடல் எடை, உயரம் போன்றவற்றை கருத்தில் கொண்டு தேர்வு செய்ய வேண்டும். அப்படி அனைவருக்கும் சவுகரியமாக இருக்கும் ஒரு ட்ரெஸ் தான் இந்த லெகின்ஸ். அந்த வரிசையில் நீங்கள் லெகின்ஸ் அணியும்போது தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.  

மிகவும் இறுக்கமான லெகின்ஸ் அணியாதீர்கள்:


லெகின்ஸ் அணியும்போது அது மிகவும் டைட் ஆக இருந்தால், உடலில் ரத்த ஓட்டத்தை பாதிக்கும். குறிப்பாக, வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு, செரிமான பிரச்சனைகள், வாயு, மற்றும் தோல் எரிச்சல் ஏற்படலாம். எனவே, உடலுக்கு ஏற்ற வசதியான அளவு கொண்ட லெகின்ஸை தேர்ந்தெடுக்கவும்.

Untitled-design-1

தவறான உள்ளாடை தேர்வு செய்யாதீர்கள்:


லெகின்ஸ் அணியும்போது தவறான உள்ளாடை அணிவது வெளியே தெரியும் லைன்களை உருவாக்கும். மேலும், தொடை பகுதியில் உராய்வு ஏற்பட்டு, தோல் பிரச்சனைகள் வரலாம். எனவே, ஸீம்லெஸ் அல்லது லேசான உள்ளாடைகளை தேர்வு செய்யவும்.


நீண்ட நேரம் ஒரே லெகின்ஸ் அணியாதீர்கள்:


லெகின்ஸை நாள் முழுக்க அணிந்திருந்தால், பாக்டீரியா வளர்ச்சி அதிகரிக்கும். இது தோல் அரிப்பு, சிரங்கு, அல்லது ஈஸ்ட் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, 8-10 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து அணியாமல், மாற்றி அணியவும்.

190328183659-women-leggins

தவறான டாப் அல்லது ஷூ தேர்வு செய்யாதீர்கள்:


லெகின்ஸ் எல்லா விதமான டாப் மற்றும் ஷூவுடனும் பொருந்தாது. உதாரணமாக லெகின்ஸ் உடன் ஷார்ட் டாப் அணிவது வயிற்றுப் பகுதியை முழுவதும் காட்டும். அதே போல ஃபிளாட் ஷூஸ் அணிவது உங்கள் கால் தோற்றத்தை குறைக்கும். எனவே ஒவர்சைஸ்ட் அல்லது ஸ்னீகர்ஸ் போன்றவற்றுடன் லெகின்ஸை காம்பினேஷன் செய்யவும்.


பொருத்தமற்ற சந்தர்ப்பங்களில் அணியாதீர்கள்:


லெகின்ஸ் எல்லா இடங்களுக்கும் பொருத்தமானது அல்ல. உதாரணமாக அலுவலகம் அல்லது ஃபார்மல் நிகழ்ச்சிக்கு லெகின்ஸுக்கு பதிலாக ஃபார்மல் பேண்ட்ஸ் அணியவும். மேலும் வெயில் காலத்தில் மிகவும் தடிமனான லெகின்ஸ் உங்கள் உடலில் வியர்வையை அதிகரிக்கும். எனவே, சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல் லெகின்ஸை தேர்வு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க: உங்கள் அழகிற்கு அழகு சேர்க்கும் 7 ஸ்டைலிஷ் அனார்கலி டிசைன்கள்

அந்த வரிசையில் லெகின்ஸ் அணிவது எளிது மற்றும் ஸ்டைலிஷ், ஆனால் நீங்கள் சில விதிகளை பின்பற்றுவது  முக்கியம். மிகவும் இறுக்கமான லெகின்ஸ், தவறான உள்ளாடை , நீண்ட நேரம் அணிதல், தவறான ஸ்டைலிங் மற்றும் பொருத்தமற்ற சந்தர்ப்பங்களில் அணிவது போன்றவற்றை தவிர்க்கவும். குறிப்பாக உங்கள் லெகின்ஸை வாரத்திற்கு 2-3 முறை மட்டுமே அணிந்து, அடிக்கடி துவைத்து, தோல் பிரச்சனைகள் வராமல் தவிர்க்கவும். இதை பின்பற்றினால் நீங்கள் ஆரோக்கியமாகவும் ஸ்டைலிஷாகவும் இருக்கலாம். 

Image source: google

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]