Pongal Pot Collection 2024: தைத்திருநாளும் புகழ்பெற்ற கும்பகோணம் பித்தளை பாத்திரங்களும்!

கும்பகோணம் என்றாலே வெற்றிலை, ஐம்பொன் சிலைகள் மற்றும் கோவில்களுக்கு மட்டுமில்லை தாராசுரம் பித்தளை பாத்திரங்களுக்கும் புகழ்பெற்றது.

Thai pongal pot designs

“தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பார்த்து சொல்லடியோ, ....போடா எல்லாம் விட்டு தள்ளு பழச எல்லாம் விட்டு தள்ளு” என்ற பாடல்கள் தான் தை திருநாள் ஆரம்பித்தாலே நமது காதுகளை இனிமையாக்கும். இவற்றைக் கேட்டாலே நம்மை அறியாமலே மகிழ்ச்சியில் மனம் துள்ளிக் குதிக்கும். இந்த சந்தோஷத்தோடு நம்முடைய உழவர் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை ஒவ்வொருவரும் மேற்கொள்ளுவோம். இதில் முக்கியமான ஒன்று தான் பொங்கல் வைப்பதற்காக வாங்கப்படும் பானைகள்.

pongal

முன்பெல்லாம் நாம் மண்பானைகளில் தான் பொங்கல் வைப்போம். ஆனால் இன்றைக்கு அனைவராலும் பின்பற்ற முடியவில்லை. சிலர் மட்டுமே அதைப் பின்பற்றி வருகின்றோம்.. அதே சமயம் இதற்கு மாற்றாக பித்தளை பானைகள் தான் பொங்கலில் பிரதானமாக அமைகிறது. புதுமணத்தம்பதிகளுக்கு தாய் வீட்டு பொங்கல் சீர் கொடுப்பதற்காக மற்றும் வீடுகளில் பொங்கல் வைப்பதற்காக ஆர்வத்துடன் பித்தளை பானைகள் வாங்குவதைப் பார்த்திருப்போம். இதற்காக உங்களது ஊர்களில் பொங்கல் பித்தளை பாத்திரங்கள் விற்பனை செய்யப்படும். இருந்தாலும் நாம் புகழ்பெற்ற கும்பகோணம் பித்தளை பானைகள் மற்றும் அவற்றின் சிறப்புகள் குறித்து தற்போது அறிந்துக் கொள்வோம்.

கும்பகோண பித்தளை பாத்திரங்கள்:

கும்பகோணம் என்றாலே வெற்றிலை, ஐம்பொன் சிலைகள் மற்றும் கோவில்களுக்கு மட்டுமில்லை தாராசுரம் பித்தளை பாத்திரங்களுக்கும் புகழ்பெற்றது.. தலைமுறை தலைமுறையாக கும்பகோணத்தில் தாராசுரம், நாச்சியார் கோவில், எலுமிச்சங்காபாளையம், சுவாமிமலை, மாங்குடி, திருநாகேஸ்வரம், அண்ணலக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 700 குடும்பங்கள் பித்தளைப் பாத்திரங்களைத் தயார் செய்து வருகின்றனர். விதவிதமான டிசைகளில் , நல்ல தரத்துடன் செய்யப்படும் இந்த பித்தளை பாத்திரங்கள் தான் பொங்கலில் தனிச்சிறப்பு. தமிழகத்தின் பல இடங்களில் பித்தளைப் பாத்திரங்கள் விற்பனை செய்தாலும் இந்த கும்பகோணம் தாராசுரம் பாத்திரத்திற்கென்று தனி மவுசு உள்ளது. தமிழகம் முழுவதும் இந்த பானைகள் விற்பனைக்குகொண்டு வரப்பட்டாலும், தஞ்சை, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், உள்ளிட்ட பல சோழ நாடுகளில் மிகவும் புகழ்பெற்றதாக விளங்குகிறது.

kumbakonam vessels

உழவர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் தை திருநாளை முன்னிட்டு, ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே பானைகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். குறிப்பாக புதுமணத் தம்பதிகளுக்கு தாய் வீட்டிலிருந்து பொங்கல் சீர் கொடுப்பது ஐதீகம் என்பதால் விதவிதமான மற்றும் புதிய டிசைன்களில் வரக்கூடிய பானைகளை வாங்குவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. முன்னதாக இந்த பானைகள் தயாரிக்கப்பட்டிருந்தாலும், பொங்கல் பண்டிகைக்காக இரவு,பகல் பாராமல் தயாரிப்புப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிங்க :போகிப்பண்டிகை குறித்த சுவாரஸ்சிய வரலாறு!

பொங்கலுக்கு இன்னமும் 10 நாள்கள் உள்ள நிலையில், அடுத்த வாரம் முதல் பொங்கல் பானை விற்பனை படுஜோராக இருக்கும். நீங்களும் இந்த தைத்திருநாளில் இந்த கும்பகோணத்து பொங்கல் பானை வாங்கி மகிழ்ச்சியோடு கொண்டாட மறந்துவிடாதீர்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP